For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரெட் கலர் லிப்ஸ்டிக்கை இப்படியெல்லாம் கூட யூஸ் பண்ணலாமா? இத்தன நாளா இது தெரியாம போச்சே…

சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை உதட்டில் போடுவதற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியாமா என்ன? இந்த கேள்விக்கு இல்லை என்பதே பதில்.

|

பெண்களாக பிறந்த அனைவருக்குமே லிப்ஸ்டிக் என்பது பிடிக்க தான் செய்யும். லிப்ஸ்டிக்கில் எத்தனையோ நிறங்கள் உள்ளன. ஆனால், அவை அனைத்திலுமே சற்று கம்பீரமாக, அழகாக, தனித்துவமாக தெரியும் நிறம் என்றால் சிவப்பு நிற லிப்ஸ்டிக் தான். பார்ட்டி ஆகட்டும், ஆஃபீஸ் மீட்டிங் ஆகட்டும், கோயில் விஷேசம் என அனைத்து விதமான உடை அலங்காரத்திற்கும் மேட்சிங் ஆக இருப்பது சிவப்பு நிற லிப்ஸ்டிக். உடைக்கு ஏற்ற நிறத்தில் லிப்ஸடிக் இல்லாவிட்டால் கூட, சிவப்பு நிறம் போட்டால் வித்தியாசம் எதுவும் தெரியாது.

How To Use Your Red Lipstick In Different Ways

சரி இந்த சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை உதட்டில் போடுவதற்கு மட்டும் தான் பயன்படுத்த முடியாமா என்ன? இந்த கேள்விக்கு இல்லை என்பதே பதில். பலருக்கு லிப்ஸ்டிக்கை வேறு எப்படியெல்லாம் உபயோக்கிலாம் என்ற யுக்தி தெரியாமல் இருக்கலாம். அவர்களுக்காகவே இந்த கட்டுரை பதிவிடப்படுகிறது. போகும் எல்லா இடங்களுக்கும் எல்லா மேக்கப் பொருட்களையும் எடுத்து செல்ல முடியாது அல்லவா? அந்த மாதிரியான தருணங்களில் இந்த யுக்திகளை தாராளமாக கையாளலாம். கையில் ஒரே ஒரு சிவப்பு நிற லிப்ஸ்டிக் இருந்தால் போதுமானது. வாருங்கள், இந்த மேக்கப் யுக்திகளை நாமும் தெரிந்து கொள்வோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கன்சீலர்

கன்சீலர்

கன்சீலர் என்றாலே, முகத்தில் ஆங்காங்கே உள்ள சிறு சிறு பருக்கள் மற்றும் கருமைகளை மறைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், லிப்ஸ்டிக்கை கூட ஒரு கன்சீலராக பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு, முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் லிப்ஸ்டிக்கை தடவி மறைக்க வேண்டும். மிகவும் லேசாக தடவினால் போதும். அதிகமாக தடவி விடாதீர்கள். லிப்ஸ்டிப் அதிகமாக தடவி விட்டால் கன்சீலர் கொண்டு அதை மறைப்பது கடினமாகிவிடும். லிப்ஸ்டிக் தடவிய பின்னர், அதன் மீது இப்போது சரும நிறத்திற்கு ஏற்ற நிறத்தில் கன்சீலரை தேய்க்கவும். இந்த முறையில் லிப்ஸ்டிக் தடவி மேக்கப் போட்டு பாருங்கள் பின்னர் தெரியும்.

லிப் பாம்

லிப் பாம்

உங்களது சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை லிப் பாமாக கூட மாற்றலாம். சிவப்பு நிற லிப்ஸ்டிக் உபயோகித்து சலிப்படைந்துவிட்டால், அதனை பயன்படுத்தி ஒரு லிப் பாம் செய்யுங்கள். அதற்கு, சிறிதளவு கொக்கோ பட்டரை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். அதனோடு, சிறிது லிப்ஸ்டிக்கை சேர்த்து அவை உருகும் வரை சூடு படுத்தவும். சூடு ஆறிய பின்பு, அதனை ஒரு டப்பாவில் ஊற்றி வைத்துக் கொள்ளவும். இப்போது சூப்பரான புதிய லிப் பாம் ரெடி.

புது நிற லிப்ஸ்டிக்

புது நிற லிப்ஸ்டிக்

பெண்களுக்கு பெரும்பாலும் ஏற்படக்கூடிய பிரச்சனை என்னவென்றால், ஒரே நிற லிப்ஸ்டிக்கை வாரம் முழுவதும் அல்லது அடிக்கடி பயன்படுத்தி நேரிடுவது. எவ்வளவு பயன்படுத்தினாலும் லிப்ஸ்டிக் அவ்வளவு சுலபமாக காலி ஆகாது. எனவே, அதற்கான ஒரு சுலபமான வழியை தெரிந்து கொள்வோமா? அது தான் மீதமுள்ள அல்லது அடிக்கடி பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை வேறு நிறத்தோடு கலந்து புது நிறத்தை உருவாக்குவது. லிப் பாம் தயாரித்த அதே முறையில், இரு நிறங்களை கலந்து புது நிற லிப்ஸ்டிக்கை தயாரிக்கலாம். லிப்ஸ்டிக்கிற்கு எப்போதும், பிரஷை காட்டிலும் டியூப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றை பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும்.

ப்ளஷ்

ப்ளஷ்

லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவதற்கான அற்புதமான மற்றொரு வழி என்றால் ப்ளஷ் தான். அதனை பயன்படுத்துவதன் மூலம், கன்னங்களுக்கு இயற்கை பொலிவு கிடைத்தது போன்ற தோற்றமளிப்பதோடு, கரும்புள்ளிகளும் மறைந்திடும். இதற்கு, சிறிது சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தொட்டு, கைகளாலேயே கன்னங்களில் தடவி, மேக்கள் பிரஷ் உபயோகித்து பரப்பி விட வேண்டும். பின்னர், பவுடர் போட்டுக் கொள்ளவும். ப்ளஷ் இல்லாத சமயங்களில் லிப்ஸ்டிக்கை இப்படி உபயோகிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஐ ஷேடோ

ஐ ஷேடோ

சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை ஐ ஷேடோவாக உபயோகித்தால் அட்டகாசமாக இருக்கும். அடர்த்தியான சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை உதட்டிற்கும் போட்டுக் கொண்டு, கண்களுக்கும் போட்டு கொள்ளலாம். கைகளால் அல்லது பிரஷ் உபயோகித்து ஐ ஷேடோ போட்டு கொள்ளலாம். அதன் மேல் ஹைலைட்டல் அல்லது கிளிட்டர் போன்றவை கூட உபயோகித்து கொள்ளலாம். லிப்ஸ்டிக்கை இப்படி உபயோகிப்பது நிச்சயம் ஓர் அற்புதமான அழகான வித்தியாசத்தை காட்டும்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில், அவசர வேளைகளில் லிப்ஸ்டிக்கை நீங்கள் வேறு விதத்தில் கூட உபயோகித்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது, சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தவிர, பயன்படுத்தாத, மீதமுள்ள லிப்ஸ்டிக்குகளை கூட இப்படி உபயோகிக்கலாம். வீணாக தூக்கி எறிவதற்கு பதில் இப்படி செய்வதால், புதிய நிறத்திலான மேக்கப் பொருட்கள் கிடைத்தது போல் இருக்கும் அல்லவா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Your Red Lipstick In Different Ways

Want to know how to use red lipstick in different ways? Read on...
Desktop Bottom Promotion