முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

சிலருக்கு முகம் மற்றும் சருமத்தின் சில இடங்களில் கருமையான படலம் போன்று இருக்கும். இந்த கருமை படலம் வெயிலில் அதிகம் சுற்றினால், சுற்றுச்சூழல் மாசுக்கள், வயது அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றால் ஏற்படும்.

Home Remedies To Get Rid Of Dark Skin Patches

இப்படி ஏற்படும் கருமையான படலத்தைப் போக்க பலரும் காஸ்மெட்டிக் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் காஸ்மெட்டிக் பொருட்களை தொடர்ச்சியாக பயன்படுத்தினால், அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே இயற்கை வழிகள் சிறந்தது.

இங்கு முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க உதவும் சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பால்

பால்

பாலை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தைத் துடைத்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ, சருமத்தில் இருக்கும் கருமையான படலம் நீங்கும்.

ஆரஞ்சு சாறு

ஆரஞ்சு சாறு

2 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் உடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இதனாலும் சருமத்தில் உள்ள கருமை அகலும்.

தயிர்

தயிர்

தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது ப்ளீச்சிங் தன்மையைக் கொண்டது. இந்த தயிருடன் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது ஓட்ஸ் பவுடர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ, கருமை நீங்கி, சருமம் குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

தக்காளி சாறு

தக்காளி சாறு

3 டீஸ்பூன் தக்காளி சாறுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்கலாம்.

தேன்

தேன்

தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்கு படலங்கள் வெளியேறி, சருமம் பளிச்சென்று மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies To Get Rid Of Dark Skin Patches

முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க சில டிப்ஸ், home remedies to get rid of dark skin patches
Please Wait while comments are loading...
Subscribe Newsletter