For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017இல் ட்ரெண்டில் இருக்கும் ஹேர் கலர் முறை…வாங்க பார்க்கலாம்

இன்றைய இளைஞர்கள் விரும்பும் வகையில் எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் விரும்புகிறார்கள் என்று இந்த கட்டுரையில் சொல்லப்ப்ட்டுள்ளது.

By Bala Karthik
|

பழங்காலத்திலிருந்தே, அழகு சேர்ப்பது என்றதொரு நாகரிகம் வளர்ந்துவந்து கொண்டே இருக்கிறது. ஆம், இந்திய மற்றும் எகிப்திய நாடுகளின் நாகரிங்கள் என்பது, அவர்களுடைய முடிக்கு சாயம் பூச மருதாணியை பயன்படுத்தி வந்துள்ளனர். இன்றும் சாயம் பூச நம் இந்தியாவில் மருதாணி பயன்படுத்தபட, அதுவும் மத்திய கிழக்கு பகுதியாகவே இருக்கிறது.

அன்று முதல், முடியானது பல்வேறு முறைகளில் அலங்கரிக்கப்பட்டும் ஜோடிக்கப்பட்டும் வருகிறது. வயது வந்தவர்களின் முக்கியமான அங்கமாக இந்த முடியை அலங்கரிக்கும் ஹேர் கலரிங்க் முறை இன்று இருக்கிறது.

Hair Colour Trends 2017

மருதாணி ஒரு கட்டுபாட்டுக்குள் (Limitation) வந்துவிடுவதோடு...ஒரே ஒரு நிழலை (நிறம்) மட்டுமே அது தருகிறது. அதேபோல், ஒரு சிலருக்கு மட்டுமே இது சரியான முறையில் பிரதிபலிக்க, மற்றவர்களுக்கு இந்த சாயல் நிறம் பொருந்துவதும் இல்லை.

இந்த மருதாணியில் இருக்கும் குறைகளை போக்குவதற்க்காக யூஜின் ஷூலர், முதன் முறையாக செயற்கை முடி சாயத்தை அறிமுகம் செய்தார். அன்றிலிருந்து அனைவரது வாழ்க்கையிலும் வண்ணமயம் பொங்க, முடியின் நிறம் மாறுபட்டு, வேறுபட்டு...அதனின் வண்ணமயமான போக்கு அதிகரித்து பின்பு மறைந்து போனது. இந்த பருவத்தில் நிற்கும், சில செயற்கை முடி சாயங்களையும் அவற்றின் ஸ்பெசலையும் பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஸ் தங்க நிறம்:

ரோஸ் தங்க நிறம்:

இது, இளஞ்சிவப்பு மற்றும் பொன்னிற கலவையை கொண்டதாகும். கடைசி வருடத்தில் தோன்றிய இந்த நிறம், பின்னர் சிக்கி குறைந்து போனது.

ஒரு தங்க தளத்திற்கு எதிராக பிரகாசிக்கும் உலோக ரோஸ் இளஞ்சிவப்பு நிறம், அழகிய தோற்றத்தையும் தருகிறது.இது இலகுவான முடியை கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகவும் அமைகிறது.

மறைக்கப்பட்ட சிறப்பம்சங்கள் (ஹிடன் ஹைலைட்ஸ்):

மறைக்கப்பட்ட சிறப்பம்சங்கள் (ஹிடன் ஹைலைட்ஸ்):

இந்த முறையின் மூலமாக, உங்கள் கூந்தலின் கீழ் அடுக்குகள் மிகுதிபடுத்துவதோடு... வெளிப்புற அடுக்குகள் நேர்த்தியாகவும் காணப்படுகிறது. முடியின் மேற்பரப்பின் வெளிப்புற தோற்றத்தை, இயற்கையாக காண்பிக்கும் இந்த முறை...உங்கள் கூந்தலிற்கு இயற்கையிலே ஆழத்தன்மையினையும் தருகிறது. இந்த ட்ரெண்ட், இந்த நேரத்தில் மிகவும் பிரசித்திபெற்ற ஒன்றாகும்.

கூந்தல் சுழனிலை (ஹேர் ஸ்ட்ரோபிங்க்):

கூந்தல் சுழனிலை (ஹேர் ஸ்ட்ரோபிங்க்):

இந்த ஸ்டைலானது, இயற்கை அழகை ஒத்ததாக இருக்கிறது. ஆனாலும், சில கூடுதல் சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது. இந்த சிறப்பம்சத்தில் காணப்படும் உலோக தொனி ஒன்று, ஒளிபடுவதனால், உங்கள் கூந்தலை மிளிர செய்கிறது. அத்துடன், இது உங்கள் கூந்தலில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

சில்வர் ப்ளாண்ட்:

சில்வர் ப்ளாண்ட்:

பிரபலங்களால், இந்த ட்ரெண்ட் அதிகம் ஈர்க்கப்படுவதால், ரெட் கார்ப்பெட்டையே (சிவப்பு கம்பளம்) இது குறிவைக்கிறது. இது உங்களை இயற்கையாகவே அழகி தோற்றத்தை எளிதில் தர வல்லதாகவும் இருக்கிறது. கருங்கூந்தலுக்கு அதிக பளபளப்பு தேவைப்பட, டோனிங்க் முறையினால் சரியான தோற்றத்தை தரக்கூடியதாகவும் இது அமைந்திருக்கிறது. இந்த முறையை தைரியத்துடன் நீங்கள் உபயோகித்து பயனையும் அடையலாம்.

மஹோகனி:

மஹோகனி:

இது, சிவப்பு மற்றும் ஊதாவால் ஆன கலவையாகவும், நிறங்கள் மாறுபட்ட விதத்திலும் காணப்படுகிறது. ஆம், ஒருவரின் சருமத்தின் தொனி மற்றும் கூந்தல் நிறத்தை பொறுத்து விகிதம் மாறுபடுகிறது.

இதில் காணப்படும், சிவப்பு மற்றும் ஊதா நிறங்கள், குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான சிரமம் கொண்டவர்களுக்கும் பொருத்தமாக அமைகிறது. இந்த சீசனில் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இது இருக்க, இதில் காணப்படும் பன்முகத்தன்மை நிழல்...வெவ்வேறு ஸ்டைல்களில் காணப்படுவதுடன், அவை பலயாஜ் முதல் ஒம்பராகவும் இருக்கிறது.

சாம்பல் லைலக்:

சாம்பல் லைலக்:

சாம்பல் நிறத்தின் வேறுபாட்டை காண்பிக்கும் இது, உலோகத்தை காட்டிலும் சுண்ணாம்பின் அளவு அதிகமிருக்க குறிப்பாக ஊதாவையும் கொண்டுள்ளது. 80களின் கிரன்ஞ் இயக்கத்தின் போது ஈர்க்கப்பட்டு எழுச்சி கொண்ட இதனை நீங்கள் தவறாமல் பயன்படுத்துவதனால், உங்களை கண்டிப்பாக ஈர்க்கும் என்கின்றனர்.

டூ டோன்:

டூ டோன்:

இந்த வருடத்தின் ட்ரெண்டானவற்றுள் ஒன்றான இந்த டூ டோன் கூந்தல், வெளிப்புறத்தில் மங்கிய இளஞ்சிவப்பு நிறம், இளம் ஊதா, புகை நிறத்திலிருக்க, இது உங்கள் அழகை கொண்டு அனைவரையும் கவரும் வித்தியாச அழகிய தோற்றத்தையும் உங்கள் கூந்தலுக்கு தருகிறது. கருப்பு நிறத்துடன் இளம் பொன் நிறமும்., இளஞ்சிவப்பு நிறத்துடன் இளம் பொன் நிறம் (அ) அழகியின் நிறமும், இளம் ஊதா நிறத்துடன் இளம் பொன் நிறம் அல்லது ஆரஞ்ச் நிறத்துடன் இணைந்து காணப்படுகிறது.

நியூட் ஹேர்:

நியூட் ஹேர்:

2017இல் பட்டையை கிளப்பும் மற்றுமோர் மாடலின் பெயர் தான் இந்த ‘நியூட் ஹேர்' ஆகும். மணலின் நிறத்தை ஒத்த அழகை கொண்ட இந்த மாடல், வெவ்வேறு விதமான பொன்னிறத்துடன் காணப்பட, அது குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நிலைகளையும் கொண்டுள்ளது.

நாம் எந்த விதமான சிகை அலங்காரங்களை கொண்டு முடியை அழகுபடுத்தினாலும் அது அருமையாக பின்புலத்தில் அமைந்து நம் அழகினை மெருகேற்றுகிறது.

மெட்டாலிக் ஹேர்:

மெட்டாலிக் ஹேர்:

நீங்கள் படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். பெண்கள் பெரும்பாலும் இந்த மெட்டாலிக் ஹேர் மாடலையே விரும்புகிறார்கள் என்பதுதான் உண்மை. மெட்டாலிக் ஹேர் (உலோக முடி) என்றால் என்ன?

இது சில சாயல்களை கொண்டு உங்கள் கூந்தலுக்கு சாயம் பூசப்பட, அது உலோகத்தை ஒத்திருக்கிறதாம். இது பார்ப்பவர்களிடம் அதிக கவனத்தை ஈர்க்கும் ஒன்றாகவும் உள்ளது. நிறைய நிழல்கள், சருமத்திற்கு ஏற்றவாறு இருக்க, அதன் பராமரிப்பு மற்றதனை போன்று கடினமாக ஒன்றும் இருப்பதில்லை.

வெளிர் முடி:

வெளிர் முடி:

மெட்டாலிக் ஹேரையே பொறாமை கொள்ள செய்யும் ஒன்று தான் இந்த வெளிர் முடி. சுண்ணாம்பினை போன்ற தோற்றத்தை தரும் இந்த முடி, உறைந்த கோடைக்காலத்தின் நாட்கள் போது சிறந்ததோர் தேர்வாக இருக்கிறது. அந்த சுண்ணாம்பு போன்றது, உங்கள் முடியின் எண்ணெய் பிசுபிசுப்பை மறைத்துவிட உதவ, நிறைய பேருக்கு பிரச்சனையையும் கொடுக்கிறது. ஒரு சில பேர்கள்தான் அதிர்ஷ்டவசமாக இந்த எதிர்ப்புகளிலிருந்து மீண்டு, சூடான பருவத்தில் இதனை பயன்படுத்துகின்றனர். இதன் அழகிய நிழலானது இளஞ்சிவப்பு, நீலம், பச்சை, மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Colour Trends 2017

Hair Colour Trends 2017,
Story first published: Wednesday, June 14, 2017, 17:35 [IST]
Desktop Bottom Promotion