இந்த ஒரு ஃபேஸ் பேக் 20 நிமிடத்தில் உங்களை வெள்ளையாக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

கோடைக்காலமாக இருந்தாலும், இந்நாட்களிலும் திருமண விழாக்கள், கோவில் நிகழ்ச்சிகள் போன்றவை எல்லாம் நடைபெறும் என்பதால், இந்த தருணங்களில் நாம் அழகாக காட்சியளிக்க விரும்புவோம். அதே சமயம் பணம் அதிகம் செலவழிக்காமலும் இருக்க வேண்டும் என இயற்கை பொருட்களைக் கொண்டே சரும அழகை அதிகரிக்க நினைப்போம்.

Beetroot Face Pack & Juice Recipe For Skin Whitening

குறிப்பாக வெயில் காலத்தில் முகம் கருமையாகவும், முகப்பருக்களுடனும் பொலிவிழந்து இருக்கும். இவை அனைத்திற்கும் நம் வீட்டில் உள்ள ஒரு காய்கறியைக் கொண்டு தீர்வு காண முடியும். அது வேறு எதுவும் இல்லை, பீட்ரூட் தான்.

இக்கட்டுரையில் கருமையைப் போக்கி, சருமத்தை வெள்ளையாக்கும் இருவேறு வித்தியாசமான பீட்ரூட் ஃபேஸ் மாஸ்க்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும நிறத்தை அதிகரிக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்

சரும நிறத்தை அதிகரிக்கும் பீட்ரூட் ஃபேஸ் பேக்

செய்முறை #1

முதலில் காய்ச்சாத பாலால் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கு காட்டனை பாலில் நனைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 1-2 நிமிடம் மசாஜ் செய்து, பின் நன்கு காய்ந்த பின் நீரில் கழுவ வேண்டும். இச்செயலால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் வெளியேறும்.

செய்முறை #2

செய்முறை #2

பின்பு பீட்ரூட்டை சிறிது துருவிக் கொண்டு, வடிகட்டி பயன்படுத்தி, அதில் உள்ள சாற்றினை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தயிர், கிளிசரின், கற்றாழை ஜெல், எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் சந்தனப் பவுடர் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

செய்முறை #3

செய்முறை #3

பின் தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை முகத்தில் தடவி 20-25 நிமிடம் நன்கு காய வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

செய்முறை #4

செய்முறை #4

பிறகு எஞ்சிய துருவிய பீட்ரூட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் பொலிவு சற்று அதிகரித்திருப்பதோடு, மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தியது போன்றும் சருமம் இருக்கும்.

இளமையை நீட்டிக்கும் பீட்ரூட் ஜூஸ்

இளமையை நீட்டிக்கும் பீட்ரூட் ஜூஸ்

செய்முறை #1

முதலில் 2 கேரட், 1 துண்டு இஞ்சி, 1 பீட்ரூட் மற்றும் 100 மிலி தண்ணீர் எடுத்து, தோலுரித்து துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

பின் அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் சீரகப் பொடி, 1 சிட்டிகை உப்பு, 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்தால், இளமையை நீட்டிக்கும் பீட்ரூட் ஜூஸ் ரெடி!

குடிக்கும் முறை:

குடிக்கும் முறை:

இந்த பீட்ரூட் ஜூஸை ஒருவர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தை இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beetroot Face Pack & Juice Recipe For Skin Whitening

Here we gave two different methods of getting pinkish glow to your skin and that too using only one vegetable. Read on to know more...
Story first published: Tuesday, May 16, 2017, 14:40 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter