For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் முடி உங்களை பற்றி சொல்கின்ற சுவாரசிய தகவல்கள் பற்றி தெரியுமா...?

|

நம் எல்லோருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்பது இயல்பான ஒரு ஆசைதான். ஆனால், நம் அன்றாட செயல்களும், உணவு முறையும், சுற்றுசூழலும் நம் உடல் ஆரோக்கியத்தை சீர்கேடு அடைய செய்கிறது. அந்த வகையில் இவை நம் முக அழகு மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் சேர்த்தே கெடுகிறது. பொதுவாகவே நமக்கு முடி அழகாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.

12 Things Your Hair Tells About Your Health

முடியின் அழகை பாதுகாக்க நாம் பல்வேறு வகையில் முயற்சி செய்திருப்போம். முடி பார்ப்பதற்கு அழகாவும், பொலிவாகவும் இருந்தால் மிக பெரிய விஷயம்தான். ஏனெனில் உங்கள் முடிகள் கூட உங்களை பற்றி செல்கிறதாம். இந்த பதிவில் முடிகள் உங்கள் பற்றி கூறும் சுவாரசிய தகவல்களை தெரிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகோ அழகு..!

அழகோ அழகு..!

பெண் என்றாலும் ஆண் என்றாலும் முடியின் மீது மோகம் இருக்கத்தான் செய்யும். முடியிற்கு இயற்கையிலே மணம் உண்டு என ஒரு சில படங்களில் கூற, நாம் கேள்வி பட்டிருப்போம். உண்மையில் முடியின் ஆரோக்கியம்தான் அத்தகைய மணத்தை தருகிறது. ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தே அவரின் முடியின் நலனும் நிர்ணயிக்கப்படுகிறது.

வெள்ளை உதிர்தலா..?

வெள்ளை உதிர்தலா..?

உங்கள் தலையில் இருந்து வெள்ளை வெள்ளையாக உதிர்ந்தால் அதற்கு பூஞ்சைகள் தான் காரணியாக இருக்கும். ஆனால், இது பெரிதும் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து விடாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இப்படி வெள்ளையாக உதிர்ந்தால் அது ஒரு வித தோல் சார்ந்த நோயாக கூட இருக்கலாம்.

குறைந்த வளர்ச்சியுள்ள முடியா..?

குறைந்த வளர்ச்சியுள்ள முடியா..?

உங்களின் முடியின் வளர்ச்சி குறைந்துள்ளது என்றால் அதற்கு இவைதான் காரணமாகும்.உங்கள் உடலில் புரதசத்து குறைத்திருந்தால் முடியின் வளர்ச்சியும் குறைவாகத்தான் இருக்கும். அத்துடன் நீங்கள் அதிக படியான ஜங்க் உணவுகளை சாப்பிடுகிறீர்கள் என்று அர்த்தம்.

மஞ்சள் பொடுகா..?

மஞ்சள் பொடுகா..?

சிலர் தலையில், மஞ்சளாக பொடுகு இருக்க கூடும். கிட்டத்தட்ட வழ வழப்பாக இருக்க கூடிய இந்த வகை பொடுகு சற்றே முடியின் நலனை உருகுலைக்க கூடியது. இவை முடியின் அடி வேர் முதல் பரவி உருவாக கூடும். இந்த வகை தலை பிரச்சினை ஹார்மோன் கோளாறுகளால் உருவாகும்.

MOST READ: ஆண்கள் தாம்பத்தியத்தில் நீண்ட நேரம் நீடித்திருக்கும் ஆற்றலை பெற, சாப்பிட வேண்டியவை...

ஒரு நாளைக்கு 100 முடியா..?

ஒரு நாளைக்கு 100 முடியா..?

பல்வேறு ஆய்வுகளில் மேற்கொண்ட முடிவில் , ஒரு நாளைக்கு நம் தலையில் இருந்து சராசரியாக 100க்கும் மேற்பட்ட முடிகள் உதிர்வதாக கூறுகின்றனர். இவ்வாறு அதிக முடிகள் நீங்கள் நினைப்பதை விட உதிர்ந்தால் உங்களின் முடியின் வேர்கள் சத்தற்று இருக்கிறது என்று அர்த்தம்.

இளநரையா..?

இளநரையா..?

இது பெரும்பாலானோர்க்கு இருக்க கூடிய இன்றைய பிரச்சினையாகும். ஆண்கள் பலருக்கும், அதே போன்று பெண்களில் அதிகமானோருக்கும் இந்த இளநரை பிரச்சினை இருக்கிறது. இவை பரம்பரை ரீதியாகவும், உணவு முறையின் காரணமாகும், வேதி பொருட்களினாலும் ஏற்பட்டிருக்கலாம். இவற்றை தடுக்க எளிய இயற்கை முறைகளை பயன்படுத்தலாம்.

முடி உடைதலா..?

முடி உடைதலா..?

உங்களுக்கு அதிகமாக முடி உடைவு ஏற்பட்டால் ஒரு சில நோய்கள் இருக்கிறது என்று அர்த்தம். குறிப்பாக தைராய்டு மற்றும் ரத்த சோகை நோய்கள் இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். முடிகள் அதிகமாக உடைந்தால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

இளம்சிவப்பு மண்டை பகுதியா..?

இளம்சிவப்பு மண்டை பகுதியா..?

சிலருக்கு சோரியாசிஸ் போன்ற நோய்கள் தலையில் கூட வரலாம். உங்களின் மண்டையில் பிங்க் அல்லது இளம்சிவப்பு நிறத்தில் வீக்கம் ஏற்பட்டு, வெள்ளை வெள்ளையாக முடியில் உதிர்ந்தால் சோரியாசிஸ் என்று அர்த்தம். இது தலையில் ஏற்பட்டால் உடல் முழுவதும் விரைவில் பரவ கூடும்.

MOST READ: ஜிம்மிற்கு போகாமலே உடல் எடையை கச்சிதமாக வைத்து கொள்ள இவற்றை சாப்பிட்டாலே போதும்..!

சிக்கலான முடியா..?

சிக்கலான முடியா..?

முடியின் ஆரோக்கியம் முற்றிலுமாக குறைந்து இருந்தால் இந்த நிலை ஏற்படும். அதவாது, முடி சடை பிண்ணி கொள்வது போல மாறிவிடும். ஆரம்ப காலத்தில் இது சாதாரணமாக இருந்து பின்னாளில் அதிக அதிக சிக்கல் கொண்ட முடியாக மாறி விடும். இவை தலையில் பேன், பொடுகு போன்றவற்றை அதிகம் தரும்.

கொட்டோ கொட்டுனு கொட்டுதா..?

கொட்டோ கொட்டுனு கொட்டுதா..?

சில பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலநிலையில் முடிகள் பலமாக கொட்ட தொடங்கும். அதனை கண்டு பயம் கொள்ள தேவையில்லை. இதற்கு காரணம், ஒன்று கர்ப்ப காலமாக இருக்கலாம் அல்லது மாதவிடாய் நிற்கும் பருவமாக இருக்கலாம் என்றே வல்லுநர்கள் சொல்கின்றனர். அந்த சமயத்தில் சத்தான உணவுகளை எடுத்து கொண்டாலே போதும்.

சுருள் சுருளாக..?

சுருள் சுருளாக..?

முடிகள் சுருள் சுருளாக இருப்பதற்கு சில முக்கிய காரணிகள் இருக்கிறது. முடியின் சத்து குறைந்தாலோ, கர்லிங் செய்தாலோ, சடை பின்னி கொண்டாலோ இந்த நிலை முடியிற்கு ஏற்படும். இதனை தடுக்க சத்தான உணவுகளை சாப்பிட்டாலே போதும். அத்துடன் முடியில் எந்த வித வேதி பொருட்களையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

ஒல்லியான முடியா..?

ஒல்லியான முடியா..?

தலையில் உள்ள வேர்கள் பலவீனம் அடைந்தால் முடிகள் அதிகம் கொட்ட தொடங்கும். இந்த நிலை வழுக்கையை கூட ஏற்படுத்த கூடும். உங்களின் முடி அதிகமாக கொட்டி ஒல்லியாகினால் ஊட்டசத்து குறைபாடு அல்லது நோய்களின் தாக்கமாக கூட இருக்கலாம்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Things Your Hair Tells About Your Health

your hair can provide great insight into your overall health and well-being, and it's important to recognize the many different ways in which the hair on your head can reflect what's happening inside your body.
Desktop Bottom Promotion