For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலைக்கு செல்லும் பெண்களா நீங்க? சருமத்தையும் கவனிங்க!!!

By Maha
|

Working Woman
இன்றைய காலத்தில் வேலைக்கு செல்லாமல் எந்த பெண்ணும் இருக்க முடியாது. ஏனெனில் அதற்கு ஏற்றவாறு விலைவாசிகள் அனைத்தும் தாறுமாறாக ஏறிக்கொண்டிருக்கிறதே காரணமாகும். அவ்வாறு வேலைக்கு செல்வதால் பெண்களால் தங்களது சருமத்தை சரியாக பராமரிக்க முடியவில்லை. இதனால் மென்மையான சருமமானது, சிறிது காலம் கழித்துப் பார்த்தால், அழுக்குப் படிந்து, கருமை நிறத்தை அடைந்துவிடுகின்றனர். மேலும் அவர்களால் சருமத்தை முறையாக பராமரிக்க முடியாததால், அவர்களுக்கு விரைவில் முகச்சுருக்கம், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படுகின்றன. ஆகவே அத்தகைய வேலைக்கு செல்லும் பெண்கள், தங்கள் சருமத்தை எளிதாக பராமரிக்க சிலவற்றை பின்பற்றினால் போதும். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* சன் ஸ்கிரீன் லோசன் : வேலைக்கு செல்கிறோம் என்றால் கண்டிப்பாக வெயிலில் செல்ல வேண்டியிருக்கும். அப்போது சூரியக் கதிர்கள் நேரடியாக சருமத்தில் படுவதால், முகத்தில் கருமையான தோற்றம், சுருக்கம் போன்றவை ஏற்படும். ஆகவே அப்போது முகத்திற்கு தடவும் சன் ஸ்கிரீன் லோசனை, வெளியே செல்லும் 30 நிமிடத்திற்கு முன் முகத்திற்கு தடவ வேண்டும. இதனால் சருமத்தில் சூரியக்கதிர்கள் பட்டாலும் அதிகமான பாதிப்பு இருக்காது.

* ஈரப்பசையான சருமம் : வேலைக்கு செல்வதால், பெண்களால் அழகுக்காக அதிகமான நேரத்தை ஒதுக்க முடியாது. அதற்கு எளிமையான வழி, ஷவரிலோ அல்லது சாதாரணமாகவோ, குளித்தப் பின்னர் மாஸ்சுரைசர் கிரீமை சருமத்திற்கு தடவி சற்று நேரம் விட வேண்டும். பின் அதன் மேல், மேக் கப் செய்தால், ஈரப்பசையானது சருமத்தில் எப்போதும் இருக்கும். அதுமட்டுமல்லாமல் சருமம் மென்மையாவதோடு, வறட்சியடையாமல், எளிதில் சுருக்கம் ஏற்படாமல் இருக்கும்.

* கிளின்ஸர் : எங்கு வெளியே சென்று வந்தாலும், முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். அப்போது பேஸ் வாஷ் கிரீமை பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள், முகக்குழிகளில் இருக்கும் அழுக்குகள் எளிதில் வந்துவிடும். அதற்காக பேஸ் வாஷ் கிரீமை பயன்படுத்தி தினமும் 4-5 முறை கழுவக் கூடாது. அவ்வாறு கழுவினால் முகத்தில் இருக்கும் செல்கள் மற்றும் திசுக்கள் பாதிப்படையும். மேலும் இவற்றால் சிலசமயங்களில் முகத்தில் வெடிப்புகள், கோடுகள் போன்றவையும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே ஒரு நாளைக்கு 3 முறை கழுவினால் போதுமானது. அதற்கு மேல் கழுவ வேண்டும் என்றால், சுத்தமான நீரில் கழுவினால் போதுமானது.

* தண்ணீர் : உடலில் ஈரத்தன்மை அதிகம்க இருக்க தினமும் அதிகமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனெனில் தண்ணீர் உடலையும், கூந்தலையும் பாதுகாக்கும். அதிலும் வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கைமுறையானது சற்று ஆரோக்கியமற்றதாக இருக்கும். ஆகவே உடலை நன்கு ஆரோக்கியமாக, அழகாக வைத்துக் கொள்ள, தண்ணீரை அதிகமாக குடித்தால், உடலில் இருக்கும் டாக்ஸின்கள் உடலில் இருந்து வெளியேறி, உடலும் நன்கு பிட்டாக இருக்கும்.

* வேலைக்கு செல்வதால், சரியாக சாப்பிடக்கூட நேரம் இல்லாமல் இருக்கும். ஆனால் நேரம் இல்லை என்பதற்காக சாப்பிடாமல் இருந்தால், உடலில் வேலை செய்வதற்கு தேவையான எனர்ஜி இல்லாமல் போகும். அதிலும் ஆரோக்கியம் இல்லாத உணவுகளான பிட்சா, பர்கர் மற்றும் பாஸ்ட் புட் உணவுகளை உண்ணக் கூடாது. அப்போது பழங்கள், காய்கள் போன்றவற்றை வாங்கி வைத்து உண்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமத்திற்கு தேவையான சத்துக்களும் கிடைத்து, அழகாக இருக்க முடியும். உயிர் வாழ்ந்தால் தானே வேலை செய்ய முடியும், ஆகவே ஆரோக்கியமான உணவுகளை உண்டு, அழகாக இருப்பதோடு, இனிமையான வாழ்க்கையையும் வாழுங்கள்.

English summary

skin care tips for working women | வேலைக்கு செல்லும் பெண்களா நீங்க? சருமத்தையும் கவனிங்க!!!

Working women seldom find out time to care for themselves. In such busy schedules, it becomes very difficult to look after their skin. This is why, early ageing, tanning and dark spots are common skin problems of working women. If you are a working lady and do not have much time to care for your skin, try these easy beauty tips that can be easily followed even in busy schedules.
Story first published: Monday, August 6, 2012, 16:57 [IST]
Desktop Bottom Promotion