For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் உண்டாகும் பருக்களை போக்க வைப்பது எப்படி?

|

முகத்தில் மட்டும் பருக்கள் வரும் என நினைத்தால் தவறு. இது பேக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் உண்டாகும் தொற்று.

உடல் முழுவதும் வரும். சிலருக்கு வேர்க்குரு போல் இருக்கும். சிலருக்கு முகப்பரு போல இருக்கும். அதிகமாக முதுகிலும் கழுத்திலும் உண்டாகும்.

இதற்கு அதிகப்படியான எண்ணெய் சுரப்பதாலும், சருமத் துவாரங்களில் அழுக்குகள் அடைத்துக் கொள்வதாலும் வரும்.

சிலர் உடல் முழுவதும் பவுடர் பூசிக் கொள்வார்கள். அதனாலும் உண்டாகும். அதை போக்க சில எளிய குறிப்புகள் இங்கே உள்ளன. பயன்படுத்திப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சமையல் சோடா :

சமையல் சோடா :

சமையல் சோடா அதிகப்படியான எண்ணெயை தடுக்கும். நீரில் சிறிது சமையல் சோடாவில் நீர்கலந்து உடல் முழுவதும் பூசி தேயுங்கள். சில நிமிடங்கள் கழித்து குளிக்கவும்.

 பட்டைபொடி :

பட்டைபொடி :

பட்டைப் பொடியில் சிறிது தேன் கலந்து உடலில் எங்கு அதிகம் பருக்கள் இருக்கிறதோ அங்கு தடவுங்கள். 10 நிமிடம் கழித்து குளிக்கவும். தினமும் செய்து வந்தால் உடலிலுள்ள பருக்கள் மறைந்து மெருகேறும்.

 தேயிலை மர எண்ணெய் :

தேயிலை மர எண்ணெய் :

தேயிலை மர எண்ணெயை சில துளிகள் பாடி வாஷுடன் கலந்து குளித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். இது ஒரு அற்புத கிருமி நாசினி.

சோற்று கற்றாழை :

சோற்று கற்றாழை :

சோற்றுக் கற்றாழையிலுள்ள சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள் கலந்து உடல் முழுக்க பூசி குளித்தால் ஒரே வாரத்தில் உடலில் உண்டாகும் பருக்கள் மறைந்துவிடும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை :

எலுமிச்சை மற்றும் சர்க்கரை :

எலுமிச்சை சாறு ஒரு மூடி எடுத்து அதில் சிறிது சர்க்கரை கலந்து உடலில் தேயுங்கள். விரைவில் பருக்கள் மறைந்து சருமம் மிளிரும். அதோடு உடலில் உண்டாகும் கரும்புள்ளிகளும் மறைந்து சருமம் மிருதுவாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get rid of body acne

Use these home remedies to cure body acne. Simple and effective methods
Story first published: Wednesday, September 21, 2016, 17:23 [IST]
Desktop Bottom Promotion