For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளை முடி புருவத்தில் வந்தால் எப்படி கருமை ஆக்குவது..? #டாப் 7 டிப்ஸ்

|

இந்தியர்களின் முடியின் நிறம் கருப்பு என்பது நம் மனதில் ஆழமாக பதிந்து உள்ளது. கருப்பை தவிர வேறு எந்த நிறத்தில் நமது முடி மாறினாலும் நம்மால் தாங்கி கொள்ளவே முடியாது. தலை முடி கருமையாக இல்லையென்றாலே நாம் கவலைக் கிடமான நிலைக்கு வந்து விடுவோம். இதே வெள்ளை முடி நமது முகத்தில் இருக்க கூடிய புருவத்தில் வந்தால் என்னவாகும் என்பதை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

வெள்ளை முடி புருவத்தில் வந்தால் எப்படி கருமை ஆக்குவது..? #டாப் 7 டிப்ஸ்

பலருக்கும் இது மிக மோசமான அனுபவத்தை தர கூடும். இப்படி புருவத்தில் நரை முடி உருவாவதற்கு பலவித காரணிகள் உண்டு. நரைகள் ஏற்பட்டால் அவ்வளவு சீக்கிரத்தில் நம்மால் அதனை போக்கி விட முடியாது. இதற்கு இந்த பதிவில் கூறும் ஒரு சில வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தி நம்மால் தீர்வை பெற இயலும். இவை அனைத்துமே பல ஆண்டுகளாக நம் முன்னோர்கள் பின் பற்றி வந்த குறிப்புகள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் நரை..?

ஏன் நரை..?

பொதுவாக முடி கருமையாக மெலனின் என்கிற நிறமி தான் காரணம். இதன் அளவு குறைந்தால் உங்களின் முடி வெள்ளையாக மாற தொடங்கும். நாம் செய்கின்ற ஒரு சில அன்றாட பழக்க வழக்கங்கள் தான் இந்த நிலைக்கு முக்கிய காரணமாக உள்ளது. நரை முடி வந்து விட்டால் அவ்வளவு எளிதில் இதை போக்கவும் முடியாது.

காரணிகள்..?

காரணிகள்..?

இளம் வயதிலே முடி நரைத்து போக சில காரணிகள் உள்ளன. அவற்றில் சில...

- புகை பழக்கம்

- வைட்டமின் டி குறைபாடு

- மரபணு ரீகியாக

- ஊட்டசத்து குறைபாடு

- மாத்திரை தொடர்ந்து எடுத்து கொள்ளுதல்

எளிய வழி

எளிய வழி

வெள்ளை முடியாக உள்ள உங்கள் புருவத்தை மிக எளிதில் கருமையாக மாற்றலாம். இதற்கு குறிப்பில் கூறுவது போன்று செய்து வந்தாலே போதும்.

தேவையான பொருட்கள்..

பிளாக் டீ

பிளாக் காபி

செய்முறை :-

செய்முறை :-

முதலில் பிளாக் டீ மற்றும் பிளாக் காபியை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இதனை புருவத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து புருவத்தில் உள்ள இந்த ஐப்ரோ பேக்கை பஞ்சை வைத்து துடைத்து விடலாம். இந்த குறிப்பை பயன்படுத்தும் போது கண்ணில் படாதவாறு பார்த்து கொள்ளவும்.

MOST READ:15 பீர் பாட்டிலை வைத்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..! அபூர்வமாக உயிர் தப்பிய அந்த நபர் யார்..?

எண்ணெய் வைத்தியம்

எண்ணெய் வைத்தியம்

தினமும் 2 முறை ஆமணக்கு எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை புருவத்தில் தடவி வந்தால் இளம் வயதில் நரைத்தல் நிகழ்வு தடை செய்யப்படும். மேலும், புருவம் கரு கருவென வளரவும் இந்த குறிப்பு உதவும்.

நெல்லி

நெல்லி

தலை முடியின் வளர்ச்சிக்கு எப்படி நெல்லிக்காய் உதவுகிறதோ அதே போன்று புருவ முடிக்கும் இது நல்ல தீர்வை தருகிறது. நெல்லியை வேக வைத்து அரைத்து கொண்டு புருவத்தில் தடவினால் புருவத்தில் உள்ள வெள்ளை முடிகள் கருமை பெறும். இதற்கு காரணம் இதில் உள்ள வைட்டமின் சி போன்ற தாதுக்கள் தான்.

சூரிய ஒளி

சூரிய ஒளி

இந்த பூமியில் இருக்க கூடிய எல்லா வவித இயற்கை பொருட்களும் நமக்கு அதிக பயனை தரக்கூடிய ஆற்றல் பெற்றவை. அந்த வகையில் சூரிய ஒளியும் அடங்கும். தினமும் 15 நிமிடம் இளம் வெயிலில் இருந்தாலே இது போன்ற நரை பிரச்சினை உங்களுக்கு உண்டாகாது.

வைட்டமின் பி12

வைட்டமின் பி12

நீங்கள் சாப்பிட கூடிய உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் இருந்தால் மட்டுமே அது பயனுள்ளவை. இல்லையெனில் பல வித பாதிப்புகள் உண்டாகும். வைட்டமின் பி12 அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் நரைகளின் பாதிப்பில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

MOST READ: ஒரு மாதத்திற்கு தினமும் 1 வெள்ளரிக்காய் சாப்பிட்டால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் ஏற்படும்..?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips To Get Rid Of Grey Hair On Eyebrows

Here we listed out some of the tips to get rid of grey hair on eyebrows.
Story first published: Wednesday, January 23, 2019, 17:44 [IST]
Desktop Bottom Promotion