நிமிடத்தில் சரும பொலிவை அதிகரிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் அழகு மிகவும் முக்கியமான ஒன்றாக மக்களால் கருதப்படுகிறது. எவ்வளவு தான் உள்ளத்தில் நல்லவராக இருந்தாலும், அவர் வெளித்தோற்றத்தில் மோசமாக காணப்பட்டால், யாரும் மதிக்கமாட்டார்கள். அவ்வளவு மோசமாகிவிட்டது, நம் உலகம்.

நமது அழகை சுற்றுச்சூழல் மாசுபாடும், மோசமான காலநிலையும் திருடிச் செல்கின்றன. திருடிச் செல்லப்பட்ட அழகை மேக்கப் மூலம் தற்காலிகமாக வெளிக்காட்டுகிறோம். இப்படியே எத்தனை நாட்கள் தான் மேக்கப் சாதனங்களை நம்பிக் கொண்டிருப்பீர்கள். மேலும் இப்படி மேக்கப்பை அதிகம் சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும்.

எனவே சருமத்தின் அழகை உடனடியாக அதிகரித்து புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும் சில எளிய வழிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ மாஸ்க்

டீ மாஸ்க்

சிறிது நீரில் 2 டீஸ்பூன் தேநீர் இலைகளைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

எலுமிச்சை மற்றும் சர்க்கரை

2 டீஸ்பூன் சர்க்கரையில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையைக் கொண்டு, முகம், கை, கால்களில் மசாஜ் செய்து 7 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, அப்பகுதிகளில் உள்ள இறந்த செல்கள் முழுவதும் வெளியேறி, உடனடி பொலிவு கிடைக்கும்.

ஆரஞ்சு மாஸ்க்

ஆரஞ்சு மாஸ்க்

சிறிது ஆரஞ்சு தோலை அரைத்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழுத்து, குளிர்ந்த நீரில் கழுவ, சருமம் பளிச்சென்று காணப்படும்.

மஞ்சள் தூள் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

மஞ்சள் தூள் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்

1 டீஸ்பூன் மஞ்சள் தூளை ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ, நல்ல பலன் கிடைக்கும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அதில் முல்தானி மெட்டி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் முகத்தைக் கழுவ, முகத்தின் நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை துண்டுகளாக்கி, அந்த துண்டுகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவினால், உடனடிப் பொலிவைப் பெறலாம்.

மல்லிகை

மல்லிகை

மல்லிகைப் பூக்களை அரைத்து, அதில் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து, அக்கலவைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து 10 நிமிடம் கழித்து கழுவ, முகம் பிரகாசமாக காணப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies For Instant Glow

Flawless skin isnt just a boon. It can also be a result of thoroughly followed skin care routines. Of course, when you are too busy and when you expose...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter