For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க மேனி பள பளவென பாலிஷா இருக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதப் படிங்க

சருமம் மிகவும் டல்லாகி இருந்தால், எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி உங்களை மாற்றலாம் என இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.

By Suganthi Ramachandran
|

நம்ம முகத்தை மட்டும் அழகாக்க பேக்ஸ், லோசன்ஸ், க்ரீம்ஸ், மாஸ்க்ஸ் போன்ற இத்தனை முறைகளில் முயற்சி செய்கிறோம் அல்லவா. அதே அளவு கவனத்தை ஏன் நம்ம உடலழகுக்கு கொடுக்க மறந்து விடுகிறோம்.

இருக்கின்ற வழிகள், காஸ்மெட்டிக்ஸ் போன்றவை உடல் மற்றும் முக சருமத்திற்கு ஏற்றது என்றாலும் அதன் செயல்கள் இரண்டும் வித்தியாசமானவை. எனவே அது உங்கள் பாடி ஸ்கின்னுக்கு எந்த வித பயனும் தராது.

Body Polishing Method At Home using home ingredients

அதாங்க உங்களுக்காக இன்னைக்கு உங்கள் உடலை பள பளவென பாலிசாக மாற்றும் இயற்கை முறைகளை பார்க்க போறோம். இது மிகவும் எளிமையான இரண்டே இரண்டு செயல்களான ஸ்க்ரப்பிங், பாடி மாஸ்க்ஸ்கை கொண்டுள்ளது.

நன்மைகள் :

சருமத்தின் தன்மையை அதிகரிக்கும் சருமத்தில் உள்ள பருக்கள், சருமப் பிளவு, தேவையற்ற முடிகள் போன்றவற்றை சரி செய்யும்

சருமத்தின் மேற்பகுதியில் உள்ள மாசுக்கள், அழுக்கு மற்றும் தேவையற்ற செல்கள் போன்றவற்றை நீக்கிவிடும் சரும துவாரங்கள் அடைப்பு, சரும திசுக்கள் போன்றவற்றை சுத்தப்படுத்துகிறது. சருமம் பட்டு போன்று மாற உதவுகிறது.

சருமத்திற்கு பளிச்சென்று பொலிவை தருகிறது புத்துணர்ச்சி மற்றும் புதிய செல்கள் உருவாகுகிறது.

செய்து கொள்ளும் முறை.:

என்னங்க அதன் பயன்களை தெரிந்து கொண்டோம். வாங்க இப்பொழுது அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பாடி பாலிசிங் செய்வதற்கு முன்னால் உங்கள் சரும துவாரங்கள் திறந்து அழுக்கு மாசுக்கள் நீங்க நல்ல வெதுவெதுப்பான நீரில் முதலில் குளித்து கொள்ள வேண்டும்.

உடல் அழகை பாதுகாப்பதில் தக்காளியின் பங்கு!!!

முறை #1 : பாடி ஸ்க்ரப் பயன்படுத்துதல்

முதலில் நம் சருமத்தை ஸ்க்ரப் செய்து கொள்ள வேண்டும். இதில் உங்கள் சருமத்திற்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுத்து ஸ்க்ரப் செய்வதால் சரும இறந்த செல்கள் நீக்கப்பட்டு சருமத்திற்கு பாலிஷ் கொடுக்கும்.

பாடி பாலிசிங்கிற்கு பயன்படுத்தும் ஸ்க்ரப் பொருட்கள் கடலை மாவு, மைசூர் பருப்பு மாவு, சந்தனப் பொடி, மஞ்சள் தூள் மற்றும் தேன் ஆகியவை ஆகும். ஒவ்வொரு ஸ்க்ரப் பொருட்களும் உங்கள் உடலில் எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம்.

பேசன் /கடலை மாவு

இது ஒரு நல்ல ஸ்கரப்பாக செயல்படுகிறது. இது சருமத்திற்கு பொலிவை தருவதோடு வெயிலினால் ஏற்படும் சரும நிற மாற்றத்தையும் குறிப்பாக கழுத்து அல்லது கால்கள் பகுதியில் உள்ள கருமையை போக்குகிறது.

மைசூர் பருப்பு மாவு

இது சருமத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவதோடு சருமத்தில் உள்ள அழுக்கு, மாசுக்கள் மற்றும் எண்ணெய் பசை போன்றவற்றையும் நீக்கி சுத்தப்படுததுகிறது.

சந்தனப் பொடி

இது எல்லா வகையான சருமத்திற்கும் ஏற்றது. இது கருமை, கருவளையம் பருக்கள், பிம்பிள்ஸ் போன்ற எல்லா சரும பிரச்சினைகளையும் சரி செய்கிறது.

மஞ்சள் தூள்

இதில் உள்ள ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பொருட்கள் சருமத்திற்கு பொலிவை தருவதோடு சருமத்தில் உள்ள எரிச்சல், அழற்சி போன்றவற்றை சரியாக்குகிறது.

தேன் அல்லது ரோஸ் வாட்டர்

உங்களது ஸ்கின் டைப்பை வைத்து தேன் அல்லது ரோஸ் வாட்டரை எடுத்து கொள்ளுங்கள். எண்ணெய் பசை சருமத்திற்கு தேன் உகந்தது. ஏனெனில் இது சருமத்தில் உள்ள எண்ணெய்யை நீக்கி பருக்களை போக்குகிறது. ரோஸ் வாட்டர் வறண்ட சருமத்திற்கு ஏற்றது.

English summary

Body Polishing Method At Home using home ingredients

Body Polishing Method At Home using home ingredients
Story first published: Tuesday, July 11, 2017, 12:05 [IST]
Desktop Bottom Promotion