For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிளாஸ்டிக் சீப்புக்கு பதிலா மரசீப்ப யூஸ் பண்ணுங்க முடியே கொட்டாது.

உங்கள் முடியை நீங்க எப்படி பராமரிச்சாலும் முடி கொட்டுற பிரச்சனை வருதா. அப்போ உங்க சீப்புல தாங்க மிஸ்டேக் இருக்கு. உங்க முடி கொட்டுறதுக்கு காரணம் சீப்பா கூட இருக்கலாம். இந்த சீப்புல என்ன இருக்குனு நீங்

|

Recommended Video

The feel of wood on your scalp is amazing

உங்கள் முடியை நீங்க எப்படி பராமரிச்சாலும் முடி கொட்டுற பிரச்சனை வருதா. அப்போ உங்க சீப்புல தாங்க மிஸ்டேக் இருக்கு. உங்க முடி கொட்டுறதுக்கு காரணம் சீப்பா கூட இருக்கலாம். இந்த சீப்புல என்ன இருக்குனு நீங்க நினைக்காதீங்க சீப்புல தாங்க எல்லாமே இருக்கு. உங்க முடிய சுத்தமா வச்சுக்கணும் நினைக்குற நீங்க உங்க சீப்ப ஏன் சுத்தமா வச்சுக்க மாட்டுறிங்க.

Why Use A Wide Toothed Comb For Your Hair

வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறையாவது கண்டிப்பா சீப்ப கழுவி சுத்தமா வச்சு பயன்படுத்துங்க. சீப்பு சுத்தமா இருந்தா தலையில பொடுகுத்தொல்லை, அரிப்பு போன்ற பிரச்சனைகள் இருக்காது. மேலும் உபயோகிக்கும் சீப்பு மரசீப்பாக இருந்தால் நல்லது. நீங்கள் பிளாஸ்டிக் சீப்பு உபயோகிப்பதை விட மரசீப்பு உபோயோகிப்பது சிறந்தது. மரசீப்பு உபயோகிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்துக் கொண்டால் நீங்களும் மாறிவிடுவீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உச்சந்தலை

உச்சந்தலை

நீங்கள் மரசீப்பை உச்சந்தலையில் உபயோகிக்கும் போது மிகவும் மென்மையாக உணருவீர்கள். மேலும் இது உங்க உச்சந்தலையில் மசாஜ் செய்ததைப் போல் ஒரு உணர்வைத் தரும்.

MOST READ: உங்க கூந்தல் அடர்த்தியா பளபளப்பா மாறணுமா? இந்த பொருள யூஸ் பண்ணுங்க..

இரத்த ஓட்டம்

இரத்த ஓட்டம்

உச்சந்தலையில் மரசீப்பை பயன்படுத்தும் போது தலையில் உள்ள இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. அத்துடன் முடியின் வேர்களுக்கு நல்ல ஈரப்பத்தினை வழங்கி, முடியை மென்மையாக வைக்க வழி செய்கிறது.

இயற்கையான ஆயில்

இயற்கையான ஆயில்

உங்கள் தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும் தன்மையுள்ளது. இந்த எண்ணெய் சுரக்கும் சுரப்பிகளை செயல்பட வைப்பதற்கு மரசீப்பு உதவுகிறது. மரசிப்பினை உபயோகிக்கும் போது எண்ணெய் சுரப்பிகள் உங்கள் கூந்தலின் வேர்களில் இருந்து நுனி முடிவரை செல்வதற்கும் வழிவகுக்குது.

பரந்த மரசீப்புகள்

பரந்த மரசீப்புகள்

நீங்க பரந்த பற்கள் உள்ள சீப்புகளை உபயோகிக்கும் போது முடிக்கு நல்லது. ஏனெனில் பரந்த பற்கள் கொண்ட சீப்புகளை நீங்கள் உபயோகிப்பதால் உங்க முடியை இழுக்கவோ அல்லது உடைக்கவோ செய்யாது.

சுருண்ட முடி

சுருண்ட முடி

உங்களுக்கு சுருண்ட முடி இருந்தால் கண்டிப்பாக பரந்த பற்கள் கொண்ட மரசீப்புகளைப் பயன்படுத்துங்க. இது உங்க முடியை மென்மையா வைக்கவும், சிக்கல சீக்கிரம் எடுக்கவும் ஏதுவா இருக்கும். சிக்கல் எடுக்கும் போது முடியை இரண்டாக பிரித்து எடுங்க. மிக எளிதாக எடுத்துவிடலாம்.

பொடுகுத்தொல்லை

பொடுகுத்தொல்லை

மரசீப்புகள் பொதுவா பொடுகை போக்கவும் உதவும். உங்களோட தலை வறண்டு காணப்படுவதால் தான் பொடுக்கு வாய்ப்புகள் அதிகமா ஏற்படும். ஆனால் நீங்க மர சீப்பை உபயோகிக்கும் போது அது உங்க தலையில உள்ள இயற்கை எண்ணையை தூண்டும். இதனால் பொடுகுத்தொல்லை ஏற்படுவதை தடுக்கலாம்.

MOST READ: வீட்டிலேயே உங்க முடிக்கு எப்படி ஹேர் மாஸ்க் போடலாம்னு தெரியுமா? சும்மா பளபளக்கும்

சீப்பு சுத்தம்

சீப்பு சுத்தம்

உங்க முடிய சுத்தம் செய்ற மாதிரி சீப்பையும் சுத்தமா வச்சுக்கோங்க அப்போத தலையில் அரிப்பு மற்றும் பொடுகு போன்ற பிரச்னைலாம் வராம இருக்கும். முடி அழுக்கா இருக்குனு தான் அலசுறீங்க ஆனா அலசிட்டு மறுபடியும் அதே சீப்புல தலையை வருனா சீப்புல இருக்க அழுக்கு மறுபடியும் உங்க தலைக்கு தான் போகும். நீங்க தலைக்கு குளிக்க போகும் போது உங்க சீப்ப கைல எடுத்துட்டு போங்க அதையும் நல்ல சோப்பு வச்சு சுத்தம் பண்ணிட்டு பயன்படுத்துங்க. அப்பறம் பொடுகுத்தொல்லை, முடிக் கொட்டுறதொல்லை ஏதும் இருக்காது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: haircare hair hairfall
English summary

Why Use A Wide Toothed Comb For Your Hair

The feel of wood on your scalp is amazing. It sort of gives you a mini scalp massage when you use it. This helps to increase the blood flow to the scalp – bringing lovely nutrients to the hair roots.
Story first published: Saturday, August 24, 2019, 16:17 [IST]
Desktop Bottom Promotion