காயத்தால் உண்டான தழும்பு நீக்கும் அருமையான நாட்டு மருத்துவ குறிப்புகள்!!

Posted By: Gnaana
Subscribe to Boldsky

எதிர்பாராத விபத்துக்களால் ஏற்பட்ட சற்றே ஆழமான காயங்கள், தீ விபத்து பாதிப்புகளால் ஏற்பட்ட காயங்கள். இந்தக் காயங்கள் ஆறவே வெகு நாட்கள் ஆகி இருக்கும், அப்போது அந்தக் காயங்கள் குணமடைந்தால் போதும், தினமும் கைகளிலோ அல்லது முகத்திலோ சிறிய பேண்டேஜ் அல்லது பிளாஸ்டர் ஒட்டிக் கொண்டு, வெளியில் நடமாடுவது மிக மன வேதனையை அளிக்கிறது, என அந்தக் காயங்கள் விரைவில் குணமடைந்தாலே போதும், என்ற மன நிலையிலேயே யாவரும் இருப்போம்.

Ayurvedic remedies to banish facial scars

உடலின் காயங்கள் ஆறும் போது, அவ்விடம் உள்ள தோல் செல்கள் அழிந்து புதிதாக வேறு செல்கள் உருவாகும், ஆயினும் மருந்துகளின் தன்மைகளால் அந்த செல்களின் இயற்கை நிறம் மறைந்து கறுக்கும், அதுவே பின்னர் தழும்பாக மாறி, எல்லோருக்கும் மன உளைச்சலைக் கொடுக்கிறது.

மேலும், காயங்கள் விரைவில் ஆற வேண்டுமே, வலிகள் தீர வேண்டுமே என்ற எண்ணத்தில் கிடைக்கும் மருந்துகளை எல்லாம் காயங்களில் இட, தழும்புகள் எல்லாம் மாறாத வடுக்களாக மாறி விடுகிறது..

இப்போது நாம், நம் முன்னோர்கள் சொல்லிய ஒரு முறையின் மூலம் காயத்தால் ஏற்பட்ட தழும்புகள் நீங்க உதவும் ஒரு மூலிகையைப் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூலிகைக் குமரி எனும் சோற்றுக் கற்றாழை :

மூலிகைக் குமரி எனும் சோற்றுக் கற்றாழை :

சிலருடைய நல்ல செயல்களால் அல்லது அறிவாற்றலால் அவர்களை நாம், மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார் என்றுச் சொல்லுவோமே, அப்படி மூலிகைகளில் தன்னுடைய செயல் ஆற்றல் மிக்க தன்மைகளால் மனிதர்களின் நோயகற்றும் மா மருந்தாக, மிக உயர்ந்த சிறப்பான நிலையில் இருப்பது தான், மூலிகைக் குமரி என சித்தர்களால் போற்றப்படும் சோற்றுக் கற்றாளை மூலிகை.

சோற்றுக் கற்றாளை மடலை எடுத்து அதன் சதைப் பாகத்தை தழும்புகளின் மேல் வைத்து இரவு வேளைகளில் கட்டி வைத்து உறங்கி வர, சில நாட்களில் தோலின் கருமை நிறம் மறைந்து இயல்பான தோலின் நிறம் வர ஆரம்பிக்கும்.

தேன் :

தேன் :

தேன் இயல்பாகவே, தீப் புண்கள் ஆற்றும் ஆற்றல் மிக்கது. தேனை தினமும் தழும்புகளின் மேல தடவி வர, விரைவில் தழும்புகள் நிறம் மாறும்.

அரச மர இலைகள் :

அரச மர இலைகள் :

காலை வேளைகளில் அரச இலைச் சருகுகளை இடித்து தூளாக்கி அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து தழும்புகளின் மேல் பூசி வரலாம்.

சிவனார் வேம்பு :

சிவனார் வேம்பு :

மேலும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் சிவனார் வேம்பு எனும் மூலிகைத் தைலத்தை தழும்புகளில் தடவி வர, தழும்புகள் ஆற்றுவதில் தனித்தன்மையுடன் செயல்பட்டு தழும்புகளை மறைய வைக்கும்.

காயங்களால் உண்டான தழும்புகள் நீங்கி, மன நிறைவுடன் இருக்க, இயற்கை மூலிகைகளைப் பயன்படுத்தி, விரைவில் உடல் நலமும் மன வளமும் பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurvedic remedies to banish facial scars

Ayurvedic remedies to banish facial scars
Story first published: Saturday, June 24, 2017, 9:00 [IST]