முகத்தில் சுருக்கம் ஆரம்பிக்குதா? இதெல்லாம் செஞ்சா மீண்டும் 16 தான்!!

Written By:
Subscribe to Boldsky

முகத்தில் சுருக்கங்கள் ஆரம்பிக்கும் வயது 30. அந்த வயதில் நீங்கள் அக்கறையாக கவனம் கொண்டால் பின் இன்னும் 20 வருடத்திற்கு சுருக்கம் வராமல் பாதுகாக்கலாம்.

கண்ட க்ரீம்களுக்கு 30 வயதிற்கு பின் குட்பை சொல்லிடுங்கள். எப்போதாவது விசேஷம் என்றால் மேக்கப் போடலம. தினமும் போடுவதை கட்டாயம் தவிர்த்திடுங்கள். மேலும் உங்களுக்கு ஏற்கனவே முகச்சுருக்கங்கள் இருந்தாலும் எளிதில் குணமாக இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் உங்களுக்கு உதவுகிறதா என பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முட்டை கோஸ்:

முட்டை கோஸ்:

கோசு இலைகளின் சாற்றை எடுத்து அத்துடன் ஈஸ்டை கலந்து ஒரு ஸ்பூன் தேன் போட்டு நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து அதை முகத்தில் தடவி ஒரு 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள்.

வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் :

வாழைப்பழம் மற்றும் ரோஸ் வாட்டர் :

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெது வெதுப்பான நீரில் முகத்தை அலம்பவும். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.

கிளிசரின் மற்றும் தேன் :

கிளிசரின் மற்றும் தேன் :

கிளிசரினும், தேனும் கலந்து ரிங்கிள்ஸ் இருக்கும் இடத்தில் தடவி, கொஞ்ச நேரம் மசாஜ செய்து இரவு பூராவும் விட்டு விட்டு காலையில் அலம்பவும். முகம் இளமையும், வசீகரமும் ஆகமாறும்.

 கேரட் சாறு மற்றும் வேப்பிலை :

கேரட் சாறு மற்றும் வேப்பிலை :

ஒரு ஸ்பூன் தேனில் கால் ஸ்பூன் காரட் சாறு மற்றும் வேப்பிலை சாறினை கலக்கவும். கலக்கவும். அதை கழுத்தை சுற்றிலும் முகத்திலும் போட்டு ஒரு 15-20 நிமிடம் அப்படியே காயவிட்டு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒருமுறை செய்தால் நல்ல பலன்கிடைக்கும்.

சாத்துக்குடி மற்றும் தேன் :

சாத்துக்குடி மற்றும் தேன் :

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்திற்கு நல்ல திக் ஆக பூசி 20 நிமிடம் கழித்து அலம்பி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்.

பப்பாளி மற்றும் பால் :

பப்பாளி மற்றும் பால் :

பப்பாளிப்பழ சாற்றுடன் காய்ச்சாத சாதாரண பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட்போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போ

துளசி மற்றும் தேன் ;

துளசி மற்றும் தேன் ;

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Granny remedies to prevent wrinkles on your face

Granny remedies to prevent wrinkles on your face
Story first published: Friday, April 21, 2017, 8:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter