உதடுகளை கவர்ச்சியாக மாற்ற வைக்கும் புதிய மருத்துவம்!!

Posted By: Hari Dharani
Subscribe to Boldsky

பெண்கள் அடிக்கடி அவர்களது உதடுகளின் சீரற்ற வடிவம் மற்றும் தடிமன் குறித்து அதிருப்தி காட்டுகிறார்கள். மேலும் பெண்கள் இயற்கை வைத்திய முறைகளால் அல்லது

உதடுகளுக்கான செயற்கை சாயப்பூச்சுகளால் அவர்களது உதடுகளை முத்தமிடுகையில் மற்றும் உதடு சுழிக்கையில் அழகாக இருக்குமா பார்த்துக்கொள்கிறார்கள்.

ஆனாலும்  இம்முறைகள் எப்போதும் கைகொடுப்பதில்லை மேலும் அழகற்ற உதடுகளை தொடர்ந்து எடுத்துக்காட்டுகிறது. மில்லெனியல்ஸ் மற்றும் நகர்ப்புற மகளிர் மத்தியில் இருக்கும்  பொதுவான இந்த உதடுகளின் வடிவமைப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கருத்தில் கொண்டு தற்போது ஒப்பனைக்கான அறுவை சிகிச்சை முறையில் நேர்த்தியான மற்றும் விரும்பத்தக்க வடிவங்களில் உதடுகளை மாற்றி கொள்ள வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

உதடுகளை பார்ப்பதற்க்கு அழகான, கொழுகொழுப்பான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பில் மாற்றும் இந்த ஒப்பனை அறுவை சிகிச்சை முறையின் பெயர் லிப்ஆக்மென்ட்டேஷன்(lip augmentation) ஆகும்.

All You Need To Know About Lip Injections

இன்று இந்த லிப் ஆக்மென்ட்டேஷன் பற்றிய எல்லா விவரங்களையும் தொகுத்து வழங்குகிறோம், நீங்கள் இந்த சிகிச்சை முறையை தேர்வு செய்வதானால் இந்த

விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

லிப் ஆக்மென்ட்டேஷன் என்றால் என்ன?

லிப் ஆக்மென்ட்டேஷன் எனும் அறுவை சிகிச்சை முறை உதடுகளுக்கு நேர்த்தியான, வடிவமுடைய, கொழுகொழுப்பான, சீரான தோற்றத்தை கொடுத்து,

உதட்டுச்சாயங்களினால் ஏற்பட்ட வெடிப்புகளை அகற்றுகிறது. இந்த சிகிச்சை முறையில் மருந்தூசி மற்றும் ஊசிகள் மூலம் மருந்து உட்செலுத்தப்படுகிறது.

லிப் ஆக்மென்ட்டேஷன் அறுவை சிகிச்சை தொடங்கும் முன், மரத்துப் போவதற்கான பார்ஷியல் அனஸ்தீசியா(Partial Anasthesia) கொடுக்கப்படுகிறது. அதனால்

சிகிச்சை பெறுபவர்கள் வசதியாக உணர்கிறார்கள். ஒருவர் லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சை பெற விரும்பினால், அந்த துறை சார்ந்த நிபுணர்கள் ஆலோசிக்க வேண்டும்.

மேலும் இந்த சிகிச்சை முறைக்கு ஐந்து மணி நேரத்திற்கு மேல் நேரம் செலவாகிறது. இந்தியாவில் இந்த லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சைக்கு ரூ. 50,000 க்கு மேல் செலவாகிடறது .

ஹையலூரானிக் ஆசிட் பில்லர்ஸ் என்றால் என்ன?

இந்த லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சை முறையில் பொதுவாக நீங்கள் கேள்விப்படும் செயல்பாடு ஹையலூரானிக் ஆசிட் பில்லர்ஸ். ஹையலூரானிக் ஆசிட் பில்லர்ஸ்என்பது மருந்தூசி மூலம் செலுத்தப்படும் அடித்தோலுக்கான திசுக்கள் கொண்ட பில்லர்ஸ், அவை இந்த சிகிச்சை முறையின் போது உதடுகளுக்குள் ஊடுருவுகிறது.

இந்த ஹையலூரானிக் அமிலம் பற்றிய நல்ல தகவல் என்னவென்றால், அவை நமது உடலில் இயற்கையாகவே இருக்கும். மேலும் லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சையின் போது இது அதிகமாக உட்செலுத்தப்படுவதால், எந்த விதமான எதிர்வினையும் ஏற்படுவதில்லை.

ஹையலூரானிக் அமிலம் உதடுகளின் அளவை அதிகரிக்கும் மேலும் இது உதடுகள் மற்றும் உதடுகளை சுற்றியுள்ள பகுதியில் மருந்தூசியாக செலுத்தப்படுகிறது.

All You Need To Know About Lip Injections

லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சையின் நன்மைகள்

லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சை முறை பற்றிய சந்தேகங்களிருந்தால் நீங்கள் கவனிக்க வேண்டிய இச்சிகிச்சை முறையின் நன்மைகள்

விரும்பிய அளவிலான உதடுகள் :

லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சை முறையின் போது உதடுகளின் முழுமையான அளவு பற்றி உங்களிடம் ஆலோசிக்கப்படும். இதில் உங்களுக்கு சிகிச்சை அளிக்கும்

நிபுணரின் தலையீடு எதுவும் இருக்காது. எனவே நீங்கள் எளிதாக உங்களுக்கு வேண்டிய சீரான உதடுகளின் வடிவ மாற்றத்தை பெறலாம்.

படிப்படியான சிகிச்சை :

ஒரே தடவையில் இந்த லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சையை பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. நீங்கள் மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனை சந்திப்புகளுக்கு

இடைவெளி எடுத்துக்கொண்டு படிப்படியாக வெவேறு சந்திப்புகளில் இந்த சிகிச்சையை பெற்று கொள்ளலாம்.

பக்கவிளைவு இல்லை :

லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சையில் ஹையலூரானிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது, அவை நமது உடலில் இயற்கையாகவே இருக்கும், இதனால் எந்த விதமான

எதிர்வினையும் பக்கவிளைவுகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. மேலும் இந்த சிகிச்சை முறையால் சிறந்த மற்றும் நேர்த்தியான வடிவத்தில் உதடுகளை மாற்றிக்கொள்ள முடியும்.

லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சை முறையில் உள்ள குறைகள்:

லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சை முறையில் குறைபாடுகள் இல்லையென்று கூற இயலாது. இந்த சிகிச்சையில் உள்ள குறைகளை காண்போம்.

நாட்பட்ட சிராய்ப்புண் :

மிகப் பொதுவான குறையாக சிகிச்சை மேற்கொள்ளுபவர்கள் கூறுவது, இந்த சிகிச்சை உதட்டின் மேல்பகுதியில் சிராய்ப்பு போன்ற புண்களை ஏற்படுத்துகிறது, இந்த புண் ஒரு

வார காலத்திற்கு மேல் ஆறாமல் இருக்கிறது என்பதே. மேலும் இந்த சிராய்ப்புண் வலி ன் நிறைந்ததாகவும் இருப்பதோடு குணமாவதற்கு அதிக நாட்கள் ஆகிறது.

All You Need To Know About Lip Injections

பொருத்தமில்லா உதடுகள் :

தற்போது நீங்கள் எவ்வளவு தான் உங்கள் நிபுணரிடம் முன் ஆலோசனை செய்திருந்தாலும் கடைசியில் உங்களுக்கு நீங்கள் விரும்பிய பொருத்தமான அமைப்புடைய

உதடுகள் அமைவதில்லை. இதில் இன்னும் மோசமென்னவெனில் சில சமயங்களில் இரு உதடுகளுமே பொருந்தாமல் வெவ்வேறு வடிவங்களில் அமைந்துவிடுகிறது!

வாய்ப்புண் :

லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சையின் வெளிப்பாடாக, வாய்ப்புண் ஏற்படுகிறது. இது மிகவும் அருவெறுக்க கூடியதாகவும் மேலும் இதனால் அன்றாட உணவு பழக்கங்களுக்கு இடையூறும் ஏற்படுகிறது.

இந்த சிகிச்சை நிரந்தர தீர்வல்ல :

லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சை சீரான நேர்த்தியான வடிவ உதடுகள் பெற நிரந்தர தீர்வு என்றாலும், இந்த சிகிச்சை முறையை நீங்கள் தேர்வு செய்தால் 5-6 மாதங்களுக்கு ஒருமுறை மீண்டும் சிகிச்சை பெற வேண்டும்.

லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சைக்கு முன்னர் செய்ய வேண்டியவை :

 உங்களுக்கு லிடோகைன் (lidpcaine) ஒவ்வாமை இருப்பின் சிகிச்சை பெறுவதற்கு முன்னரே, மருத்துவ நிபுணரிடம் கூறிவிடுவது நல்லது.

 லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சைக்கு முன், வலி நிவாரணி, மீன் எண்ணெய் மற்றும் வைட்டமின் E ஆகியவற்றை தவிர்த்து விடவும். இதனால் இரத்தத்தின் அடர்த்தியை குறைத்து, லிப் ஆக்மென்ட்டேஷன் சிகிச்சைக்கு தயாராக்குகிறது.

English summary

All You Need To Know About Lip Injections

All You Need To Know About Lip Injections
Story first published: Sunday, July 30, 2017, 11:00 [IST]