தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க வேண்டுமா? அப்ப இந்த இஞ்சி மாஸ்க் போடுங்க...

Posted By:
Subscribe to Boldsky

பழங்காலம் முதலாக நாம் சந்திக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண இஞ்சி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது உடல் ஆரோக்கியம் ஆகட்டும் அல்லது அழகு பிரச்சனை ஆகட்டும், அனைத்திற்கும் இஞ்சியின் மூலம் நம் முன்னோர்கள் தீர்வு கண்டு வந்தனர்.

DIY Ginger Hair Mask For Extreme Hair Growth

தற்போது நிறைய பேருக்கு இருக்கும் கவலைகளுள் ஒன்று தலைமுடி பிரச்சனையாகும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எதுவாக இருந்தாலும், இஞ்சியை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு மாஸ்க் செய்து பயன்படுத்தி வந்தால், தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 1 பெரியது

ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை #1

செய்முறை #1

முதலில் இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு, பின் துருவிக் கொள்ள வேண்டும்.

செய்முறை #2

செய்முறை #2

மிக்ஸியில் துருவிய இஞ்சி, ஆலிவ் ஆயில் மற்றும் தேன் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இஞ்சி மாஸ்க் தயார்.

செய்முறை #3

செய்முறை #3

தலைமுடியை நீரில் நனைத்து, பின் தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை தடவி, ஷவர் கேப் கொண்டு தலையை முழுமையாக மூடி, 40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

செய்முறை #4

செய்முறை #4

பின் ஷாம்பு அல்லது சீகைக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

குறிப்பு

குறிப்பு

இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வது குறைந்து, முடியின் அடர்த்தி அதிகரித்திருப்பதையும், வளர்ந்திருப்பதையும் நன்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

DIY Ginger Hair Mask For Extreme Hair Growth

Try this ginger hair mask for extreme hair growth. Read on to know more...
Story first published: Wednesday, May 24, 2017, 15:15 [IST]