விடுமுறை நாட்களில் முகப்பொலிவை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

உங்கள் முகும் பொலிவிழந்து சோர்வாக உள்ளதா? முகத்தில் கரும்புள்ளிகள், வறட்சி, சுருக்கங்கள், கருமையான படலம் போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியெனில் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கு இந்த ஒரு பொருள் நல்ல தீர்வை வழங்கும்.

அது வேறொன்றும் இல்லை கேரட் தான். கேரட்டில் உள்ள பீட்டா-கரோட்டீன் என்னும் அத்தியாவசிய பொருள், சரும செல்களுக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சரும பிரச்சனைகளை விரைவில் போக்கும்.

Homemade Carrot Face Masks For Glowing Skin!

மேலும் கேரட்டில் உள்ள வைட்டமின்களான ஏ, டி மற்றும் கே ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளாக மாறி, சருமத்தின் கொலாஜன் அளவை ஊக்குவித்து, சருமத்தின் நெகிழ்வுத் தன்மையையும் அதிகரிக்கும்.

இங்கு கேரட்டை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் சரும பிரச்சனைகள் நீங்கும் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன்படி பின்பற்றினால், சருமத்தில் உள்ள பிரச்சனைகள் சீக்கிரம் போய்விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொலிவான முகத்தைப் பெற...

பொலிவான முகத்தைப் பெற...

கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி ஒருமுறை செய்தாலே நல்ல மாற்றம் சருமத்தில் தெரியும்.

சரும சுருக்கத்தைப் போக்க...

சரும சுருக்கத்தைப் போக்க...

கேரட்டை அரைத்து அதன் சாற்றினை தனியாக எடுத்துவிட்டு, அந்த சக்கையை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன், 2 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் எண்ணெய் மற்றும் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் போல் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனால் சரும சுருக்கம் நீங்கிவிடும்.

கருமையைப் போக்கும் மாஸ்க்

கருமையைப் போக்கும் மாஸ்க்

2 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் 1 டேபிள் ஸ்ழுன் கேரட் ஜூஸ சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீர் பயன்படுத்தி சிறிது நேரம் ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை போய்விடும்.

வறட்சியான சருமத்தினருக்கு...

வறட்சியான சருமத்தினருக்கு...

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

எண்ணெய் பசை சருமத்தினருக்கு...

எண்ணெய் பசை சருமத்தினருக்கு...

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவுடன், 1 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீர் பயன்படுத்தி சிறிது நேரம் ஸ்கரப் செய்து கழுவ, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை, இறந்த செல்கள் நீங்கிவிடும்.

பிரகாசமான முகத்தைப் பெற...

பிரகாசமான முகத்தைப் பெற...

ஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை தனியாக எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் கேரட் ஜூஸ் மற்றும் வெள்ளைக்கருவிற்கு சரிசம அளவில் தயிரை எடுத்துக் கொண்டு நன்கு அடிக்க வேண்டும். பின் அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் வெயிலால் கருமையான முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade Carrot Face Masks For Glowing Skin!

Listed in this article are homemade carrot masks. If brighter, clearer and toned skin is what you want, try these herbal carrot masks.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter