Just In
- 2 hrs ago
அமேசானில் அட்டகாசமான தள்ளுபடியில் வேக்யூம் கிளீனர்கள்.. ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்குங்க...
- 3 hrs ago
மழைக்காலத்துல உங்களுக்கு எந்த நோயும் வராமல் இருக்க இந்த புரத உணவுகள சாப்பிட்டா போதுமாம்!
- 4 hrs ago
பற்களில் இருக்கும் அசிங்கமான மஞ்சள் கறையை நிரந்தரமாக நீக்க இந்த சமையலறை பொருட்களே போதுமாம் தெரியுமா?
- 4 hrs ago
வடகறி ரெசிபி
Don't Miss
- Movies
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த சீயான் விக்ரம்..ஆரம்பமே அசத்தலா வீடியோ..குஷியில் ரசிகர்கள் !
- News
மகாராஷ்டிரா அமைச்சரவையில் அனைவரும் குபேரர்கள்! ஆனால் 20ல் 15 பேர் மீது கிரிமினல் வழக்கு! பரபர தகவல்
- Finance
ஐஆர்சிடிசி பங்கினை வாங்க பரிந்துரை செய்த நிபுணர்கள்.. உங்ககிட்ட இருக்கா?
- Automobiles
ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்... மஹிந்திரா தார் காரைவிட அதிக விலை!
- Travel
டெல்லியிலிருந்து பல ஆன்மீக ஸ்தலங்களுக்கு பயணம் – IRCTC இன் அட்டகாசமான டூர் பேக்கேஜ் – விவரங்கள் இதோ!
- Sports
எல்லை மீறி செல்லும் ஊர்வசி - ரிஷப் பண்ட் சண்டை.. யார் கூறுவது உண்மை?.. இணையத்தில் வெடிக்கும் போர்!!
- Technology
ஒரே சார்ஜிங்கில் 25 நாள் யூஸ் பண்ணலாம்: Vivo அறிமுகம் செய்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்!
- Education
இரண்டாவது பெரிய துறைமுகத்தில் பணி வாய்ப்பு?
பொடுகு தொல்லை இல்லாம உங்க முடி அடர்த்தியாவும் பளபளனு இருக்க நீங்க இத செஞ்சா போதுமாம்...!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை தலைமுடி பிரச்சனை. நாம் உடல் ஆரோக்கியத்தில் கவண் செலுத்துவதைபோல தலைமுடி ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதில்லை. வளர்ந்து வரும் நவீன உலகில் வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவுகள் காரணமாக தலைமுடி பிரச்சனை ஏற்படுகிறது. பருவ காலங்களும் நமக்கு சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனையை ஏற்படுத்துவது வழக்கம். மழை மற்றும் மாசுபாட்டால் தோல் மட்டுமல்ல, முடி மற்றும் உச்சந்தலையும் கூட பாதிக்கப்படுகின்றன. வியர்வையால் நிலைமை மோசமடைகிறது.
இது தூசி துகள்கள் மற்றும் பிற மாசுபடுத்தப்பட்ட கூறுகளை மேலும் ஈர்க்கிறது. முடி மற்றும் உச்சந்தலையில் பொதுவாகக் காணப்படும் சில பிரச்சனைகள் மற்றும் இந்த மழைக்காலத்தில் அழகான தலைமுடியை பராமரிப்பதற்கான சில வழிகாட்டுதல்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

முடி உதிர்தல்
இந்த மழைக்காலத்தில் முடி ஈரமாகி விடுவதால், முடி உதிர்வதுடன், அழுக்காகவும் காணப்படும். பெரும்பாலான மக்கள் பொதுவாக உச்சந்தலையில் எண்ணெயை மசாஜ் செய்வதைத் தேர்வு செய்கிறார்கள். ஆய்வின்படி மசாஜ் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் எண்ணெய் முடியின் தண்டுக்குள் செல்லாது. ஆனால் எண்ணெய் பூசுவது வெளிப்புற அடுக்குக்கு நல்லது. மேலும், உங்கள் தலைமுடியை அலசி துடைத்து உலர்த்திய பிறகு ஆன்டி-ஃபிரிஸ் சீரம் பயன்படுத்தவும்.

முடியின் நிறத்தில் மாற்றம்
முடியின் தண்டு சேதமடைவதைத் தவிர, இது முடியின் இயற்கையான நிறத்தையும் அமைப்பையும் மாற்றுகிறது. தலைமுடிக்கு வண்ணம் பூசுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும். மழை மற்றும் அழுக்கு உங்கள் முடியில் பயன்படுத்தப்பட்ட நிறத்தை மாற்றுகிறது மற்றும் முடி உதிர்தலை ஏற்படுத்துகிறது. முடியின் நிறத்தைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்ட ஷாம்பூக்களைப் பயன்படுத்தவும். பயணத்தின் போது உங்கள் தலைமுடியை நல்ல துணியால் மூடி வைக்கவும்.

அதிகப்படியான பொடுகு
அநேகமாக ஒருவர் சந்திக்கும் மிகவும் பொதுவான முடிப் பிரச்சனை பொடுகு. பொடுகு செதில்களை விரைவாக அகற்றுவதற்கு அடிக்கடி ஷாம்பு போட்டு முடியை அலசுவது ஒரு சிறந்த வழியாகும். கீட்டோகோனசோல், செலினியம் சல்பைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் அடங்கிய மருந்து ஷாம்பூவை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்துவது செதில்களை அகற்றுவதோடு, செதில்களின் உற்பத்தியையும் குறைக்க உதவுகிறது.

எண்ணெய் முடி
இயற்கையான ஸ்கால்ப் ஆயில் உற்பத்தியாகி மழைநீருடன் கலப்பதே இதற்குக் காரணம். தினசரி பயன்பாட்டிற்கு போதுமான மென்மையான ஷாம்பூவைப் பயன்படுத்தவும். ஆனால் உங்கள் உச்சந்தலையைச் சுத்தப்படுத்தும் அளவுக்கு வலுவானதாக இருக்க வேண்டும். முடியின் நுனியில் மட்டும் கண்டிஷனரைப் பயன்படுத்த மறக்காதீர்கள். இறுதியாக, முடியை ஷாம்பு செய்து, கண்டிஷனிங் செய்யும் போது, கண்டிஷனரை பயன்படுத்திய பிறகு வெதுவெதுப்பான நீரில் இருந்து குளிர்ந்த நீரில் முடியை அலசவும். குளிர்ந்த நீர் முடியின் திறப்பை சுருக்கி, எண்ணெய் உற்பத்தியைக் குறைக்கும்.

உச்சந்தலையில் பூஞ்சை தொற்று
முடி மற்றும் உச்சந்தலையில் நல்ல சுகாதாரத்தை பராமரிப்பது உச்சந்தலையில் பூஞ்சை தொற்று ஏற்படாமல் இருக்க சிறந்த வழி. இது மழைக்காலத்திலும் அடிக்கடி காணப்படுகிறது. ஒரு மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் உச்சந்தலையை சுத்தப்படுத்த பூஞ்சை காளான் லோஷனைப் பயன்படுத்துவது நிச்சயமாக உங்களுக்கு உதவும்.

முடி பொலிவை இழந்தது
முடி வறண்டு, உதிர்வதால், அதன் பொலிவையும் அழகையும் இழக்கிறது. அரை கப் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்து ஒரு கப் தண்ணீரில் நீர்த்துப்போகச் செய்யவும். ஷாம்பு போட்டு அலசிய பிறகு இதை உங்கள் தலைமுடியில் ஊற்றவும். இது சூரியனால் சேதமடைந்த உலர்ந்த மற்றும் உடையக்கூடிய முடிக்கு பிரகாசத்தை மீட்டெடுக்க உதவுகிறது.

உடையக்கூடிய முடி
நீண்ட நேரம் சூரியக் கதிர்களுக்கு வெளிப்படும் போது முடி உடையக்கூடியதாக மாறும். புரத உட்கொள்ளலை அதிகரிக்கவும் மற்றும் பயோட்டின் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்ளவும். முடி வளர்ச்சியைப் பொறுத்தவரை பயோட்டின் வைட்டமின் அதிக மதிப்புடையது மற்றும் முடி உதிர்தல் அல்லது உடையக்கூடிய மற்றும் பலவீனமான முடி பிரச்சனையை சந்திக்கும் எவரும் தங்கள் மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் பயோட்டின் சப்ளிமெண்ட்ஸை முயற்சிக்கலாம்.