நரை முடி வர நீங்க தினமும் சாப்பிடும் இந்த உணவுகள் தான் காரணம்!

Written By:
Subscribe to Boldsky

நரைமுடி பிரச்சனை என்பது நம்மில் பலருக்கு இருக்கும் ஒரு பிரச்சனை தான். நரை முடி வந்து விட்டாலே நமக்கு வயதாகி விட்டதோ.. என்ற கவலை மனதில் உண்டாகும். நீங்கள் இதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். முடி நரைத்தால் வயதாகி விட்டது என்று இல்லை.. உங்களது மனதை எப்போதும் இளமையாக வைத்துக் கொள்ளுங்கள் அதுவே போதுமானது.

சிலருக்கு 20 - 30 வயதை எட்டும் முன்னரே கூட நரைமுடிகள் எட்டி பார்க்க ஆரம்பித்துவிடும். இது மிகவும் கொடுமையான ஒன்றாகும். இந்த நரைமுடிகள் வர மரபியல் ரீதியாக பல காரணங்கள் இருக்கின்றன. சில வகையான உணவுகளை உண்பதன் மூலமாக எளிதில் நரைமுடி பிரச்சனை வந்துவிடும். அப்படி எந்த உணவுகளை சாப்பிடுவதால் நரைமுடிகள் வரும் என்பது பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையை மட்டுமே அதிகமாக சாப்பிடுவதாலும், அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் நரை முடி சீக்கிரமாக தலை நீட்டுகிறது. மேலும் துரித உணவுகள், சோடா, பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை பருகுவதன் மூலமாகவும் நரை முடிகள் வருகின்றன.

விட்டமின் இ

விட்டமின் இ

நீங்கள் அதிகமான அளவு சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அது விட்டமின் இ உடைய செயல் திறனை குறைக்கிறது. விட்டமின் இ என்பது முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமாக தேவையான ஒன்றாகும். இது புரோட்டினை உறிஞ்சவும் உதவுகிறது.

மாற்று என்ன?

மாற்று என்ன?

உடலில் சர்க்கரை ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டியது அவசியம். எனவே நீங்கள் அந்த சர்க்கரையை செயற்கையான பொருட்களில் இருந்து எடுக்காமல், இயற்கையாக கிடைக்கும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம். இயற்கை சர்க்கரையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

உப்பு

உப்பு

உப்பு என்பது உடலுக்கு மிகவும் அத்தியாவதியமான ஒன்று என்றாலும் கூட இதனை அதிகளவு சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

அஜினமொட்டோ

அஜினமொட்டோ

அஜினமொட்டோ என்பது உணவிற்கு சுவையளிப்பதற்காகவும், உணவின் சுவையை கூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது கடை உணவுகள், கேன்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், சூப் போன்ற பல உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இந்த அஜினமொட்டோ பல ஆரோக்கிய கெடுகளை விளைவிக்க கூடியதாகும்.

என்ன செய்யும்?

என்ன செய்யும்?

அஜினமொட்டோவை அதிகளவு உணவில் சேர்த்துக் கொண்டால் அது உடலின் மெட்டபாலிசத்தை பாதிக்கும். உடல் எடை, அஜீரண கோளாறுகள், நரைமுடி பிரச்சனை போன்ற பாதிப்புகளில் இருந்து தப்பிக்க நீங்கள் அஜினமொட்டோவை உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருக்க வேண்டியது அவசியம்.

விலங்கு கொழுப்புகள்

விலங்கு கொழுப்புகள்

அதிகளவு விலங்கு கொழுப்புகளை உட்கொள்வதும் நரைமுடிக்கு காரணமாக அமையும். மீன் மற்றும் இறைச்சியில் இருந்து கிடைக்கும் இந்த விலங்கு கொழுப்புகளை அளவுடன் எடுத்துக் கொள்வதே நல்லது. மனிதனின் செரிமான மண்டலமானது சில வகையான விலங்கு புரோட்டினை எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. எனவே அவை நேரடியாக யுரிக் அமிலமாக மாறுகிறது. அதிகமாக யுரிக் ஆசிட் சுரந்தால் நரை முடி பிரச்சனை உண்டாகும்.

செயற்கை நிறமூட்டிகள்

செயற்கை நிறமூட்டிகள்

செயற்கையான நிறமூட்டிகளும், செயற்கை சுவையூட்டிகளும் பார்பதற்கும் சுவைப்பதற்கும் நன்றாக இருந்தாலும் கூட இவை ஆபத்தானவை. எந்த உணவில் செயற்கை சுவையூட்டிகள் இருந்தாலும், அவை ஆபத்தானவை தான்.

வெள்ளை மாவு

வெள்ளை மாவு

கோதுமையில் இருந்து நேரடியாக கிடைக்கும் மாவு ஆரோக்கியமானது தான். ஆனால் சில வகையான மாவுகள் வெண்மையாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்பதற்காக பிளிசிங் செய்யப்படுகின்றன. இது கோதுமையில் உள்ள நல்ல குணங்களை அளித்து விடுகிறது.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் இது போன்ற ஆபத்தை விளைவிக்கும் உணவுகளை முடிந்தவரை குறைவாக சாப்பிடுவது நல்லது. தவிர்க்க முடிந்த உணவுகளை தவிர்ப்பது போன்றவை உங்களுக்கு இளம் வயதிலேயே நரைமுடி வருவதை தடுக்கும். உடலும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

these foods cause gray hair

these foods cause gray hair
Story first published: Saturday, November 11, 2017, 16:02 [IST]