For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க சிகரெட் பிடிச்சா இந்த 7 விஷயங்களும் உங்க சருமத்தில் நடக்கும்!!

புகைபிடிப்பதால் ஆரோக்கியம் மட்டுமின்றி அழகும் கெடும். இது சருமத்தின் அழகை எவ்வாறு பாதிக்கின்றது என இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

|

புகைப்பிடிப்பதால் உண்டாகும் மோசமனா விளைவுகளை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நுரையீரல் பாதிப்பு, ரத்த நோய்கள், செல் சிதைவு , புற்று நோய்கள், இன்னும் இன்னும் கொடிய பாதிப்புகள் உண்டாகிறது என நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள்.

7 dangerous changes that Smoking causes to your skin

இவற்றோடு உங்கள் அழகையும் மோசமாக கெடுக்கும் என்பதும் உங்களுக்கான கூடுதல் தகவல்.

எப்படி உங்கள் அழகும் சீர்கெடுகிறது என தெரிந்து கொள்ள விருப்பமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீக்கிரம் வயதான தோற்றம் :

சீக்கிரம் வயதான தோற்றம் :

சிகரெட்டிலுள்ள ரசாயனங்கள் விரைவில் செல் முதிர்ச்சியை அதிகப்படுத்துகின்றன. இதனால் சருமம் டல்லாகி, முதிர்ச்சிய்டைந்து வயதான தோற்றம் அடைந்துவிடுவது உறுதி.

சுருக்கங்களும் வரிகளும் :

சுருக்கங்களும் வரிகளும் :

சிகரெட்டிலுள்ள நிகோடின் ரத்த செல்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளையை துண்டிப்பதால் விரைவில் செல் சிதைவு உண்டாகிறது. ஆகவே சுருக்கங்களும் , உடலில் வரிகளும் உடனடியாக குறிப்பாக பெண்களுக்கு ஊண்டாகிவிடும்.

கரும்புள்ளிகளும், தேமலும் :

கரும்புள்ளிகளும், தேமலும் :

ரத்த ஓட்டம் தடைபெறுவதால் ஆங்காங்கே செல்கள் தேங்கி விடும். அங்கே இறந்த செல்களின் தேய்மானத்தால் , கருமை படர்ந்து கரும்புள்ளி, தேமல் போன்றவை உண்டாகும்.

கருப்பான உதடுகள் :

கருப்பான உதடுகள் :

உதடுகளில் இருக்கும் செல்கள் அழிந்து அந்த இடங்களில் கருப்பாக மாறிவிடும். அல்லது வெளுத்து காணப்படும். இதற்கு சிகரெட்டில் இருக்கும் மோசமாக ரசாயாங்கள்தான் காரணமாகும்.

காயங்கள் ஆறாது :

காயங்கள் ஆறாது :

ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால்தான் உங்களது உடலில் உண்டாகும் காயங்களை வேகமாக குணமாற்றும். எங்கே காயம் பட்டிருகிறதோ அங்கே ரத்த செல்கள் விரைந்து சரிப்படுத்தும். ஆனால் புகைப்பிடித்தால், இந்த செயல் மிக நிதானமாக நடைபெறும். ஆகவே விரைவில் ஆறாது.

 சரும நோய்கள் :

சரும நோய்கள் :

சரும நோய்கள் புகைப்பிடிப்பதால் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நொகோடினின் பக்க விளைவால் உண்டாகும் சரும வியாதிகளில் ஒன்று சோரியாஸிஸ்.

 சருமப் புற்று நோய் :

சருமப் புற்று நோய் :

சருமப் புற்று நோய் வருவதற்கான சாத்தியங்கள் புகைப்பிடிப்பதால் உண்டாகும். சருமத்தின் துளைகளிலேயே ரசாயங்களின் தேக்கம் அதிகமாகிவிடுவதால் அவற்றின் விளைவா சருமப் புற்று நோயும், ரத்தப் புற்று நோயும் வரும் வாய்ப்புகள் அதிகம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 dangerous changes that Smoking causes to your skin

7 dangerous changes that Smoking causes to your skin
Story first published: Wednesday, May 24, 2017, 16:04 [IST]
Desktop Bottom Promotion