For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தேங்காய் மூடியை தூக்கி எறியாதீங்க! அதுல இருந்து இயற்கை ஹேர் டை தயாரிக்கலாம்!

நரைமுடியை கருமையாக மாற்ற எளிய முறையில் தேங்காய் மூடிக் கொண்டு எப்படி ஹேர் டை தயாரிக்கும் முறையை இங்கே தரப்பட்டுள்ளது.

By Lekhaka
|

தலைமுடி, நாற்பது வயதுகளில் ஆரம்பித்து, ஐம்பது வயதுகளில் சிலருக்கு முழுக்க நரைத்ததெல்லாம், அந்தக்காலம், இப்போது வயசு வித்தியாசமே இல்லாமல், எல்லோருக்கும், ஏன் சிறுவர்கள் கூட, நரைத்த தலையுடன் காணப்படுவது, மனதிற்கு மிகவும் நெருடலான ஒன்றாகும்.

நடுத்தர வயதில் உள்ள சில ஆண்களெல்லாம் நரைக்கு அலட்டிக் கொள்ளாமல், "தல" ஸ்டைலில், நரையே அழகு என சால்ட் அண்ட் பேப்பர் தோற்றத்தில் இருந்தாலும், பெண்கள் அப்படி இருக்கமுடியுமா? அவர்களுக்கு நகைகள் கூட அப்புறம்தான், தலை நரைத்து விட்டாலே, அதைப் பார்த்து பார்த்து, மனம் கலங்கி விடுவர்.

அவர்களின் மனப்பூர்வமான முயற்சிகளில் தவறில்லை, ஆயினும், இன்று கடைகளில் கிடைக்கும் தலைச்சாயங்கள் எல்லாம், இயற்கையானதுதானா? அவை எல்லாம் கலப்படம் இல்லாத கெமிக்கல்கள் மற்றும் இயற்கைச் சாயம் எனும் பெயருடன் வருவதும், பாதிப்பைத் தரக் கூடியவைகளே!

இதனால் என்ன ஆகிறது? நரை முடியை போக்க எண்ணி அதிகம் பேர், அந்த சாயங்களின் ஒவ்வாமையினால் உண்டாகும் உடல் தோல் அலர்ஜிக்கு மற்றும் முக கருமைக்கு மருந்துகள் எடுத்துக் கொள்ளும் நிலையே, உண்மையாக இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நரை என் ஏற்படுகிறது?

நரை என் ஏற்படுகிறது?

சில காலம் முன் வரை வீடுகளில் குழந்தை பிறந்தால், ஆணாக இருந்தாலும் சரி, பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, வீட்டில் உள்ள பாட்டிகள் குழந்தைகளுக்குத் தவறாமல் தலையில் எண்ணை தேய்ப்பார்கள். விளக்கெண்ணை அல்லது தேங்காய் எண்ணை தினமும் தலையில் தேய்த்து வருவார்கள்.

அவை குழந்தைகள் உடலுக்கும் தலை முடிகளுக்கும் நன்மை செய்து, முடிகளை நன்கு வளரச் செய்யும்.

மேலும், நரை என்பதே மிக அரிதாக அவர்களின் ஐம்பது வயதுகளின் இறுதியில் மட்டுமே, காணப்படும்.

எண்ணெயில்லா முடி :

எண்ணெயில்லா முடி :

இன்றைய நவீன மருத்துவம், குழந்தைகளுக்குத் தலையில் எண்ணை தேய்ப்பது மிகப் பெரிய தீங்கு என்று கூறுவதால், நாமும், நம் குழந்தைகளுக்கு இயல்பாக நலம் தரக்கூடிய, இயற்கை வைத்திய முறைகளை, பெரியோர் சொல்லியும் கேளாமல், ஒதுக்கி வைத்து விட்டோம்! பலன்களைக் குழந்தைகள் அல்லவா, அனுபவிக்கிறார்கள்!

இப்போதும் கெடவில்லை செயற்கை டைக்களுக்கு பதிலாக இயற்கையான டை தயாரிக்கும் முறையை கற்றுக் கொள்ளுங்கள்.

இயற்கை டை தயாரிக்க :

இயற்கை டை தயாரிக்க :

நம்முடைய முன்னோர்கள் நரை முடி பாதிப்புகள் எளிதில் நீங்க அறிவுறுத்திய, இன்றும் சிலர் கடைபிடிக்கும் ஒரு எளிய தீர்வு இதோ.

தேவையானவை :

சில தேங்காய் மூடிகள் அல்லது நெல்லிக்காய் ஓடுகள் மற்றும் அரை லிட்டர் தேங்காய் எண்ணை.

செய்முறை :

செய்முறை :

தேங்காய் மூடியை நெருப்பில் சுட்டு கரியாக்குங்கள். பின்னர் அதனை பொடி செய்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வெயிலில் சில நாட்கள் வைக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

பிறகு அதை சிறிது எடுத்து, தலைமுடிகளில் தடவிவர வேண்டும். அப்படியே இருக்கலாம், அல்லது தலையை அலச வேண்டுமென்றால், சில மணி நேரம் கழித்து அலசி விடலாம்.

நரைமுடிக்கு பை பை :

நரைமுடிக்கு பை பை :

இதுபோல சில தினங்கள் செய்து வந்தால் உங்கள் நரைத்த முடிகள் மெல்ல மெல்ல மறைவதைக் கண்கூடாகக் காணலாம்.

மேலும், தேங்காய் எண்ணை உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து, மனதில், செயல்களில் ஒரு தெளிவையும் கொடுக்கும். இதுதான், நமது பாரம்பரிய இயற்கை வைத்தியத்தின் தனிச் சிறப்பு!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to get rid of grey hair using coconut shell

Method of using coconut shell to turn Grey hair into black hair,
Desktop Bottom Promotion