For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நைட் க்ரீம் உபயோகப்படுத்தினா உங்களுக்கு என்ன நன்மைகள் உண்டாகும்னு தெரியுமா

By Bala Karthik
|

நைட் க்ரீம்களை நாம் இரவு நேரத்தில் சருமத்தை அழகுபடுத்த உபயோகிக்கிறோம். பகல் நேரத்தில், உங்கள் சருமத்தை பாதுகாக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது போல், இரவிலும் சருமத்தை நீங்கள் பேணி பாதுகாப்பது அவசியமாகிறது.

Benefits And Uses Of Night Creams

உங்கள் சருமத்தை நீங்கள் தொடர்ந்து பாதுகாக்க, படுக்கை அறைக்கு முன் செல்லும்பொழுது பயன்படுத்தும் இந்த நைட் க்ரீமே போதும். நைட் க்ரீமினை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உண்டாகிறது. உங்கள் சருமத்தை பாதுகாக்கும் பொருட்கள் பட்டியலில் நைட் க்ரீம் இல்லையென்றால்...கீழே குறிப்பிடப்படும் நன்மைகளின் வாயிலாக அதனையும் சேர்த்து தான் கொள்ளுங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நைட் க்ரீமை ஏன் பயன்படுத்த வேண்டும்?

நைட் க்ரீமை ஏன் பயன்படுத்த வேண்டும்?

உங்களுடைய சருமம் அதிக மாசினை சந்திக்கிறது என்பதே உண்மை. உங்கள் சருமத்தின் எலாஸ்டிசிட்டி மற்றும் உறுதியை நீங்கள் மேம்படுத்த, தினமும் நைட்க்ரீம் பயன்படுத்துவது நல்லதாகும்.

உங்கள் சருமத்திலிருக்கும் செல்கள் இரவில் தான், புதுப்பிக்கபடுகிறது. அதனால், நல்ல தரமான நைட் க்ரீம்களை நீங்கள் இரவில் பயன்படுத்துவது உங்கள் சருமத்தை அழகாகவும் அருமையாகதாகவும் மாற்றுகிறது.

 நைட் க்ரீம்களை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை:

நைட் க்ரீம்களை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மை:

பெரும்பாலான ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளின் மூலம் நமக்கு தெரிய வருவது என்னவென்றால்...இந்த நைட் க்ரீம்களில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அமினோ ஆசிடின் அளவு அதிகமாக இருக்க, அது உங்கள் உடம்பில் இருக்கும் செல்களின் புதுப்பித்தல் முறையை வேகமடைய செய்கிறதாம்.

நைட் க்ரீம்களின் அதிக அளவில் கொலஜன் காணப்படுவதுடன், உங்கள் சருமத்தின் அழகு மற்றும் இழுவை மேலும் அதிகரிக்கவும் இது உதவுகிறதாம்.

உங்களுடைய சருமம் எந்த ஒரு வகையை சார்ந்தாலும் சரி, நைட் க்ரீம் பயன்பத்துவது அனைவருக்குமே நன்மை தருகிறதாம். மேலும் இந்த நைட் க்ரீம்கள், சருமத்தில் விழும் கோடுகள், சுருக்கங்கள், வயது முதிர்ந்த தோற்றம் ஆகியவற்றிடமிருந்தும் விலக உதவுகிறது.

நைட் க்ரீமை எப்படி தேர்ந்தெடுப்பது?

நைட் க்ரீமை எப்படி தேர்ந்தெடுப்பது?

தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், ஓட்ஸ், தேன், ஷியா வெண்ணெய், ஜாஸ்மின் ஆயில், அமினோ ஆசிட், வைட்டமின் A, ஜொஜோபா ஆயில், ரோஸ் ஆயில், கொலஜன், ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் இதனை தவிர்த்து ஏதேனும் பொருள் சேர்ந்திருப்பதனை நீங்கள் கண்டால், அதனை உபயோகிக்கலாமா? என்பதனை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

நைட் க்ரீமை நாம் பயன்படுத்த சரியான வழிமுறைகள்:

நைட் க்ரீமை நாம் பயன்படுத்த சரியான வழிமுறைகள்:

நைட் க்ரீமை பயன்பத்துவது தோடு உங்கள் கடமை நின்றுவிடுவதில்லை. அதனை சரியான முறையில் பயன்படுத்துவதிலும் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகும். எப்படி நைட் க்ரீமை சரியாக நாம் பயன்படுத்துவது? பார்க்கலாம்.

1.நைட் க்ரீமை நீங்கள் பயன்படுத்தும் முன், முகத்தை முதலில் கழுவ வேண்டியது அவசியமாகும். உங்கள் முகத்தில் இருக்கும் கரை மற்றும் தூசிகளை அகற்றியபின்பு தான் பயன்படுத்த வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

வழிமுறைகள்:

வழிமுறைகள்:

2.நைட் க்ரீமை உங்கள் முகத்தில் குறைந்த அளவிலே அப்ளை செய்ய வேண்டும். அதிகளவில் பூசினால், அது உங்கள் சருமத்தின் துளைகளை மூடிவிடும். அதனால் முகப்பருக்கள் ஏற்பட கூட வாய்ப்பிருக்கிறது. அதனால், குறைந்த அளவிலான நைட் க்ரீமை நீங்கள் பயன்படுத்துவது உங்கள் சருமத்துக்கு நல்லதாகும்.

3.நைட் க்ரீமை தேய்க்கும்பொழுது, உங்கள் சருமத்தை மசாஜ் செய்வது போல் அழகாக வட்டமாக தேய்க்க வேண்டும். அது, உங்கள் முகத்தில் சுருக்கங்கள் விழுவதை தடுத்து முதிர்ச்சியான தோற்றத்திலிருந்து காப்பாற்றுகிறது.

4.உங்கள் கண் பகுதியை ஒரு போதும், இந்த நைட் க்ரீம்கள் தீண்ட கூடாது என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits And Uses Of Night Creams

Benefits And Uses Of Night Creams
Story first published: Friday, June 2, 2017, 14:47 [IST]
Desktop Bottom Promotion