For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மேக்கப் குறித்து உலகில் நம்பப்பட்டு வரும் கட்டுக்கதைகளும்... உண்மைகளும்…

மேக்கப் உலகம் முழுவதும் பரவி விட்டது. ஒரு நாகரீகமாகவே மாறிவிட்ட இந்த மேக்கப் பற்றி, அதை செய்து கொள்பவர் யாரையேனும் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் அவர்களுக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

|

பெரும்பாலானோரை கவர்ந்திழுக்கும் ஒன்று என்றால் அது ஒப்பனை. மேக்கப் என்று சொல்வார்களே அதுவே தான். ஆண்கள், பெண்கள், ஏன் குழந்தைகள் கூட இப்போது மேக்கப் செய்யாமல் வெளியே செல்வதை பார்த்திட முடியாது. அந்த அளவிற்கு மேக்கப் உலகம் பரவி விட்டது. ஒரு நாகரீகமாகவே மாறிவிட்ட இந்த மேக்கப் பற்றி, அதை செய்து கொள்பவர் யாரையேனும் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் அவர்களுக்கு முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. எந்த ஒரு விரிவான தகவலும் தெரிந்து கொள்ளாமலேயே மேக்கப் செய்து கொள்பவர்கள் தான் இந்த உலகில் அதிகம்.

Make-up Myths That You Should Not Believe

மேக்கப் பற்றி பல தவறான கருத்துக்கள் நடைமுறையில் உள்ளன. அனைவராலும் நம்பப்படும் சில விஷயங்களில் சரி எது, தவறு எது என்றே கண்டுபிடிக்க முடியாது. மேக்கப் குறித்து உலகில் நம்பப்பட்டு வரும் சில கட்டுக்கதைகளைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்வோம். இதை படித்தாவது மேக்கப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு பிறகு அதனைத் தொடருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்டுக்கதை 1

கட்டுக்கதை 1

முகம் முழுவதும் ஃபவுண்டேஷன் போட தேவையில்லை

ஃபவுண்டேஷன் என்பது மேக்கப் போடுவதற்கு முன்பு போட வேண்டியது. இது தான் மேக்கப்பிற்கு அடிப்படை. இதை போடுவதன் மூலம் முக சருமம் முழுவதும் ஒரே சீரான நிறத்தில் இருப்பதோடு, எந்தவொரு சரும பிரச்சனை அதாவது, முகப்பரு, கரும்புள்ளிகள், கறைகள் போன்றவை தெரியாமல் மறைத்துவிடும். முகத்தின் சில பகுதிகளில் மட்டும் ஃபவுண்டேஷன் போடுவதன் மூலம் மேக்கப் செய்தும் பலன் இல்லாமலேயே இருக்கும். முக்கியமாக சரும நிற மாற்றங்கள் நன்றாக தெரிய நேரிடலாம்.

கட்டுக்கதை 2

கட்டுக்கதை 2

டார்க் ஃபவுண்டேஷன் சருமத்தை கருப்பாக காட்டும்

கருப்பாக இருக்க வேண்டும் என்று சிலர் ஆசைப்பட்டு, டார்க் கலர் ஃபவுண்டேஷனை தேர்ந்தெடுத்து மேக்கப் போட்டு கொள்வர். இது தவறான செயலாகும். டார்க் ஃபவுண்டேஷன் உபயோகித்தால், தவறான ஃபவுண்டேஷனை போட்டுள்ளீர்கள் என்பது நன்றாக தெரியுமே தவிர, கருப்பாக காட்டும் என்று எண்ண வேண்டாம். எனவே, எப்போதும், உங்கள் சருமத்திற்கு ஏற்ற நிறத்திலேயே ஃபவுண்டேஷனை வாங்கி பயன்படுத்தவும்.

கட்டுக்கதை 3

கட்டுக்கதை 3

கன்சீலரை ஃபவுண்டேஷன் உடன் மட்டுமே பயன்படுத்த முடியும்

ஃபவுண்டேஷனுக்கு அடுத்தப்படியாக போட வேண்டியது கன்சீலர் இல்லை. முகப்பரு உள்ளிட்ட பிரச்சனை அதிகம் இல்லை என்றால் நீங்கள் ஃபவுண்டேஷனுக்கு பதில் கன்சீலரை மட்டுமே தாராளமாக போட்டுக் கொள்ளலாம். வெறும் முகத்தில் கன்சீலரை போடுவது தவறொன்றும் இல்லை. நிறத்திற்கு ஏற்ற கன்சீலரை தேர்ந்தெடுப்பதில் மட்டும் கவனமாக இருங்கள்.

கட்டுக்கதை 4

கட்டுக்கதை 4

புருவத்திற்கான பென்சிலை கருப்பு நிறத்தில் தேர்ந்தெடுக்கவும்

புருவத்திற்கு பென்சில் கொண்டு வடிவம் மற்றும் நிறம் கொடுப்பது மேக்கப்பில் முக்கிய பகுதி. அதற்கு பெரும்பாலானோர் கருப்பு நிறத்தையே தேர்ந்தெடுப்பர். இது தவறான செயலாகும். கருப்பு நிற புருவ பென்சில், புருவத்தை கருப்பாக காட்டுமே தவிர, அது இயற்கையாக நிறமாக இருக்காது. உங்கள் புருவ நிறத்தை விட, சற்று இலகுவான நிறத்தை தேர்ந்தெடுப்பதே நல்லது. பெரும்பாலான இந்தியர்களின் நிறத்திற்கு, டார்க் பிரவுன் நிற புருவ பென்சில் தான் ஏற்றதாக இருக்கும்.

கட்டுக்கதை 5

கட்டுக்கதை 5

சிரித்துக் கொண்டு தான் கன்னத்தில் ப்ளஷ் போட வேண்டும்

இது தவறான கருத்து என்று சொல்ல முடியாது. ஆனால், உலக அளவில் இது பின்பற்றப்படும் முறை அல்ல அவ்வளவு தான். வயதாக வயதாக சருமத்தில் தோல் சுருக்கம் ஏற்பட ஆரம்பிப்பதோடு, சரும தளர்வு, தொய்வும் ஏற்படும். அப்படி இருக்கும் போது, சிரித்துக் கொண்டு நீங்கள் ப்ளஷ் போட்டுக் கொண்டால், பின்னர் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ப்ளஷ் நிறம் இருக்காது. எனவே, தோல் தொய்வு உள்ளவர்கள், சிரிக்காமல் அப்படியே ப்ளஷ் போட்டுக் கொண்டால் நன்றாக இருக்கும்.

கட்டுக்கதை 6

கட்டுக்கதை 6

முகப்பருவிற்கு முக்கிய காரணம் மேக்கப்

மேக்கப் போடுவதால் மட்டும் முகப்பரு ஏற்பட்டுவிடாது. ஒருவேளை, நீங்கள் காலாவதியான மேக்கப் பொருட்களை பயன்படுத்தினால் முகப்பரு மட்டுமல்ல, எல்லாவித சரும பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். அதுமட்டுமல்லாது, நீண்ட நேரத்திற்கு மேக்கப் போட்டுக் கொண்டே இருந்தால் சரும சுவாசம் தடைப்பட்டு முகப்பரு ஏற்படலாம். அதேப்போல் பல அடுக்கு மேக்கப் போடுவதும் முகப்பருவை உண்டாக்கலாம்.

கட்டுக்கதை 7

கட்டுக்கதை 7

விலையுயர்ந்த மேக்கப் பொருட்களே சிறந்தது

ஒரு பொருளில் விலை மட்டுமே அதன் தரத்திற்கு உத்திரவாதம் அளித்திட முடியாது. ஏராளமான விலையுயர்ந்த மேக்கப் பொருட்கள் மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளன. மேக்கப் பொருட்கள் தேர்ந்தெடுப்பதில் சில வெற்றிகள், தோல்விகளை நீங்கள் நிச்சயம் சந்தித்திருப்பீர்கள். ஆனால், சிறந்த மேக்கப் பொருட்கள் மலிவான விலையில் கூட கிடைக்கின்றன என்பதை மறந்திட வேண்டாம்.

கட்டுக்கதை 8

கட்டுக்கதை 8

மேக்கப் கலைக்க சோப்பு கொண்டு முகத்தை கழுவ வேண்டும்

மேக்கப் போட்டுவிட்டு, அதை கலைப்பதற்காக சோப்பு கொண்டு முகத்தை கழுவினால், சருமம் சேதமடைய நேரிடலாம். சோப்புகளில் அதிகப்படியான pH அளவு உள்ளதால், அது சருமத்தின் இயற்கையான pH அளவை மாற்றிடக்கூடும். எனவே, எந்த சூழலாக இருந்தாலும், மேக்கப் கலைப்பதற்கு நல்ல மேக்கப் ரிமூவரை பயன்படுத்துவதே சிறந்தது. அதன் பிறகு முகத்தை கெமிக்கல் குறைந்த சோப்பை கொண்டு முகத்தை கழுவலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Make-up Myths That You Should Not Believe

The make-up world has many false claims and promises floating around. Today, we clear out all that for you by bursting popular make-up myths.
Story first published: Thursday, December 26, 2019, 6:54 [IST]
Desktop Bottom Promotion