ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை வசிகரிக்க செய்வது எப்படி? 12 டிப்ஸ்

Written By: Lakshmi
Subscribe to Boldsky

ஐஸ்கட்டிகள் நமது தொண்டைக்கு வேண்டுமானால் கெடுவிளைவிப்பதாக இருக்கலாம். ஆனால் நமது அழகை பாதுகாக்க பயன்படுகிறது. ஆம் நாம் தினமும் ஐஸ்கட்டிகளை கொண்டு முகத்தை மசாஜ் செய்தால், நமது முகத்தின் வசிகரம் அதிகரிக்கும். சரி, இப்போது ஐஸ்கட்டிகளின் பயன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. முகப்பருக்களை போக்க

1. முகப்பருக்களை போக்க

முகப்பருக்கள் நம் அழகை சீரழிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்வதால், சருமத்தில் உள்ள எண்ணைப்பசை நீங்கி, சருமம் மிருதுவாகிறது.

முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 10/ 15 நிமிடங்கள் ஐஸ்கட்டியை கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.

2. தழும்புகள் மறைய:

2. தழும்புகள் மறைய:

முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் கருப்பாக முக அழகை கெடுக்கும். கடைகளில் பல க்ரீம்கள் இருந்தாலும் அவை கெமிக்கல்களால் ஆனவை. நீங்கள் கண்ட கண்ட கெமிக்கல்களை பயன்படுத்த தேவையில்லை. தழும்புகளை போக்க ஐஸ்கட்டி ஒன்றே போதுமானது.

தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் தருவதால், தழும்புகள் மறையும்.

3. தோலில் உள்ள துளைகளை நீக்க

3. தோலில் உள்ள துளைகளை நீக்க

சருமத்தின் துளைகள் பெரிதாக இருப்பதும் முகத்தின் அழகை கெடுக்கும். மேலும் இவை அழுக்குகளை எளிதில் உள்ளிழுக்கும். இதனால் முகப்பருக்கள் அதிகமாக வர வாய்ப்புள்ளது. ஐஸ்கட்டிகளை வைப்பதால் இந்த துளைகள் மறையும்.

தொடர்சியாக ஐஸ்கட்டிகளை சருமத்தில் அழுத்துதல் மற்றும் தேய்த்தல் மூலம் சருமத்தின் துளைகளை அகற்ற முடியும்.

4. முகம் பொலிவடைய:

4. முகம் பொலிவடைய:

ஸ்ட்ராபெரி அல்லது வெள்ளரிக்காயை அரைத்து, அதனை ஐஸ்கட்டியாகும் வரை குளிவிக்க வேண்டும். இந்த ஐஸ்கட்டியை முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் முகம் பொலிவடையும். மேலும் இந்த மசாஜை வாரம் ஒருமுறை செய்யலாம்.

5. முக சோர்வை போக்க

5. முக சோர்வை போக்க

வெயிலினால் உங்கள் முகம் சோர்வாக, கலை இழந்து இருக்கும். அப்போது ஐஸ்கட்டிகளை கொண்டு அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்வதால், முகத்தில் குளிர்ச்சி ஏற்பட்டு முகம் பளிச்சென்று இருக்கும்.

6. கண் வீக்கத்தை போக்க

6. கண் வீக்கத்தை போக்க

சரியான தூக்கம் இல்லாத காரணத்தாலோ அல்லது அழுதாலோ கண்கள் வீங்கி முகம் பார்க்க நன்றாக இருக்காது. கண்களை அழகாக்க, காட்டன் துணியில் ஐஸ்கட்டியை வைத்து, தினமும் காலையில் கண்களை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும்.

7. கருவளையங்களை போக்க

7. கருவளையங்களை போக்க

கண்களை சுற்றியுள்ள கருவளையகள் முகத்தின் அழகையே கெடுப்பதாக இருக்கும். ரோஸ் வாட்டர் மற்றும் வெள்ளரிக்கயை அரைத்து செய்யப்பட்ட ஐஸ்கட்டி ஆகியவற்றை கொண்டு மசாஜ் செய்தால், கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

8. எண்ணெய் பசை கொண்ட சருமம்

8. எண்ணெய் பசை கொண்ட சருமம்

முகத்தில் எண்ணெய் வடிதல் ஆனது பலரும் சந்திக்கும் ஒரு பிரச்சனை. இதிலிருந்து விடுபட ஐஸ்கட்டியால் மசாஜ் செய்வது நல்ல பலனை தரும்.

9. முதிர்ந்த சருமத்திற்கு

9. முதிர்ந்த சருமத்திற்கு

ஐஸ்கட்டிகள் மூலம் மசாஜ் செய்வதால், இரத்த ஓட்டம் அதிகரித்து முகம் சுருக்கமாவது குறைகிறது. இது முகத்திற்கு உண்மையான பொலிவை தருகிறது.

10. முகத்தில் உள்ள தடிப்புகளை போக்க

10. முகத்தில் உள்ள தடிப்புகளை போக்க

முகத்தில் உள்ள தடிப்புகள் எரிச்சலை உண்டாக்கும். இதனால் முகம் சிவந்து காணப்படும். இதனை சரிசெய்ய முகத்தில் ஐஸ்கட்டியை கொண்டு அழுத்தி எடுக்கவும்.

11. மேக்கப் நீடிக்க

11. மேக்கப் நீடிக்க

பெரிய சரும துளைகள் முகத்தில் இருக்கும் மேக்கப்பை எளிதில் மறைய செய்யும். எனவே மேக்கப் செய்வதற்கு முன்னர் ஐஸ்கட்டிகளை கொண்டு மசாஜ் செய்வது, அதிக நேரம் மேக்கப் நீடிக்க உதவுகிறது.

12. உதடுகளின் நிறம் மேம்பட

12. உதடுகளின் நிறம் மேம்பட

உதடுகள் மிருதுவாகவும், சிவந்த நிறமாகவும் இருப்பது பெண்களை அழகை அதிகரித்து காட்டும். உதடுகள் கருப்பாக, புகைப்பிடித்தல், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சூரியகதிர்கள் காரணமாக உள்ளன.

உதடுகள் மிருதுவாகவும், சிவப்பாகவும் மாற ஐஸ்கட்டிகளை தொடர்ந்து மசாஜ் செய்து வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

beauty benefits of ice cubes

here are the some beauty benefits of ice cubes
Story first published: Tuesday, May 23, 2017, 17:20 [IST]