ஸ்ட்ராபெர்ரியில் நிறைந்திருக்கும் அழகு ரகசியங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு. இதிலிருக்கும் விட்டமின் ஏ, சி, கே,கால்சியம்,மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமச் சுருக்கம் :

சருமச் சுருக்கம் :

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமச்சுருக்கங்களை வராமல் தடுத்திடும். சருமச் செல்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவிடும். நான்கு ஸ்ட்ராபெர்ரிகளை அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம் வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் சருமம் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் சரும சுருக்கங்களை தவிர்த்திடும்.

சருமப் பொலிவு :

சருமப் பொலிவு :

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்ற்ம் எலாகிக் ஆசிட் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும். ஸ்ட்ராபெர்ரியை பாதியாக வெட்டி அதை முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை கூலாக்கி அவற்றில் பாலைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.

உதடுகள் :

உதடுகள் :

உதடுகளை நல்ல நிறமாக எடுத்துக் காட்ட ஸ்ட்ராபெர்ரி உதவிடும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவிடும். ஸ்ட்பெர்ரியை பாதியாக கட் செய்து உதட்டில் தேய்த்து வரலாம். ஸ்ட்ராப்பெர்ரி கூலுடன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து லிப் பாம்மாக பயன்படுத்தலாம்.

ஆக்னீ :

ஆக்னீ :

ஆக்னீ தோன்ற காரணம் நம் சருமங்களில் சுரக்கும் சீபம் தான். இவற்றை தடுக்க 5 ஸ்ட்ராபெர்ரிக்களை எடுத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள். அவற்றுடன் தயிர் சேர்த்து ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்களில் கழுவிவிடலாம். இதனை தினமும் கூட நீங்கள் செய்யலாம்.

வெண்மை பற்கள் :

வெண்மை பற்கள் :

கறை படிந்த பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தலாம். ஸ்ட்ராபெர்ரியை அரைத்து டூத் வொயிட்னராக அப்ளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதிலிருக்கும் விட்டமின் சி பற்களை வெண்மையாக்குவதுடன் ஈறுகளை உறுதியாக்கும்.

தேமல் :

தேமல் :

சருமத்தில் எங்கேனும் நிறம் மாறுபட்டிருந்தாலோ அல்லது தேமல், மரு போன்றவை வந்திருந்தாலோ இதனை செய்யலாம். ஸ்ட்ராபெர்ரிகூலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் உடனடி பலன் கிடைத்திடும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம்.

நகம் :

நகம் :

ஸ்ட்ராபெர்ரியில் அதிகப்படியான பயோட்டின் இருக்கிறது. இந்த பயோட்டின் நகம் வளர்ச்சிக்கு மற்றும் அதன் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ட்ராபெர்ரி அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான நகத்திற்கு கியாரண்ட்டி!

 க்ளன்சர் :

க்ளன்சர் :

ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி சாலிசைக்ளிக் ஆசிட் சிறந்த பேஷியல் க்ளன்சராக பயன்படும். சாலிசைக்ளிக் ஆசிட் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் சருமத்துளைகளை இறுக்கமாக்கிடும்.

ஸ்ட்ராபெர்ரியை அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி லேசகா மசாஜ் செய்திடுங்கள்.

டோனர் :

டோனர் :

ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து அவற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து பீரசிரில் வைத்திடுங்கள் இரண்டு மணி நேரம் கழித்து அதனை முகத்தில் தேய்த்து வர ஸ்ட்ராபெர்ரி சிறந்த டோனராக செயல்படும்.

ஸ்க்ரப் :

ஸ்க்ரப் :

ஸ்டாபெர்ரியை அரைத்து அந்த கலவையுடன் பொடித்த ஓட்ஸ் மற்றும் க்ளிசரின் கலந்து பாதம் முழுவதும் மசாஜ் செய்திடுங்கள். பின்னர் சூடான நீரில் 10 காலை வைத்தால் பாதங்களில் உள்ள டெட் செல்கள் நீங்கிடும்.

அடர்த்தியான கூந்தல் :

அடர்த்தியான கூந்தல் :

ஸ்ட்ராபெர்ரியில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்,மெக்னீசியம் மற்றும் காப்பர் இருக்கிறது. இவை எல்லாமே கூந்தலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பத்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் அவற்றுடன் இரண்டு ஸ்பூன் மயோனைஸ் கலந்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்திடுங்கள். அரை மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம். இவை தலை முடியை அதிகம் வரண்டுவிடாமல் வைத்திருக்க உதவுவதுடன் முடி உதிர்தலையும் தடுத்திடும்.

பொடுகு :

பொடுகு :

பொடுகுத் தொல்லை அதிகமிருந்தால் ஸ்ட்ராபெர்ரி பழக்கூலுடன் தேயிலை மர எண்ணெய் இரண்டு டீஸ்ப்பூன் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகுத் தொல்லை ஒழிந்திடும், வாரம் ஒரு முறை இப்படிச் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Beauty Tips Using Strawberry

Beauty Tips Using Strawberry
Story first published: Wednesday, August 2, 2017, 15:46 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter