For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடிக்கடி தலைக்கு மருதாணி தேய்க்கிறீங்களா?... அது தலைமுடிக்கு நல்லதுதானா?

மருதாணி(மெஹந்தி) என பிரபலமாக அறியப்படும் ஹென்னா என்பது இயற்கையான மூலிகை தூள் ஆகும்.

|

மருதாணி (மெஹந்தி) என பிரபலமாக அறியப்படும் ஹென்னா என்பது இயற்கையான மூலிகை தூள் ஆகும். இது முடியின் நிறத்திற்கு மட்டுமல்ல,

beauty

இதன் பொதுவான முடி பராமரிப்பு திறனுக்காக பொடுகுத்தொல்லை மற்றும் தலைமுடி அரித்தல் போன்ற மற்ற முடி சம்பந்தப்பட்ட சிக்கல்களைத் தடுக்க பயன்படுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருதாணி

மருதாணி

ஹென்னா ஒரு ஹேர் கண்டிஷனராக பயன்படுத்தப்படுகிறது. உங்களுக்கு இதை பற்றி ஏதேனும் சந்தேகமிருப்பின், மேலும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

தொன்றுதொட்டு இந்தியாவில் முடி பராமரிப்புக்கான அழகு பொருட்களாக மருதாணி பயன்படுத்தப்படுகிறது. பண்டைய நாட்களில், பெண்கள் இதன் இலைகளை ஒரு மென்மையான பசையை போன்று அரைத்து பயன்படுத்தினர். ஆனால் இப்போது, கடைகளில் ஒரு தூள் வடிவத்தில் கிடைக்கிறது. முடியின் நிற பராமரிப்பு தவிர, கடந்த காலத்தில் பெண்களால் முடி உதிர்தலை தடுக்க மருதாணி பயன்படுத்தப்பட்டது என்பதற்கான மற்றும் பல்வேறு காரணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

பயன்பாடுகள்

பயன்பாடுகள்

முடி கொட்டுதலை நிறுத்தி மேலும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது:

ஹேன்னாவின் இயற்கை பண்புகள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன. இதன் தூளை வழக்கமான முடி எண்ணெயுடன் கலந்து 5 முதல் 6 நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். இந்த எண்ணெய் குளிர்ந்ததும், இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தலாம். இது முடி உதிர்தலைத் தடுக்கும் மற்றும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.

கண்டிஷனர்

கண்டிஷனர்

பெரும்பாலும் ஹென்னா பயன்படுத்துவதன் மூலம் மற்ற கெமிக்கல் கண்டிஷனர்களை பயன்படுத்துவதை தவிக்கலாம். இது உங்கள் கூந்தளுக்கு ஊட்டமளிக்கவும், மென்மையாகவும் செய்து அழகூட்டுகிறது. ஹென்னாவை முடிக்கு கண்டிஷனராக பயன்படுத்துவதற்கு ஒரு எளிய வழி, கால் கப் மருதாணி பொடியை அரை கப் தயிருடன் கலந்து ஒரு மென்மையான பசையை தயாரிக்க வேண்டும். ஷாம்பு பயன்படுத்திய பின்னர் உங்கள் முடியில் இந்த கலவை தடவி 20 நிமிடங்களுக்கு அதை உலர விட்டு பின்பு தலை கழுவவும்.

பொடுகை

பொடுகை

ஹென்னாவை முடியில் அடிக்கடி பயன்படுத்தும்போது, தலை பொடுகு சிகிச்சைக்கு பயனுள்ளதாக இருக்கும். இது தலை பொடுகு மறுபடியும் வராமல் தடுக்கிறது. தலை பொடுகை குணப்படுத்த, ஒரு சில வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் அதை அரைக்கவும். இந்த கலவையில் மருதாணி மற்றும் கடுகு எண்ணெய் சேர்க்கவும். இந்த பசையைப் தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு அதை உலரவிட்டு, பிறகு வழக்கமான ஷாம்பூ கொண்டு முடியை கழுவவும்.

தோல் அரிப்பு

தோல் அரிப்பு

ஹென்னாவில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் பூஞ்சையெதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இது தலையின் தோலில் ஏற்படும் அரிப்பைக் குறைத்து, குளிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு கப் ஹென்னா இலைகளுடன், ஒரு கப் வேப்ப மற்றும் துளசி இலைகளை சேர்த்து அரைத்து கொள்ளவும். இந்த பசையை உங்கள் தலையில் ஒரு மணி நேரத்திற்கு தடவி பின்னர் கழுவவும். வேப்பம் மற்றும் துளசி இலைகள் இரண்டும் ஹென்னா இலைகளைப் போன்ற அதே ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் கொண்டிருக்கிறது.

இயற்கை நிறம்

இயற்கை நிறம்

உங்கள் சாதாரண முடி சாயத்தில் பயன்படுத்தப்படுகிற ஒவ்வாமை இரசாயனங்கள் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்களானால், உங்கள் க்ரெ முடியை மூடிமறைக்கவும், உங்கள் தலைமுடிக்கு ஒரு அழகான பழுப்பு நிற இளஞ்சாயத்தை சேர்க்கவும் ஹென்னாவை பயன்படுத்தலாம். உங்கள் தலைமுடிக்கு வண்ணம் சேர்க்க மருதாணியை பல வழிமுறைகளில் பயன்படுத்தலாம். எளிய வழியனது, - நெல்லித்தூள் மற்றும் மருதாணி தூள் கலவை.

எப்படி தயாரிப்பது

எப்படி தயாரிப்பது

3 தேக்கரண்டி நெல்லி தூள், ஒரு கப் புதிய மெல்லிய பேஸ்டாக அரைத்த ஹென்னா சேர்க்கவும். இந்த கலவையுடன் ஒரு டீஸ்பூன் காபி தூள் சேர்த்து, உறிஞ்சும் தூரிகையை பயன்படுத்தி, தலையில் இக்கரைசலை உபயோகிக்கவும். ஒரு மணி நேரத்திற்கு அதை உலர விட்டு, ஒரு லேசான ஷாம்பு கொண்டு கழுவ வேண்டும். படியாத உலர்ந்த, ஒழுங்கற்ற முடிக்கு பராமரிப்பு தடுக்கிறது:

ஹென்னா உங்கள் தலைமுடியில் ஈரப்பதத்தை தூண்டலாம் மற்றும் உங்கள் பூட்டுக்களை நிலைநிறுத்துகிறது, இது ஒரு இயற்கை முடி கண்டிஷனர். எனவே, உலர்ந்த, உதிரக்கூடிய அல்லது கட்டுக்கடங்காத முடி இருந்தால், தொடர்ந்து ஹென்னாவை பயன்படுத்துவதன் மூலம் முடி நன்கு மென்மையாகவும், மொய்சர் உடனும் பராமரிக்கப்படுகிறது. உங்கள் விருப்பமான மூலிகை எண்ணையுடன் ஹென்னாவை சேர்த்து முடியின் சீரமைப்பு பண்புகளை மேம்படுத்துவதற்கு சேர்க்கவும். அதன் சீரமைப்பு பண்புகள், உங்கள் கட்டுக்கடங்காத முடியை நன்கு பணிய வைத்து மேலும் அதற்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும்.

எண்ணெய்ப்பசை

எண்ணெய்ப்பசை

எண்ணெய் பதமான தலைக்கு, ஹென்னா எந்த ஒரு முடி இழப்பும் இல்லாமல், தோலினை சமநிலைப்படுத்த உதவும். முல்தானி மெட்டியுடன் ஹென்னாவை தண்ணீர் கொண்டு சேர்த்து, ஒரு பசை போன்ற பதத்தில் தயார் செய்து கொள்ளவும். இதை முடிக்கு ஒரு மாஸ்க் ஆக பயன்படுத்தவும். 2 மணி நேரம் அதை உலரவிட்டு ஒரு லேசான ஷாம்பூ கொண்டு கழுவவும்.

உங்கள் தலைமுடிக்கு ஹென்னா வழங்ககூடிய அனைத்து நன்மைகளையும் அறிந்து கொண்டீர்கள். ஆனால், நீங்கள் கடைகளிலிருந்து மருதாணி தூள் வாங்கினால்,உண்மையான ஆர்கானிக் ஹென்னா வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சந்தையில் இந்த நாட்களில் இயற்கையானது என்று கூறப்படும் தயாரிப்புகள் கூட கெமிக்கல் மற்றும் பதப்படுத்தப்பட்டவையாக இருக்கலாம். எல்லாவிதத்திலும் சிறந்தது என்பது புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை கொண்டு அரைத்த மருதாணி தான்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Is Henna Good For Your Hair?

Henna, prevalently known as Mehandi is a hair shading measurement from several years.
Story first published: Monday, May 28, 2018, 15:52 [IST]
Desktop Bottom Promotion