முகத்தில் இருக்கும் மச்சத்தை நீக்கும் எளிய வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்

Written By: Hemalatha
Subscribe to Boldsky

சிலருக்கு மச்சம் போன்று முகத்தில் ஆங்காங்கே கருப்பாக புள்ளிகள் இருக்கும். இதனை மச்சம் என்றும் வகைப் படுத்த முடியாது. பிறந்ததிலிருந்தே இருக்கும்.

இவை முகத்தின் அழகை கெடுப்பது போல உணர்கிறீர்களா? அவற்றை பார்லர் சென்று வலியினை தாங்கிக் கொண்டு நீக்க வேண்டுமென்பது இல்லை. வீட்டிலேயே தொடர்ந்து சில எளிய வழிகளை மேற்கொண்டால், நாளடைவில் மறைந்துவிடும். அவைகள் வலியினை தராது. பக்க விளைவுகளற்றது.

Natural remedies to get rid of birth marks

ஐஸ் மசாஜ் :

ஐஸ் சருமத்தை இறுக்கமடையச் செய்யும். சுருக்கங்களை போக்கும். சில ஐஸ்துண்டுகளை ஒரு துணியில் கட்டி,மச்சங்களின் மீது தடவுங்கள். தினமும் 2 முறை செய்து கொண்டே வாருங்கள். நாளடைவில் அதன் அடர்தன்மை குறைந்து மறைந்துவிடும்.

Natural remedies to get rid of birth marks

ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் முழுமையாக அவற்றை நீக்காது. ஆனால் அவற்றின் நிறத்தை வெளிரச் செய்யும். ஆலிவ் எண்ணெயை வெதுவெதுப்பாக மச்சங்கள் இருக்குமிடத்தில் தடவுங்கள். நாளடைவில் அதன் நிறம் குறைந்துவிடும். சருமத்தின் நிறமும் கூடும். மிருதுத்தன்மையை தரும்.

Natural remedies to get rid of birth marks

விட்டமின் ஈ நிறைந்த ஆரஞ்சு எண்ணெய் :

விட்டமின் ஈ எண்ணெயை சருமத்தில் தடவினால், நல்ல மாற்றங்கள் கிடைக்கும். குறிப்பாக ஆரஞ்சு எண்ணெய் அவற்றின் மீது வேகமாக செயல்படுகிறது.

தினமும் காலை, மாலை ஆரஞ்சு எண்ணெயை மச்சங்களின் மீது தடவி வந்தால் மறைந்துவிடும். விட்டமின் ஈ நிறைந்த உணவுகளை உண்டாலும் சீக்கிரம் பலன் கிடைக்கும்.

Natural remedies to get rid of birth marks

எலுமிச்சை :

எலுமிச்சை சாறில் சிறிது பால் கலந்து மச்சங்களின் மீது தடவி வாருங்கள். வேகமாய் அவற்றின் மீது செயல்படும். சீக்கிரம் பலன் தரும்.

Natural remedies to get rid of birth marks

விட்டமின் நிறைந்த பழங்கள் :

ஆப்ரிகாட், கிவி பழங்களின் சதைப்பகுதியை முகத்தில் தடவி வந்தால் நாளடைவில் மச்சங்கள் மறைந்துவிடும். அதேபோல் நிறைய விட்டமின் சத்து அடங்கியுள்ள வாழைப்பழம், வெள்ளரி ஆகியவற்றையும் மசித்து போட்டால் முகத்தின் கரும்புள்ளிகள் மறையும்.

Natural remedies to get rid of birth marks

தக்காளி சாறு :

தக்காளி சாறில் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைய உள்ளது. சரும செல்களின் பாதிப்பை குறைக்கும். இவற்றை மச்சங்களின் மீது தினமும் போட்டு வந்தால், விரைவில் பலன் கிடைக்கும்.

English summary

Natural remedies to get rid of birth marks

Natural remedies to get rid of birth marks
Subscribe Newsletter