For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வியர்வை நாற்றமா? இதை செய்தால் நாள் முழுதும் ஃப்ரஷா இருப்பீங்க!!

|

சிலருக்கு இயற்கையகவே வியர்வை அதிகமாக சுரக்கும். அதனால் கிருமிகளால் தொற்று உண்டாகி நாற்றமும் ஏற்படுகிறது. நீங்கள் கடைகளில் விற்கும் டியோடரண்ட் உபயோகித்தாலும் அவை சில மணி நேரமே நீடிக்கும்.

உங்களை எப்போதும் புத்துணர்வாக வைக்க நினைக்கிறீர்களா? உங்கள் வியர்வை நாற்றத்தை போக்கி நாள் முழுவதும் நறுமணத்தை தரும் இந்த குறிப்புகளை படித்து உபயோகித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் :

இது உங்கள் அமில- காரத்தன்மையை சமன் செய்யும். கிருமிகளை விரட்டும். இரவில் தூங்குவதற்கு முன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு பஞ்சினால் நனைத்து உங்கள் அக்குள் பகுதிகளில் தேயுங்கள்.

மறு நாள் காலையில் அதனை கழுவுங்கள். அன்று நாள் முழுவதும் கவனியுங்கள் உங்களிடம் வியர்வை நாற்றம் இருக்காது.

ஜாதி பத்திரி :

ஜாதி பத்திரி :

இது கிருமிகளை கொல்லும். வியர்வை அதிகமாக சுரப்பது கட்டுப்படுத்தும். ஒரு கப் நீரை கொதிக்க வைத்து கை நிறைய ஜாதி பத்திரியை போடுங்கள். அதில் தேயிலை மர எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சில துளிகள் விடவும்.

ஜாதி பத்திரி :

ஜாதி பத்திரி :

பின்னர் அதனை ஆற வைத்ததும் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கொண்டு அதனை டியோடரன்ட் போல உபயோகிக்கவும். நாள் முழுவதும் நறுமணம் வீசும்.

கடல் உப்பு :

கடல் உப்பு :

கடல் உப்பு அதிக வியர்வையை கட்டுப்படுத்தும். நாற்றத்தை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். நீங்கள் குளிக்கும் டப்பில் 1 ஸ்பூன் க்டல் உப்பு மற்றும் சில துளி லாவெண்டர் போன்ற வாசனை எண்ணெய் கலந்து குளியுங்கள்.

தக்காளி :

தக்காளி :

தக்காளி சருமத்திலுள்ள அழுக்கை அகற்றும். வியர்வையை போக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

மிகவும் வியர்வை நாற்றம் ஏற்படுபவர்கள் தக்காளி சதைபகுதியை எடுத்து அக்குள் பகுதில் தேய்த்து 10 நிமிடங்களுக்கு பிறகு கழுவவும். வியர்வை நாற்றம் வராது.

 உருளைக் கிழங்கு :

உருளைக் கிழங்கு :

மிகவும் எளிமையான அதே சமயம் பலனளிக்கக் கூடியது. குளிக்க செல்வதற்கு முன் உருளைக் கிழங்கை துண்டாக்கி அக்குள் பகுதியில், தேயுங்கள். 10 நிமிடம் பிறகு குளிக்கவும்.

தே நீர் :

தே நீர் :

பால் கலக்காத வரத் தேநீர் தயார் செய்து அதனை வியர்வை அதிகம் வரும் கழுத்து, அக்குள் பகுதிகளில் தடவுங்கள் 15 நிமிடம் கழித்து கழுவிப் பாருங்கள்.

தேயிலையிலுள்ள டேனின் என்ற பொருள் வியர்வை சுரப்பியை கட்டுப்படுத்தும். நாற்றத்தை தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home remedies to get rid of under arm sweating

Natural solutions to prevent under arm sweating
Desktop Bottom Promotion