வெயிலில் அதிகம் சுற்றி சருமம் ரொம்ப எரியுதா? இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

என்ன தான் கோடைக்காலம் ஆரம்பித்தாலும், கொளுத்தும் வெயிலில் சுற்றாமல் இருக்க முடியுமா என்ன? ஆனால் அப்படி வெயிலில் அதிகம் சுற்றினால், சருமத்தில் சூரியக்கதிர்கள் தொடர்ந்து பட்டு, சருமத்தின் நிறம் சிவப்பு கலந்த கருமையாகும்.

அதுமட்டுமின்றி, சருமம் எரிய ஆரம்பிக்கும். இதற்கு சூரியக்கதிர்களால் சருமம் காயமடைந்துள்ளது என்று அர்த்தம். ஆகவே சூரியக்கதிர்களால் சருமம் பாதிக்கப்படாமல் இருக்க, சருமத்திற்கு போதிய பாதுகாப்புக்களை வழங்க வேண்டும்.

மேலும் சூரியக்கதிர்களால் பாதிக்கப்பட்ட சருமத்தை சரிசெய்ய, கீழே ஒரு சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளியல்

குளியல்

வெயிலில் சுற்றி சருமம் புண்ணாகி இருந்தால், குளிக்கும் நீரில் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து குளித்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை தினமும் சருமத்திற்கு தடவி வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புத்துயிர் பெற்று, சூரியக்கதிர்களால் பாதிப்படைந்த சருமம்

குளிர்ச்சியடையும்.

பால்

பால்

பால் கொண்டு அன்றாடம் முகம் மற்றும் பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி ஊற வைத்து, கழுவி வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் சரும அழகை அதிகரிக்க உதவும் வைட்டமின் ஈ வளமாக நிறைந்துள்ளது. ஆகவே இதனைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ப்ளாக் டீ

ப்ளாக் டீ

ப்ளாக் டீயில் டானிக் ஆசிட் வளமாக நிறைந்துள்ளது. எனவே இதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ, சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் குளிர்ச்சி தன்மை அதிகம் இருக்கிறது. எனவே இதனை அரைத்து முகம் மற்றும் கழுத்திற்கு மாஸ்க் போட்டு வாருங்கள்.

குறிப்பு

குறிப்பு

இருப்பதிலேயே சிறந்த நிவாரணி 'வருமுன் காப்பதே சிறந்தது' என்னும் பழமொழிக்கு ஏற்ப, வெளியே வெயிலில் செல்லும் முன் சன் ஸ்க்ரீன் பயன்படுத்தி, நல்ல காட்டன் ஆடைகளை உடுத்தி, சருமம் வெளியே வெயிலில் அதிக நேரம் படாதவாறு பார்த்துக் கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Sunburn Treatment

There is a wide variety of home remedies that are used to relieve the symptoms of sunburn. Check out our top 10 tips to cool that sunburn!
Story first published: Tuesday, April 14, 2015, 15:34 [IST]
Subscribe Newsletter