விரல் முட்டி கருப்பா இருக்கா? எப்படி சூப்பரா மாத்தலாம்னு தெரியுமா?

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

ஒரு பெண் எவ்வளவு அழகாக இருந்தாலும் அவளது கைகள் மட்டும் கருத்து இருந்தால் அது அசிங்கமாகத் தெரியும். முகத்திற்கு எவ்வளவு அக்கறை காட்டுகிறோமோ அதே அக்கறையை கைக்கும் காட்ட வேண்டியது மிக அவசியம்.

Easy home remedies to treat dark knuckle

இந்த காலத்தில் இவ்வாறு கைகள் கருத்து போவது என்பது பலர் சந்திக்கக் கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்று. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இவ்வாறு ஏற்படுகின்றது என்றால் அதிக அக்கறை நம் கைக்குத் தேவைப்படுகின்றது என்று அர்த்தம்.

இவ்வாறு கைகள் கருத்து போவதற்கான காரணம் - அதிகப் படியான சூரிய வெளிச்சம், ஹார்மோன் மாற்றங்கள், உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிப்பது, இறந்த இரத்த செல்கள் அதிகமாக உடலில் சேர்வது. இவையெல்லாம் தான் கைகள் கருப்பாக மாறுவதற்கான காரணங்கள். இப்பொழுது கருப்பான விரல்களை சரி செய்வதற்கான எளிய சிகிச்சை முறைகளைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்

சிறிது சர்க்க்ரையுடன் சில சொட்டுகள் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து கலந்து அதனை விரல்களின் மேல் தேய்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதனை வெதுவெதுப்பான நீரினால் கழுவி விடுங்கள். அல்லது பாதி எலுமிச்சை பழத்தை எடுத்து அதன் மீது சர்க்கரையைத் தூவி அப்படியே கைகளின் மீதும் தேய்க்கலாம். இது சிறந்த பலன் அளிக்கும்.

கடலை மாவு

கடலை மாவு

கருத்த விரல்களுக்கு கடலை மாவு ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். 3 ஸ்பூன் கடவை மாவு, 2 ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் 1 ஸ்பூன் பால், அவை அனைத்தையும் ஒரு சேரக் கலந்து விரல்களின் மீது மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவி விடுங்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இதை செய்து வந்தால் கருத்த நிறம் விரைவில் சரியாகும்.

உருளைக் கிழங்கு பேஸ்ட்

உருளைக் கிழங்கு பேஸ்ட்

வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு - 1, தேன் - 2 ஸ்பூன், பால் - 2 ஸ்பூன் ,எலுமிச்சைச் சாறு - 2 ஸ்பூன், மஞ்சள் தூள் -1 ஸ்பூன். இவை அனைத்தயும் ஒன்றாக கலந்துக் கொள்ள வேண்டும். அதனை விரல்களின் மீது தடவி 20 முதல் 25 நிமிடங்கள் வரை வைத்திருக்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை இதை செய்து வந்தால் சீக்கிரமே நல்ல முன்னேற்றம் தெரியும்.

பாதாம் பேக்

பாதாம் பேக்

சிறிது பாதாமை பாலில் போட்டு 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய பாதாமை ஒரு பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஃப்ரஸ் மில்க் கிரீம் - 2 ஸ்பூன், மஞ்சள் தூள் - 1 ஸ்பூன், ஆலிவ் ஆயில் - 1 ஸ்பூன் இவை அனைத்தையும் ஒரு சேரக் கலந்து விரல்களில் மேல் பூசி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும்.

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காய் சாறு

நெல்லிக்காயில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளதால் விரல்களில் உள்ள கருமையைப் போக்கி உண்மையான நிறத்தைத் தருகிறது. சில நெல்லிக்காய்களை நீரில் போட்டு 5 நிமிடம் வேக வைத்து எடுத்து பின்னர் அந்த நீரினை குளிரச் செய்ய வேண்டும்.

நெல்லிக்காய் வேக வைத்த நீரை சிறுது பஞ்சில் தொட்டு விலர்களின் மேல் மசாஜ் செய்ய வேண்டும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவிட வேண்டும். இதை நாள் ஒன்றுக்கு 2 முறை செய்ய வேண்டும்.

முட்டை வெள்ளைக் கரு

முட்டை வெள்ளைக் கரு

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கின்னத்தில் ஒரு ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் முட்டை வெள்ளைக் கரு மற்றும் ஒரு ஸ்பூன் தேன் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை கைகளின் மீது போட வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதனை ஒரு நாளைக்கு 2 முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் ரோஸ் வாட்டர்

பேக்கிங் சோடா மற்றும் ரோஸ் வாட்டர்

2 முதல் 3 ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் சிறிது ரோஸ் வாட்டர் மற்றும் தேன் சேர்த்து கலந்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையை கைகளின் மீது தடவி நன்குத் தேய்த்து மசாஜ் வேண்டும். பின்னர், குளிரந்த நீரினால் கழுவிடலாம். நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 முறை செய்ய வேண்டும். இதனால் கைகளின் கருப்பு நீங்கி நல்ல நிறம் கிடைக்கும்.

ஆரஞ்சு பேக்

ஆரஞ்சு பேக்

ஆரஞ்சு பழத்தை உரித்து சூரிய வெளிச்சத்தில் சில நாட்கள் உலர வைக்க வேண்டும். உலர்ந்த பழத்தை நன்கு அரைத்து பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 3 ஸ்பூன் ஆரஞ்சு பொடியுடன் சிறிது பால், எலுமிச்சை சாறு மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை கருத்தத் தோலின் மீது போட வேண்டும். இதனால் சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.

முள்ளங்கி பேக்

முள்ளங்கி பேக்

5 முதல் 6 ஸ்பூன் துருவிய முள்ளங்கியை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிறிது தேன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை கைகளின் மீது மசாஜ் செய்து சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்னர், மிதமான சூடு உள்ள நீரினால் கழுவ வேண்டும். கருத்த கைகளை சரி செய்ய இது ஒரு சிறந்த முறையாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Easy home remedies to treat dark knuckle

Easy home remedies to treat dark knuckle
Please Wait while comments are loading...
Subscribe Newsletter