சோர்ந்து போன முகத்தை இன்ஸ்டன்டா மலரச் செய்யனுமா? சூப்பர் ஐடியா !!

Written By:
Subscribe to Boldsky

ஏதாவது ஃபங்ஷன் , கல்யாணம் என்றபோதுதான் வேலைகளால் முகம் அலுத்து சோர்வாக இருக்கும். அன்றைக்கென்று பார்த்து பளிச்சென்று இருக்காது. முகம் கறுத்து கண்கள் களையிழந்து இருக்கும்.

How to get rid of tired face with instant remedies

அந்த சமயத்தில் உடனடியாக ஏதாவது பண்ணலாமானு யோசனை இருக்கும். உடனடியாக பலன் தரும் இன்ஸ்டென்ட் குறிப்புகள்தான் பெஸ்ட் என்று தெரிந்தாலும் எதை தெர்ந்தெடுப்பது என குழப்பம் ஏற்படலாம்.

உங்களுக்ககவே இங்கே பல் பலன் தரும் குற்ப்புகள் தரப்பட்டுள்ளது . உங்க முகத்திற்கு பொலிவு தரும் திடீர் குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விட்டமின் மாத்திரை:

விட்டமின் மாத்திரை:

ஒரு வைட்டமின் ஈ மாதிரையில் இருக்கும் எண்ணெயை எடுத்து அதில் 1 ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ஓட்ஸ் ஆகியவைகளை கலந்து முகத்தில் தேய்த்தால் முகம் மின்னும். சுருக்கங்கள் மறைந்து ஃப்ரஷாக காண்பீர்கள்.

கடலை மாவு மற்றும் தக்காளி :

கடலை மாவு மற்றும் தக்காளி :

வெளியே போய்விட்டோ, பயணம் போய்விட்டோ வீடு திரும்பும்போது ஒரு தேக்கரண்டி கோதுமை மாவோ அல்லது கடலை மாவோ எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தக்காளி கூழ் சேர்த்து குழைத்து முகத்தில் பூசுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள்.

வெள்ளைக் கரு மற்றும் தேன் :

வெள்ளைக் கரு மற்றும் தேன் :

முட்டை வெள்ளைக் கரு இரண்டு தேக்கரண்டி, அரை தேக்கரண்டி தேன், கால் தேக்கரண்டி எலுமிச்சை சாறு போன்றவைகளை கலந்தும் முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவி நீக்குங்கள். இவ்வாறு செய்தால் முகத்தில் தென்படும் சோர்வு நீங்கிவிடும்.

கோதுமை மாவு மற்றும் எலுமிச்சை சாறு :

கோதுமை மாவு மற்றும் எலுமிச்சை சாறு :

ஒரு ஸ்பூன் கோதுமை மாவில் சிறிது சர்க்கரை, சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று மாற்றும்.

பால் மற்றும் ஐஸ் கட்டி :

பால் மற்றும் ஐஸ் கட்டி :

பாலில் ஐஸ் கட்டியை நனைத்து இமைகளின் மேல் மென்மையாக மசாஜ் செய்யலாம். பன்னீரில் பஞ்சை முக்கி, கண்களை மூடிக்கொண்டு கண்களின் மீது வைத்தாலும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get rid of tired face with instant remedies

Tips to get rid of tired face with instant remedies
Story first published: Friday, May 19, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter