For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தில் நிறம் பெற உதவும் சூப்பர் குறிப்புகள் !!

சருமத்தில் உண்டாகும் கருமை, கரும்புள்ளி, கருந்திட்டு ஆகியவை மறைந்து இயற்கையான நிறம் கிடைக்க இங்கே குறிப்புகல் கொடுக்கப்பட்டுள்ளன.

|

சரும நிறம் எதுவாக இருந்தால் அதனை ஏற்பது முதிர்ச்சிதான். அதனை மாற்ற முயல்வது தவறு. இந்தியர்களின் சராசரியான நிறம் மா நிறம்தான். ஆனால் அதன் பொலிவு மங்கி, நிறம் மாறுபடுவதற்கு காரணம் நிறைய இருக்கலாம்.

எதுவாக இருந்தாலும் உங்களின் சிறு வயது நிறம் உங்களுக்கு மீண்டும் கிடக்க வேண்டுமென்றால் இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வேப்பங்கொழுந்து :

வேப்பங்கொழுந்து :

வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் பொடி, கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது பால் கலந்து முகத்தில் மாஸ்க் போல் பொடவும். வாரம் இருமுறை செய்தால் முகம் நிறம் பெறும்.

பப்பாளி :

பப்பாளி :

பப்பாளிப்பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும். முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

முள்ளங்கி :

முள்ளங்கி :

1 ஸ்பூன் முள்ளங்கி சாற்றுடன் 2 ஸ்பூன் மோர் சேர்த்து, முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் கருமை மறைந்து முகம் நிறம் பெறும்.

பார்லி பொடி :

பார்லி பொடி :

பார்லி பவுடரையும் மஞ்சள் தூளையும் 4:1 என்ற விகிதத்தில் நல்லெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் பூசி 20 நிமிடம் ஊறிய பின் தேய்த்து குளித்தால் இறந்த செல்கள் அழுக்குகல் அகன்று சருமத்தில் மென்மை மற்றும் பளபளப்பு கூடும்.

 ஆரஞ்சு முல்தானி பேக்

ஆரஞ்சு முல்தானி பேக்

ஆரஞ்சு ஜூஸ், முல்தானி மட்டி ஸ்பூன் மற்றும் சந்தனம் ஆகியவ்ற்றை சம அளவு எடுத்து அவருடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஃபேஷியல் பேக்காக போட்டு 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get fairness at home

Simple and effective home remedies to get fair glowing skin at home.
Story first published: Thursday, February 23, 2017, 16:12 [IST]
Desktop Bottom Promotion