உங்க முடி பொலிவாகவும் அடர்த்தியாகவும் வளர குப்பைமேனி டோனர் தயாரிப்பது எப்படி?

Posted By: S. Hari Dharani
Subscribe to Boldsky

சரும பராமரிப்பு மற்றும் கேசத்திற்கான அனைத்து அழகு சாதனப் பொருட்களையும் நாம் வீட்டிலேயே தயாரிக்க முடியும் அதற்கு தேவையான நேரமும் விருப்பமும் இருந்தால் போதும். ஹேர் டோனர்களை தயாரிப்பது என்பது ஒரு நாளில் செய்யக்கூடியதல்ல ஆனால் ஒரு முறை நீங்கள் தயாரித்த டோனரின் பலன் உங்கள் தலைமுடியில் நீடித்திருக்கும்.

கூந்தல் அதிகமா கொட்டுதா? அப்ப வெங்காயத்தை யூஸ் பண்ணுங்க...

வீட்டிலேயே செய்யக்கூடிய ஹேர் டோனர்களை செய்யும் முறைகளில் ஒன்றை உங்களோடு பகிர்கிறோம். இந்த ஹேர் டோனர் குப்பைமேனி ஹேர் டோனர் என்றழைக்கப்படுகிறது மேலும் இதை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

Recipe For Nettle Hair Toner That You Can Prepare At Home

இது எல்லாவகையான கேசத்திற்கும் பொருந்தும் மேலும் வீட்டில் செய்யப்படும் இந்த டோனர் தலைமுடிக்கு பளபளப்பைக் கூடுகிறது. இருந்தாலும், நீங்கள் தொடர்ந்து சிலமுறை பயன்படுத்திய பிறகு இந்த நெட்டில் ஹேர் டோனர் அதன் பலனை தரும்.

ஹேர் டோனர் அதிக இரும்புச்சத்து உள்ளடக்கியது மேலும் இதன் முழு பலனைப் பெற முடியின் வேர்காலங்களில் நன்றாக தடவ வேண்டும். இந்த ஹேர் டோனரை வீட்டில் தயாரிக்க தேவையான முக்கியமான பொருள் குப்பைமேனி இலைகள்(nettle leaf) மற்றும் மேலும் சில பொருட்கள் தேவைப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஹேர் டோனர் – தயாரிப்பு முறை

ஹேர் டோனர் – தயாரிப்பு முறை

தேவையான பொருட்கள்

1 பெரிய கிணத்தில் பச்சையான குப்பைமேனி இலைகள் (வாடிய இலைகளை உபயோகிக்காதீர்கள்)

500ml காய்ச்சிய வடிகட்டிய தண்ணீர்

10 -15 துளிகள் லாவெண்டர் எண்ணெய் (lavender oil) அல்லது உங்கள் விருப்பத்திற்கேற்ற எண்ணெய்

ஒரு ஜார் (mason jar)

காஸ் அடுப்பு

1 அடிகனமான பாத்திரம்

செய்முறை :

செய்முறை :

காய்ச்சிய குப்பை மேனி நீர் :

முதலில் குப்பைமேனி இலைகளை குழாய் தண்ணீரில் நன்கு கழுவி தண்ணீரை வடித்து மீண்டும் கழுவவும். அடுத்து அடிகனமான பாத்திரத்தை எடுத்து இதில் கழுவிய இலைகளை போட்டு காய்ச்சி வடிகட்டிய தண்ணீரையும் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.

லாவெண்டர் எண்ணெய்:

லாவெண்டர் எண்ணெய்:

காஸ் அடுப்பை மிதமான நடுத்தர தீயில் வைத்து மேற்சொன்னவற்றை வேகவைக்கவும். இதற்கு குறைந்தது 20 - 30 நிமிட நேரம் தேவைப்படும். வேகவைத்த இலைச்சாற்றை ஆறவைத்து மேலும் அதனுடன் அந்த லாவெண்டர் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். நன்கு கலக்கிய அந்த கலவையே நீங்கள் உபயோகிக்க ஏதுவான ஹேர் டோனர் ஆகும்.

ஹேர் டோனர் ரெடி :

ஹேர் டோனர் ரெடி :

நன்கு வளர்ந்திருக்கும் மேசன் ஜாரில் நீங்கள் தயாரித்த நெட்டில் ஹேர் டோனெரை ஊற்றி வைக்கவும். இந்த ஹேர் டோனரை ஆறு மாதங்கள் வரை குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தலாம்.

மசாஜ் :

மசாஜ் :

இதை உபயோகிக்க ஒரு கிண்ணத்தில் இந்த டோனரை ஊற்றி கொண்டு ஒரு ஹேர் பிரஷை உபயோகித்து இதை உச்சந்தலையிலும் முடியின் வேர்கால்களிலும் நன்கு தேய்க்கவும். தலையில் நான்கு ஐந்து முறை மசாஜ் செய்துவிட்டு பின்னர் தலையை நன்றாக தேய்த்து குளிக்கவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Recipe For Nettle Hair Toner That You Can Prepare At Home

Recipe For Nettle Hair Toner That You Can Prepare At Home
Story first published: Saturday, August 5, 2017, 16:02 [IST]