வெயிலில் எவ்வளவு சுற்றினாலும் முகம் பளிச்சென்று இருக்க வேண்டுமா? இத தினமும் செய்யுங்க போதும்!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக முகத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள கடைகளில் விற்கப்படும் செயற்கை அல்லது இரசாயன பொருட்களைப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த பொருட்களைப் பயன்படுத்தினால், சருமத்தின் ஆரோக்கியம் பாழாகி விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறக்கூடும்.

Homemade Cleansers To Pamper Your Skin In Summer Season

முகத்தில் உள்ள அழுக்கை போக்கி, உடனடி பொலிவைத் தரும் ஒரு அழகு பராமரிப்பு பொருள் தான் கிளின்சர். ஆனால் வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை கிளின்சராகப் பயன்படுத்தலாம். மேலும் நேச்சுரல் கிளின்சரின் மூலம் எவ்வித பக்க விளைவும் இருக்காது மற்றும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கு கோடை வெயிலிலும் முகத்தை பிரகாசமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள உதவும் சில நேச்சுரல் கிளின்சர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பயன்படுத்தி, முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

நம் வீட்டு சமையலறையில் உள்ள பாலை விட சிறந்த கிளின்சர் வேறு எதுவும் இருக்க முடியாது. தினமும் பஞ்சுருண்டையைப் பயன்படுத்தி பாலை முகத்திற்கு தடவி 20 நிமிடம் கழித்து, நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி தினமும் 2 வேளை செய்து வந்தால், முகம் பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள சீடர் வினிகர் சருமத்தின் pH அளவைப் பராமரிக்கவும், சருமத்தில் வெடிப்புகள் ஏற்படாமலும் தடுக்கும். முக்கியமாக இது முகப்பருவைப் போக்க உதவும். இந்த ஆப்பிள் சீடரை எப்படி கிளின்சராகப் பயன்படுத்துவது என்று கேட்கலாம். அதற்கு 1 கப் ஆப்பிள் சீடர் வினிகருடன், ஒரு பகுதி தண்ணீர் சேர்த்து கலந்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, தினமும் காலையிலும் மாலையிலும் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.

தேங்காய் பால்

தேங்காய் பால்

ஒரு கப் தேங்காய் பாலுடன் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதோடு, 1 ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து சிறிது நேரம் கழித்து, சுத்தமான நீராலும் துடைத்து எடுக்க வேண்டும்.

தேன் மற்றும் எலுமிச்சை

தேன் மற்றும் எலுமிச்சை

2 ஸ்பூன் தேனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதோடு, சருமத்தின் ஈரப்பசையும் தக்க வைக்கப்படும்.

தயிர் மற்றும் கற்றாழை

தயிர் மற்றும் கற்றாழை

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் ப்ளீச்சிங் தன்மையைக் கொண்டது. அதோடு கற்றாழையில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மை ஏராளமாக உள்ளது. இது சருமத்தில் உள்ள பருக்களைப் போக்கி, சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ஆகவே தயிருடன் சிறிது கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.

அன்னாசி

அன்னாசி

3:1 என்ற விகிதத்தில் அன்னாசி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை எடுத்து ஒன்றாக கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து, சிறிது நேரம் கழித்து சுத்தமான நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகம் உடனடி பிரகாசத்தையும், புத்துணர்ச்சியையும் பெறும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

1/2 கப் ஆலிவ் ஆயிலுடன், 1/4 கப் ஆப்பிள் சீடர் வினிகர், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பின் தினமும் அந்த கலவையை பஞ்சுருண்டைப் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும்.

பப்பாளி ஜூஸ்

பப்பாளி ஜூஸ்

1/2 கப் பப்பாளி ஜூஸ் உடன், 1/4 கப் ஆப்பிள் ஜூஸ், 1 ஸ்பூன் கற்றாழை ஜெல், 1/2 கப் நீர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி சேகரித்து, பின் தினமும் பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். இந்த கிளின்சர் வறட்சியான சருமத்தினருக்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade Cleansers To Pamper Your Skin In Summer Season

Check out for some homemade cleansers that can help to pamper your skin this summer season. Try them out now.