குளிர் காலத்துலயும் சருமம் பட்டு போல மாறனுமா? இந்த ஹெர்பல் க்ரீம் யூஸ் பன்ணுங்க

Written By:
Subscribe to Boldsky

கருப்போ சிவப்போ சருமம் மெருகாக இருந்தால் மட்டுமே அழகு வெளிப்படும்.

சருமம் சிலருக்கு தொட்டால் கடினமாக இருக்கும். வறண்டு போய், சொரசொரப்புடன் இருந்தால் எப்படி பொலிவு வரும்.

அதனால்தான் சிலபேர் அழகாய் இருந்தாலும் அவர்களிடமிருக்கும் அழகு வெளிபடுவதில்லை.

குறிப்பாக குளிர்காலத்தில் சருமம் எல்லாருக்குமே வறண்டு போய் சுருக்கங்களுடன் இருக்கும்.

சருமத்தை மெருகேற்ற தகுந்த ஈரப்பதத்துடன் இருக்க போல்ட்ஸ்கை இங்கே பல அழகுக் குறிப்புகளை தருகிறது. உபயோகித்துப் பாருங்கள். பட்டு போல சருமம் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஷியா பட்டர் :

ஷியா பட்டர் :

விட்டமின் ஈ கேப்ஸ்யூலிலிருந்து எண்ணெயை எடுத்து அதில் ஷியா பட்டரை கலக்குங்கள். சரும க்ரீம் தயார்.

இதனை ஒரு காற்று பூகாத கண்டெயினரில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதனை குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் பூசி 15 நிமிடம் கழித்து குளிக்கலாம்.

கோகோ பட்டர் :

கோகோ பட்டர் :

கோகோ பட்டர் சாக்லெட் வாசனையில் இருக்கும். சருமத்திற்கு அருமையாக போஷாக்கை அளிப்பவை.

இந்த கோகோ பட்டரை வாங்கி அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் கலந்து ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தேவைப்படும்போது உடலில் பூசி 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.

தேங்காய் எண்ணெய் மற்றும் லாவெண்டர் :

தேங்காய் எண்ணெய் மற்றும் லாவெண்டர் :

சுத்தமான தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் சில துளி லாவெண்ண்டர் வாசனை எண்ணெயை கலந்து கொள்ளுங்கள். இதனை உடல் முழுவதும் த்டவி குளித்தால் புத்துணர்வு கிடைக்கும். வியர்வை உண்டாகாது.

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆரஞ்சு எண்ணெய் :

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆரஞ்சு எண்ணெய் :

உடலில் ஈரப்பதம் அதிக நேரம் நீடிக்கச் செய்யும். அதோடு இதன் நறுமணமும் மிதமாக இருக்கும். தேங்காய் எண்ணெயில் சில துளி ஆரஞ்சு வாசனை எண்ணெயை கலந்து இந்த க்ரீமை உடலில் பூசி குளித்துன் பாருங்கள். வாசனையுடன் வலம் வருவீர்கள்.

ஷியா பட்டர் மற்றும் தேயிலை மர எண்ணெய் :

ஷியா பட்டர் மற்றும் தேயிலை மர எண்ணெய் :

சரும அலர்ஜி வியாதிகளுக்கும் சிறந்த மருந்தாக இந்த க்ரீம் இருக்கும். வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு இது நல்ல தீர்வை தரும்.

ஷியாபட்டரை எடுத்து அதில் சில துளி தேயிலை மர எண்ணெயை கலந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 எலுமிச்சை எண்ணெய்:

எலுமிச்சை எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் சில துளி எலுமிச்சை வாசனை எண்ணெயை கலந்து கொள்ளுங்கள்.

இது எண்ணெய் சருமம் இருப்பவர்களுக்கு நல்லது. ஈரப்பதம் குளிர்காலந்த்தில் அதிக நேரம் நீட்டிக்கச் செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade herbal butter to nourish skin

Homemade herbal butter to make your skin soft and nourish your skin
Story first published: Tuesday, October 4, 2016, 7:00 [IST]
Subscribe Newsletter