நகங்கள் அடிக்கடி உடைகிறதா? நக பாதுகாப்பிற்கு சில் டிப்ஸ்!

Written By:
Subscribe to Boldsky

நகங்கள் கைகளின் அழகை மெருகூட்டுகின்றன. ஆனால் சிலருக்கு நகங்கள் எவ்வளவு தான் பாதுக்காப்பாக இருந்தாலும், அடிக்கடி உடைந்துவிடும். உணவு பழக்க மாற்றங்கள், ஜிங்க் பற்றாக்குறை போன்றவை உடலில் இருந்தால், அது உங்களது நகங்களின் மூலம் வெளிப்படலாம். இது போன்ற நகங்கள் உடைவதை எப்படி சரி செய்யலாம் என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

உங்களது நகங்களை எக்ஸ்ட்ரா -வெர்ஜின் ஆலிவ் ஆயிலில் தினமும் 10-15 நிமிடங்கள் நனைத்து எடுங்கள். இதனை தினமும் ஒரு மாதத்திற்கு செய்ய வேண்டியது அவசியமாகும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்யும் கூட நகங்கள் உடைவதில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. இதில் அதிகளவு ஆன்டி- ஆக்ஸிடண்டுகள் உள்ளன. மேலும் இதில் விட்டமின் இ, ஏ, பி1, பி2 மற்றும் பி6 ஆகியவை உள்ளன். சிறிதளவு பாதாம் எண்ணெய்யுடன், சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து நகங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.

கை உறை

கை உறை

பாத்திரம் கழுவும் போதும், தோட்ட வேலைகளை செய்யும் போதும் கை உறை அணிந்து கொள்வதால், பாத்திரம் கழுவும் போது படும் சோப் அல்லது கெமிக்கல்கள் கையில் படுவதில் இருந்து தப்பிக்கலாம்.

ஆன்டி பாக்டீரியல் சோப்

ஆன்டி பாக்டீரியல் சோப்

அடிக்கடி ஆன்டி - பாக்டிரியல் சோப் கொண்டு கைகளை கழுவுவதை தவிர்க்க வேண்டும். மிதமான க்ளின்சரை உபயோகப்படுத்தலாம். அதன் பின் மாய்சுரைசர் போட்டுக்கொள்ளலாம்.

விட்டமின்

விட்டமின்

உங்களது உணவில் தினமும் விட்டமின் ஏ மற்றும் சி-யை போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இவை நகங்களை பாதுகாக்கும் தன்மை கொண்டவை.

உணவுகள்

உணவுகள்

உங்களது உணவில் அடிக்கடி முட்டை, காலிபிளவர், முழு தானியங்கள், அவோகேடா போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

how to maintain your nails without cracks

how to maintain your nails without cracks
Story first published: Friday, September 15, 2017, 16:48 [IST]
Subscribe Newsletter