முகம் பளிச்சென மாற காபி பொடியை முகத்திற்கு எப்படி பயன்படுத்தலாம்?

Written By:
Subscribe to Boldsky

காபி நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இந்தியாவில் தெருவுக்கு தெரு காபி கடைகளையும் அதிகமாக பார்க்க முடிகிறது. காபி பல புதுமையான இரகங்களிலும் கிடைக்கிறது. காபி குடித்தால் அந்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடிகிறது. காபியை அளவாக குடித்தால் நலமுடன் வாழலாம் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

காபி ஆரோக்கியத்திற்காக மட்டுமல்லாது, சரும பராமரிப்பிற்காகவும் பயன்படுத்த முடியும். காபி உங்களது சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை தருகிறது. இந்த பகுதியில் காபியை எப்படி அழகை பராமரிக்க பயன்படுத்தலாம் என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. முகத்திற்கான ஸ்கிரப்

1. முகத்திற்கான ஸ்கிரப்

காபியை ஒரு இயற்கை ஸ்கிரப்பாக பயன்படுத்தலாம். இது முகத்திற்கு கெமிக்கல்கள் கலந்த ஸ்கிரப்பை போல கெடுதல் விளைவிக்காது. காபி பொடியில். சிறிதளவு கரும்பு சக்கரை மற்றும் ஆலிவ் ஆயில் கலந்து முகத்திற்கு வட்ட வடிவத்தில் மசாஜ் செய்வதன் மூலமாக முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க முடியும்.

2. வேர்க்கால்களுக்கு உயிரூட்டுகிறது

2. வேர்க்கால்களுக்கு உயிரூட்டுகிறது

காபி பொலிவிழந்து போன தலைமுடியின் வேர்க்கால்களுக்கு உயிரை தருகிறது. சிறிதளவு காபி தூளை, ஈரமான தலையில் தடவி 2 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் தினசரி பயன்படுத்தும், ஷாம்பு மற்றும் கண்டிஸ்னர் கொண்டு முடியை அலசி விட வேண்டும். இதனால் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன.

3. உடலுக்கான ஸ்கிரப்

3. உடலுக்கான ஸ்கிரப்

உடல் உள்ள வறட்சியான தோலை போக்கி, சருமத்தை மிருதுவாக்கவும், இறந்த செல்களை நீக்கவும் காபியை பயன்படுத்தலாம். காபி சருமத்தை இளமையாக பாதுகாக்கிறது. காபி பொடி உடன் ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து உடலில் மசாஜ் செய்ய வேண்டும். இதனை உங்களது சருமத்திற்கு ஏற்ற வகையில் தினமும் கூட செய்யலாம்.

4. ஒளிரும் முகத்திற்கு

4. ஒளிரும் முகத்திற்கு

முகத்திற்கு அழகே முகத்தில் தெரியும் அந்த பிரகாசமான ஒளி தான். அப்படிப்பட்ட பொழிவான முகத்திற்காக, அரை கப் காபியை சிறிதளவு பால் சேர்த்து கெட்டியான பசையாக்கி கொள்ள வேண்டும். இதனை முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவினால், இறந்த செல்கள் நீங்கி பிரகாசமான முகம் பளிச்சிடும்.

5. கண் வீக்கம்

5. கண் வீக்கம்

காபி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும் கண்களுக்கு கீழ் உள்ள வீக்கத்தை குறைக்கவும் இது உதவுகிறது. இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடண்டுகள் உள்ளன. நீங்கள் காபி போடும் போது, வடிகட்டிய காபி தூளை எடுத்து கண்களில் போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விடுங்கள். இதனால் கண்களில் உள்ள வீக்கம் குறைந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

coffee for beautiful skin

coffee for beautiful skin
Story first published: Wednesday, September 20, 2017, 9:59 [IST]