உங்களுக்கு இளநரையா? நரையை கருப்பாக மாற்றச் செய்யும் அருமையான குறிப்புகள்!!

Written By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நாம் வயதாகுவதை யாராவது எதிர்பார்ப்பமா அல்லது விருப்பம் தான் படுவமா. நம் ஆசை கனவுயெல்லாம் என்றும் இளமையாகத் தான் இருக்கும். ஆனால் நாம் வயதாகுவதையோ அல்லது அதன் மாற்றத்தையோ நம்மால் மாற்ற முடியாது. நாம் வயதாகுவதன் முதல் அடையாளம் வெள்ளை முடி வருதல். இந்த வெள்ளை முடியை மறைக்க நாமும் டை அடிப்போம், கலரிங் பண்ணுவோம் அல்லது மருதாணி பயன்படுத்துவோம் இப்படி எவ்வளவோ போராடியும் நமக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைக்காது அல்லவா?

20 மற்றும் 30 ல் இருந்தவர்கள் இதை பற்றி பொருட்படுத்தவில்லை. ஆனால் மாறி வரும் நம் மாடர்ன் சொஸைட்டியில் இதை பற்றிய வருத்தமும் எண்ணங்களும் அதிகரிக்கத் தான் செய்கிறது. மேலும் இந்த வெள்ளை முடி பிரச்சினை மன அழுத்தம், சுற்றுச்சூழல் மாசு, தவறான உணவுப் பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்றவற்றாலும் ஏற்படுகிறது.

Remedies To Get Rid Of Premature Grey Hair

அந்த காலத்தில் இந்த வெள்ளை முடியை மறைப்பது என்பது ஒரு கடினமான விஷயம். டை அடித்தாலும் இயற்கையான நிறமாக தெரியாது. எனவே கலரிங் செய்தல் தான் அந்த காலத்தில் இருப்பவருக்கு இருந்த ஒரு முறை ஆகும்.

இனி மேல் உங்கள் வெள்ளை முடியை நினைத்து கவலை பட வேண்டாம் . இங்கே இயற்கையான முறையில் உங்கள் வெள்ளை முடியை மாற்ற சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறு :

வெங்காயம் மற்றும் எலுமிச்சை சாறு :

இந்த முறை வெள்ளை முடிக்கு மிகவும் சிறந்தது. இது மிகவும் பயன் தரக் கூடிய ஒன்றாகும். வெங்காயத்தில் உள்ள கேட்லேஸ் என்ஜைம்கள் ஹைட்ரஜன் பெராக்சைடை நடுநிலைப்படுத்தி உங்கள் வெள்ளை முடியை கருப்பாக மாற்றி விடும்.

தேவையான பொருட்கள் :

1 வெங்காயம்

1 லெமன்

செய்முறை :

1. முதலில் வெங்காயத்தின் தோலை உரித்து நறுக்கி அதை மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும்.

2. இந்த பேஸ்ட்டிலிருந்து ஜூஸை மட்டும் வடிகட்டி அதனுடன் லெமன் ஜூஸை கலந்து கொள்ளவும்.

3. இந்த கலவையை முடி மற்றும் தலையில் இரவில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 கோதுமைப்புல் மற்றும் பார்லி புல்:

கோதுமைப்புல் மற்றும் பார்லி புல்:

கோதுமைப்புல் மற்றும் பார்லிபுல்லில் அதிகமான கேட்லேஸ் என்ஜைம்கள் உள்ளது. இது உங்கள் வெள்ளை முடியை மாற்றி விடும்.

தேவையான பொருட்கள்

1 கைப்பிடியளவு கோதுமைப்புல்

1 கைப்பிடியளவு பார்லி புல்

செய்முறை

1. இந்த இரண்டு புல்களையும் மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

2. இரவில் இந்த பேஸ்ட்டை முடி மற்றும் தலையில் தடவிக் கொள்ள வேண்டும்.

3. காலையில் எழுந்து கழுவினால் உங்கள் வெள்ளை முடி மாயமாய் மறைந்து போகும்.

#3 நெல்லிக்காய், பாதாம் எண்ணெய்

#3 நெல்லிக்காய், பாதாம் எண்ணெய்

இது வெள்ளை முடியை மாற்றும் ஒரு அற்புதமான முறையாகும்

தேவையான பொருட்கள்

4-5 காய்ந்த நெல்லிக்காய்

2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய்

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை

1. முதலில் காய்ந்த நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு பொடியாக்கி அதனுடன் பாதாம் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கொள்ள வேண்டும்.

2. இந்த கலவையை இரவில் தலைமுடியில் தடவ வேண்டும்.

3. காலையில் எழுந்து கழுவினால் உங்கள் வெள்ளை முடியில் மாற்றத்தை காணலாம்.

 கறிவேப்பிலை டானிக் :

கறிவேப்பிலை டானிக் :

இது ஒரு சக்தி வாய்ந்த டானிக் ஆகும். இதன் அதிகமான B-குரூப் விட்டமின்கள் வெள்ளை முடியின் நிறத்தை மாற்றுகிறது. இதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்தால் இன்னும் அதிகமான பலன்கள் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

1 கைப்பிடியளவு கறிவேப்பிலை

1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

செய்முறை

1. முதலில் கைப்பிடியளவு கறிவேப்பிலையை ஒரு பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.

2. அப்புறம் தேங்காய் எண்ணெய் கலந்து 8-10 நிமிடங்கள் இலையின் நிறம் கருப்பாக மாறும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

3. பிறகு அடுப்பை அணைத்து விட்டு இந்த கலவையை குளிர்படுத்த வேண்டும்

இந்த எண்ணெய்யை இரவில் தலை மற்றும் முடியில் நன்றாக தடவினால் வெள்ளை முடி கருப்பாக மாறுவதோடு முடியும் நன்றாக வளரும்.

இதை வாரத்திற்கு 4-5 தடவை செய்தால் நல்ல பலனை காணலாம்.

கருப்பு எள் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் :

கருப்பு எள் எண்ணெய் மற்றும் ஆலிவ் ஆயில் :

வெள்ளை முடியை கருப்பாக மாற்ற இந்த இரண்டு பொருளும் முக்கியமானது. மேலும் இவைகள் முடியை பொலிவாகவும் அழகாகவும் மாற்றுகிறது. முடியின் வேரின் வளர்ச்சியை தூண்டுகிறது.

தேவையான பொருட்கள்

2 டேபிள் ஸ்பூன் கருப்பு எள் எண்ணெய்

2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்

செய்முறை

1. இந்த இரண்டு ஆயிலையும் ஒரு பெளலில் கலந்து கொள்ளவும்.

2. இதை தலையில தடவிக் கொள்ள வேண்டும்

3. சில மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

இது வெள்ளை முடியை கண்டிப்பாக கருப்பாக மாற்றும். உங்கள் முடிக்கு இயற்கையான நிறத்தை வழங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies To Get Rid Of Premature Grey Hair

Remedies To Get Rid Of Premature Grey Hair
Story first published: Wednesday, June 21, 2017, 9:00 [IST]