இச்செயலை வாரத்திற்கு ஒருமுறை செய்தால், 10 வயச குறைச்சு இளமையா காட்டலாம்!

Posted By:
Subscribe to Boldsky

இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தில் ஏராளமான மக்கள் காணப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களுடன், நச்சுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலும், முறையற்ற சரும பராமரிப்புக்களும் தான். இதனால் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை ஏற்பட்டு, ஒருவரை வேகமாக முதுமையானவராக வெளிக்காட்டுகிறது.

சரி, ஜப்பானிய மக்கள் எப்படி நீண்ட நாட்கள் இளமையுடன் காட்சியளிக்கிறார்கள் என்று தெரியுமா? அதற்கு முக்கிய காரணம் காலங்காலமாக அரிசியைக் கொண்டு சருமத்தைப் பராமரிப்பதால் தான்.

இங்கு நம் ஜப்பானிய மக்கள் தங்கள் இளமையைத் தக்க வைக்க பின்பற்றும் வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதனை வாரத்திற்கு ஒருமுறை பின்பற்றினால் இளமையைத் தக்க வைக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி பொருட்கள்

அரிசி பொருட்கள்

நெல் தவிடு எண்ணெய், நெல் தவிடு பவுடர் மற்றும் அரிசி தண்ணீர் போன்றவை சருமத்தின் அமைப்பை மாற்றும் மற்றும் பொலிவான சருமத்தைப் பெற உதவும். அதாவது சருமம் மென்மையாகவும், கரும்புள்ளிகள் ஏதும் இல்லாமல் சுத்தமாகவும் இருக்கும்.

கொலாஜென் உற்பத்தி

கொலாஜென் உற்பத்தி

அரிசியில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லினோலியிக் அமிலம், சருமத்தில் கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் தடுக்கப்படும்.

சரும பாதுகாப்பு

சரும பாதுகாப்பு

அரிசியில் உள்ள ஸ்குவாலென் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், சூரியக்கதிர்களில் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும். அதுமட்டுமின்றி, அதில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் காமா ஒரேசனால், இதயத்தை ஆரோக்கியமாகவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் உதவும்.

அரிசி ஃபேஸ் பேக்கிற்கு தேவையான பொருட்கள்

அரிசி ஃபேஸ் பேக்கிற்கு தேவையான பொருட்கள்

அரிசி - 3 டேபிள் ஸ்பூன்

பால் - 1 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

செய்முறை

முதலில் அரிசியை நீரில் போட்டு நன்கு வேக வைத்த பின், நீரை வடித்து தனியாக வைத்துவிட்டு, சாதத்தில் பாலை சூடேற்றி ஊற்றி நன்கு கலந்து, தேனையும் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவி உலர வைத்து, பின் அரிசி வேக வைத்த நீரால் கழுவ வேண்டும்.

அரிசி தண்ணீரின் நன்மைகள்

அரிசி தண்ணீரின் நன்மைகள்

அரிசி தண்ணீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும், இரத்த ஓட்டம் மேம்படும், முதுமை சம்பந்தப்பட்ட அறிகுறிகள் தடுக்கப்படும். முக்கியமாக சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.

குறிப்பு

குறிப்பு

இந்த செயலை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், நீங்கள் உங்கள் வயதில் இருந்து 10 வயது குறைந்து, இளமையானவராக காட்சியளிப்பீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Do This Atleast Once A Week And Your Face Will Look 10 Years Younger

Here we will give you a recipe of a rice based mask that softens wrinkles and makes your skin glow. Read on to know more...
Story first published: Thursday, June 2, 2016, 12:25 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter