உங்களுக்கு எந்த மாதிரியான சருமம்? அதுக்கேத்த மாதிரி எப்படியான க்ளென்சர் தயாரிக்கனும்னு தெரியுமா?

Written By: Bala Karthik
Subscribe to Boldsky

க்ளென்சரை தேர்ந்தெடுக்கும்பொழுது, உங்கள் மனதில் உதிக்கும் ஒரு கேள்வி என்னவென்றால்...'என்னுடைய சருமத்திற்கு இது ஏற்றதா?' என்பதே. அவரவர் சருமத்திற்கு ஏற்றவாறு க்ளென்சரை உபயோகிப்பது முக்கியம்.

நிறைய பேருக்கு., தங்களுடைய சருமமானது எத்தகைய வகை? என்பது சரியாக தெரிவதில்லை. அதனால், சுத்தப்படுத்தியை தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் கைகளில் பேட்ச் சோதனை கொண்டு முதலில் முயற்சி செய்வது, எரிச்சலை குறைத்து, பாதகமான விளைவுகளை தவிர்க்க, அதனால், அத்தகைய முயற்சி பாதுகாப்பானதாகவும் நமக்கு அமைகிறது.

Homemade Cleansers For Different Skin Types

ஆனால், நிறைய பேர்...தங்கள் சருமத்தில் பயன்படுத்தும் சுத்தப்படுத்தி என்பது அவர்கள் சருமத்திற்கு ஏற்றது தானா? என பார்க்காமலே நேரடியாக பயன்படுத்த தொடங்குகின்றனர். உங்களுடைய சருமத்திற்கு ஏற்ற வகை க்ளென்சர் நிறையவே இருக்கிறது என்பது தான் உண்மை.

உங்கள் சருமத்திற்கென்றே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டாலும் அவற்றின் தேவையை நாம் உணர்வதில்லை. இவ்வாறு கடைகளில் கிடைக்கும் சுத்தப்படுத்தியை வாங்கிபயன்படுத்தி, பக்கவிளைவுகளை எண்ணி பயம் கொள்வதைவிட, 100 சதவிகித அர்கானிக் சுத்தப்படுத்தியை வீட்டிலிருந்தபடியே தயாரித்து சருமத்தை பாதகத்திலிருந்து பாதுகாத்து பயனை அடையலாம்.

பொதுவான சரும பிரச்சனைகளான முகப்பரு, தோலழற்சியால் உண்டாகும் அரிப்பு ஆகியவற்றை மட்டுமே இந்த வீட்டில் தயாரிக்கப்படும் சுத்தப்படுத்திகள் போக்குவதில்லை. இது உங்கள் சருமத்தை மேன்மையாகவும் மாற்ற உதவி செய்கிறதாம்.

இப்பொழுது, வீட்டிலிருந்து நாம் தயாரிக்கும் எட்டு அற்புத சுத்தப்படுத்திகளின் சரும பயன்பாட்டினை பற்றி நாம் இப்பொழுது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறண்ட சருமத்திற்கான க்ளென்சர்:

வறண்ட சருமத்திற்கான க்ளென்சர்:

இரண்டு டீஸ்பூன் தயிருடன், ஒரு டீஸ்பூன் தேனையும் கலந்து, உங்கள் முகத்தில் தடவிகொள்ள வேண்டும். அதன் பிறகு இரண்டு நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரினை கொண்டு உங்கள் முகத்தை கழுவ வேண்டும்.

 ஹெவி க்ரீம் மற்றும் ஆலிவ் ஆயில் க்ளென்சர் :

ஹெவி க்ரீம் மற்றும் ஆலிவ் ஆயில் க்ளென்சர் :

ஆலிவ் ஆயில் மற்றும் ஹெவி க்ரீமை ஒரு டீஸ்பூன் எடுத்துகொள்ள வேண்டும். அதனை நன்றாக கலந்து, முகத்தில் தடவ வேண்டும். ஐந்து நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் கழுவ வேண்டும். அது உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைத்துகொள்வதோடு, சரும வெடிப்பு பிரச்சனைகளில் இருந்தும் விடுபட உ

தக்காளி :

தக்காளி :

இரண்டு டீஸ்பூன் தக்காளி சதையை எடுத்துகொள்ள வேண்டும். அத்துடன், ஒரு டீஸ்பூன் பாலையும், லெமன் ஜூஸையும் சேர்த்து கலந்துகொண்டு முகத்தில் தேய்க்க வேண்டும். பத்து நிமிடங்களுக்கு பிறகு, முகத்தை கழுவ வேண்டும். இதனால், உங்கள் சருமம் விரைவில் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

பால் மற்றும் கொண்டைக்கடலை க்ளென்சர்:

பால் மற்றும் கொண்டைக்கடலை க்ளென்சர்:

ஐந்து டீஸ்பூன் கொண்டைக்கடலைபொடியுடன் , இரண்டு டீஸ்பூன் பாலையும், ஒரு டீஸ்பூன் லெமன் ஜூஸையும் கலந்துகொண்டு...ஒரு மிருதுவான பேஸ்டை தயாரித்துகொள்ளுங்கள்.

அதனை உங்கள் முகத்தில் தேய்த்து, பத்து நிமிடங்களுக்கு பிறகு கழுவ வேண்டும். நீங்கள் ½ டீஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து தடவுவதால், அழற்சி பிரச்சனைகளுடன் போராடி உங்கள் சருமத்தை காக்க இது வல்லதாகும்.

 எண்ணெய் சருமத்திற்கான க்ளென்சர் :

எண்ணெய் சருமத்திற்கான க்ளென்சர் :

தேனையும் எழுமிச்சையையும் சரி சமஅளவில் எடுத்துகொண்டு கலந்து, அதனை காட்டன் பஞ்சின் உதவியுடன் முகத்தில் தடவ வேண்டும்.

உங்கள் சருமத்தில் காய்ந்துபோகும் வரை காத்திருந்து, குழாய் நீரை கொண்டு கழுவ வேண்டும். இது உங்கள் சருமத்திலிருக்கும் Ph அளவை சம நிலைப்படுத்தி, ஈரப்பதத்தையும் சமம் செய்து, எண்ணெய் பிசுபிசுப்பை போக்க உதவுகிறது.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஒரு பங்கு ஆப்பிள் சைடர் வினிகருடன், 2 பங்கு தண்ணீரை கலந்துகொள்ள வேண்டும். ஒரு காட்டன் பஞ்சினை கொண்டு, அந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும்.

அது உங்கள் சருமத்தில் இருக்கும் வெடிப்புகளை மிருதுவாக மாற்றி, பாக்டீரியவையும் நீக்குகிறது. அதோடு மட்டுமல்லாமல், சருமத்தில் மூடப்படும் துளைகளையும் தடுத்து பாதுகாக்கிறது.

இதன் Ph அளவானது 5.5 இருக்க, அது சருமத்தின் Ph அளவை நெருங்குகிறது. இதனை நிறமாற்றி (டோனர்) ஆகவும் நாம் பயன்படுத்தலாம்.

 சாதாரண சருமத்திற்கான க்ளென்சர் :

சாதாரண சருமத்திற்கான க்ளென்சர் :

இரண்டு டீஸ்பூன் தயிருடன், மசித்த வாழைப்பழம் பாதியை எடுத்துகொண்டு மிருதுவான பேஸ்டாக ஆக்கிகொள்ள வேண்டும். அதனை உங்கள் முகத்தில் தடவி, உலரும் வரை (காய்ந்து) காத்திருக்க வேண்டும்.

அதன் பின்னர், மிதமான சூட்டோடு இருக்கும் தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது.

உங்களுடைய சருமமானது சாதாரண வகையை சார்ந்திருக்குமெனில், நீங்கள் உங்களுடைய சருமத்தில் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். ஆம், குறிப்பாக உங்களுடைய சருமத்திற்கு மிகவும் அத்தியவாசிய சத்துக்களான., வைட்டமின் E, வைட்டமின் A மற்றும் புரத சத்துக்கள் தேவைப்படுகிறது.

புல்லர் எர்த் பேஸ் பேக்:

புல்லர் எர்த் பேஸ் பேக்:

புல்லர் எர்த்தை, ரோஸ் வாட்டருடன் கலந்து, ஒரு அரை நிலை தடிம பேஸ்டை போல் வைத்துகொள்ள வேண்டும். அதனை உங்கள் முகத்தில் மேலிருந்து தடவ வேண்டும்.

அதன்பிறகு, பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். உங்கள் முகத்தில், ஒருபோதும் அது அதிகம் வரண்டு விடகூடாது. ஏனெனில், உங்கள் முகத்தின் வெளிப்புறத்தில் இருக்கும்.

அத்தியவாசிய எண்ணெய்யினை இது உறிஞ்சிவிடக்கூடும். அதன்பின்னர், குழாய் தண்ணீரை கொண்டு முகத்தை கழுவி, பின் லைட் (லேசான) ஈரப்பதமூட்டியை தடவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Cleansers For Different Skin Types

Homemade Cleansers For Different Skin Types
Story first published: Tuesday, June 20, 2017, 19:00 [IST]