For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆம்லா ஹேர்ஆயில் தேய்ச்சும் முடி கொட்டுதா?... அத தண்ணியில கலந்து தேய்ங்க...

ஆரோக்கியம் மற்றும் சிக்கல் இல்லாத கூந்தலை பெற விரும்பினால் அதை முறையாக பராமரிக்க வேண்டியது முக்கியமான விஷயமாகும். அடிக்கடி கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டும்.

By Sugumar A D
|

ஆரோக்கியம் மற்றும் சிக்கல் இல்லாத கூந்தலை பெற விரும்பினால் அதை முறையாக பராமரிக்க வேண்டியது முக்கியமான விஷயமாகும். அடிக்கடி கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டும். இது கூந்தல் ஆரோக்கியமாகவும், வலுவானதாகவும் இருக்க உதவும். கூந்தல் ஆரோக்கியத்துக்கு எண்ணெய் தடவுதல் என்பது பாரம்பரியமான செயலாகும். கற்காலம் முதல் எண்ணெய் தடவும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

கூந்தலில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் எண்ணெய் தடவுதல் நல்லதொரு தீர்வை ஏற்படுத்தும். ஊட்டம் நிறைந்த கூந்தலை பெறலாம். ஆனால், உங்களது கூந்தலுக்கு ஏற்ற எண்ணெய்யை தேர்வு செய்வது என்பது தான் கடினமான காரியமாகும். ரசாயனம் அதிகம் உள்ள எண்ணெய் வகைகள் சந்தைகளில் நிறைய கிடைக்கிறது. இதற்கு மாற்றாக வீட்டு முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்யை கலந்து பயன்படுத்த வேண்டும்.

beauty

பலதரப்பட்ட நிறுவனங்களின் எண்ணெய் வகைகள் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இவை அனைத்தும் ரசாயன கலவை இல்லாதது என்று கூறிவிட முடியாது. நீண்ட நாட்களுக்கு இந்த எண்ணெய்யை பயன்படுத்தினால் கூந்தலை சீரழித்துவிடும். அதனால் ஆரோக்கியமான கூந்தலை குறைந்த செலவில் பெற வேண்டும் என்றால் வீட்டிலேயே எண்ணெய் தயாரிக்கும் முறைதான் சிறந்த தீர்வு.

இந்த வகையில் நெல்லிக்காயை பயன்படுத்தி கூந்தல் எண்ணெய் தயாரித்து ஆரோக்கியமான கூந்தலை பெறுவது பெறுவது எப்படி? என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கூந்தல் நலனுக்கு நெல்லிக்காய் எண்ணெய்

கூந்தல் நலனுக்கு நெல்லிக்காய் எண்ணெய்

நெல்லிக்காய் எண்ணெய் என்பது வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஒன்றாகும். இது மிகவும் எளிமையானது. முடி உதிர்தலால் பாதிக்கப்படும் நபர்களுக்கு நெல்லிக்காய் எண்ணெய் சிறந்த வரப்பிரசாதமாகும். முடி உதிர்தல் முற்றும் முடி கொட்டுவதை தடுக்க சிறந்த காரணியாக நெல்லிக்காய் கற்காலம் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை

நெல்லிக்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

. குளிர்ந்த தேங்காய் எண்ணெய் ஒரு கப்

. தண்ணீர் 4 லிட்டர்

. நெல்லிக்காய் பவுடர் 100 கிராம்

தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

. முதலில் 4 லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் 70 கிராம் நெல்லிக்காய் பவுடரை கலக்க வேண்டும். தண்ணீர் சுண்டும் வரை இந்த கலவையை கொதிக்க வைக்க வேண்டும். ஊற்றிய தண்ணீர் கால் பங்காக சுண்ட வேண்டும். அதன் பின்னர் அதை ஆறவிட வேண்டும்.

. சூடு ஆறிய பின்னர் துணி மூலம் வடிகட்டி நெல்லிக்காய் தண்ணீரை சேகரிக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள நெல்லிக்காய் பவுடரை போட்டு சிறிய அளவு தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும்.

. இந்த கலவை அடர்த்தியான பேஸ்ட் போல் இருக்க வேண்டும். இந்த கலவையையும், தேங்காய் எண்ணெய்யையும் நெல்லிக்காய் தண்ணீருடன் கலக்க வேண்டும். பின்னர் மீண்டும் கொதிக்க வைக்க வேண்டும்.

. அனைத்து தண்ணீரும் முழுமையாக ஆவியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இதன் பின்னர் அங்கு எண்ணெயும், நெல்லிக்காய் பவுடரும் மீதம் இருக்கும். இந்த கலவையை சூடு ஆறவிட வேண்டும்.

. இதில் 2 கரண்டி அளவுக்கு எண்ணெய்யை இதர பயன்பாட்டிற்கு தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். மீதமுள்ள எண்ணெய்யை காற்று புகாத கன்டெயினரில் ஊற்றி நன்றாக அடைத்து வைத்துவிட வேண்டும்.

எப்படி பயன்படுத்துவது?

எப்படி பயன்படுத்துவது?

தொடர்ந்து எண்ணெய்யை நன்றாக உச்சந் தலையில் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் வரை செய்துவிட்டு, பின்னர் இதர கூந்தல் பகுதியில் எண்ணெய்யை தடவுங்கள்.

. கூந்தலில் தடவிய எண்ணெய் 45 நிமிடங்கள் வரை உளரவிட வேண்டும்.

. இதன் பின்னர் கூந்தலை ஷாம்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். மென்மையான மற்றும் சல்பேட் இல்லாத ஷாம்பு பயன்படுத்தினால் நல்லது.

. பின்னர் கூந்தலில் மென்மையான கண்டிஷனரை பயன்படுத்த வேண்டும்.

. கழுவியதற்கு பின்னர் நல்ல துண்டு கொண்டு கூந்தலில் உள்ள நீரை உறிஞ்சி எடுக்கும் வகையில் துவட்ட வேண்டும்.

. கூந்தலை இயற்கையான முறையில் காய விட வேண்டும். இதை வாரத்தில் 2 நாட்கள் செய்து வந்தால் கூந்தல் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுவதோடு ஆரோக்கியமான கூந்தலை உடையவராகவும் திகழலாம்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

நெல்லிக்காயில் அதிகளவு வைட்டமின் சி உள்ளது. ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளது. நெல்லிக்காய் எண்ணெய் தடவும் போது இந்த சத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு உச்சந் தலைக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்தும். நெல்லிக்காயில் உள்ள முக்கியமான பொருள் கூந்தலின் வேர் பகுதியை வலுப்படுத்தும். இது கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். முடிச் சுருளையும் சரி செய்து நீளச் செய்யும்.

நெல்லிக்காய் எப்படி பயன்படுகிறது?

நெல்லிக்காய் எப்படி பயன்படுகிறது?

சுருட்டை முடியை சரி செய்வதோடு ஆரோக்கிய கூந்தல் வளர்ச்சிக்கும் நெல்லிக்காய் உதவி செய்கிறது. ஆண், பெண் என இருபாலரும் கூந்தல் வளர்ச்சிக்கு நெல்லிக்காயை பயன்படுத்தலாம். உச்சந்தலையில் நெல்லிக்காய் எண்ணெயை தடவுவது ரத்த சுழற்சியை அதிகரிக்கும். இதன் மூலம் கூந்தலுக்கு ஊட்டச்சத்து கிடைத்து வளர்ச்சியை அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக உச்சந்தலையின் ஆரோக்கியத்துக்கு நெல்லிக்காய் எண்ணெய் சிறந்ததாகும்.

நெல்லிக்காய் எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்தினால் உச்சந்தலையில் உள்ள காய்ந்த செதில்களை அகன்றுவிடும். நுண்குமிழில் உள்ள அழுக்கு மற்றும் பிசுபிசுப்பை அகற்றும். முடி உதிர்தலுக்கு வைட்டமின் சி சத்து குறைபாடு தான் முக்கிய காரணம். நெல்லிக்காயை சாப்பிடுவதால் இந்த சத்துக்கள் அதிகரித்து உடலை மேம்படுத்தும். ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் நெல்லிக்காயில் அதிகளவில் உள்ளது. இது கூந்தல் மற்றும் நுண்குமிழி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

கூந்தலுக்கு ஏற்படும் தீமையை எதிர்த்து ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ் போராடும். நெல்லிக்காயை தொடர்ந்து பயன்படுத்தினால் கூந்தல் வலுவானதாக மாறும். கூந்தல் உடைதல் மற்றும் நுனிப்பகுதி சிதறல் போன்றவை தடுக்கப்படும். உணவாகவும் நெல்லிக்காயை பயன்படுத்தலாம். தினமும் சில துண்டு நெல்லிக்காயை சாப்பிட்டு வந்தால் கூந்தலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கு உதவும். இளநரை, செம்பட்டை அடைதலை தடுக்க முடியும். உச்சந்தலையை மேம்படுத்தும். உடல் ஆரோக்கியமாக இருக்கவும் தினமும் நெல்லிக்காய் ஜூஸ் அருந்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Use Amla For Hair Care and how to make amla hair toner

Amla, also called the Indian Gooseberry, has a plethora of medicinal properties and has been used in Ayurvedic medicine for many years.
Story first published: Monday, June 18, 2018, 10:40 [IST]
Desktop Bottom Promotion