For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அடர்த்தியாக முடி வேணுமா? அப்போ இந்த விட்டமின் அதிகமா எடுத்துகோங்க!!

முடி வளர்ச்சிக்கு தேவையான 8 விட்டமின்கள் மற்றும் மினிரல்கள் பற்றிய தகவல்

|

ஆரோக்கியமான கூந்தல் உங்கள் அழகை மட்டும் சொல்லாது உங்கள் உடல் நலத்தை பற்றியும் சொல்லும். நல்ல அடர்த்தியான ஆரோக்கியமான கூந்தல் கிடைக்க வேண்டும் என்பது உங்கள் கனவாக இருந்தால் அதற்கு வெறும் 8 விட்டமின்கள் மற்றும் மினிரல்கள் போதும். ஆமாங்க உங்கள் கனவை நனவாக்கும் அந்த விட்டமின்கள் மற்றும் மினிரல்கள் பற்றிய தகவல்களை தமிழ் போல்டு ஸ்கை இங்கே உங்களுக்காக வழங்க உள்ளது.

சரி எப்படி எல்லா வழிகளிலும் உங்கள் கூந்தலுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களை கிடைக்கச் செய்யலாம் எனத் தெரியுமா. நீங்கள் சலூன் சென்று உங்கள் கூந்தலை பராமரித்தால் கூட சில வாரங்கள் ஆரோக்கியமாக இருக்கும். பிறகு மறுபடியும் பழைய நிலைக்கு வந்து விடும். வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமான கூந்தல் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். அதற்கு சத்தான ஆரோக்கியமான உணவுகளை நாம் எடுத்துக் கொண்டாலே போதும் என்றென்றும் அழகான கூந்தலை பெற முடியும்.

8 Vitamins and Minerals For Hair Growth & Thickness

எனவே இனி மேலாவது உங்கள் பணத்தை கொண்டு சலூனில் செலவழிக்காதீர்கள். சலூன் பராமரிப்பு கூந்தலை வெளிப்புறமாக மட்டுமே ஆரோக்கியமாக ஆக்கும். உங்கள் முடியின் மயிர்கால்களுக்கு போதுமான போஷாக்கு கொடுத்து வலிமையாக்க விட்டமின்கள் மற்றும் மினிரல்கள் உள்ள உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். சரி அதைப் பற்றிய ஒரு தொகுப்பை இக்கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜிங்க்

ஜிங்க்

ஜிங்க் சத்து முடியின் வேர்க் கால்களுக்கு மிகவும் முக்கியம். இது வேர்க் கால்கள் பலவீனமடைவதை தடுக்க உதவுகிறது. புதிய செல்கள் உருவாக ஜிங்க் சத்து கண்டிப்பாக நமது உடலுக்கு தேவை. மேலும் இது நமது உடலில் உள்ள ஹார்மோன்களை சரியான அளவில் வைக்க உதவுகிறது. ஹார்மோன்கள் சரியான அளவில் இல்லாததால் தான் நமக்கு முடி உதிர்வே ஏற்படுகிறது. ஒரு நாளைக்கு 15 மில்லி கிராம் ஜிங்க் எடுத்து கொண்டால் போதுமானது. அதிகமான ஜிங்க் சாதகமான பயனை தராது.

ஜிங்க் அடங்கியுள்ள உணவுகள்

பூசணிக்காய் விதைகள்

முந்திரி பருப்பு

கீரைகள்

யோகார்ட்

சிக்கன்

மஸ்ரூம்

கொண்டைக்கடலை

 மீன் எண்ணெய்

மீன் எண்ணெய்

ஓமோக 3 கொழுப்பு அமிலங்கள் மீனில் உள்ளன. இந்த சத்து முடிக்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து முடி ஆரோக்கியமாக அடர்த்தியாக வளர உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலம் நமது ஸ்கால்ப்பில் உள்ள அழற்சியை போக்குகிறது. எனவே தினமும் மீன் எண்ணெய் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடலுக்கு தேவையான ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கிடைக்கும். சால்மன், மாக்கெரல், டுனா, வொயிட் பிஷ் மற்றும் சார்டைன்ஸ் போன்ற மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அடங்கிய உணவுகள்

முட்டையின் மஞ்சள் கரு

வால்நட்ஸ்

சணல் விதைகள்

சோயா பீன்ஸ்

ஆளி விதைகள்

சியா விதைகள்

பி-காம்பிளக்ஸ் விட்டமின்கள்

பி-காம்பிளக்ஸ் விட்டமின்கள்

பி-காம்பிளக்ஸ் விட்டமின்களுக்கும் முடி வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு கிடையாது. ஆனால் இது போதுமான அளவு இல்லையென்றால் முடி உதிர்வு ஏற்படும். பி-காம்பிளக்ஸ் விட்டமின் என்பது நீரில் கரையைக் கூடிய 8 விட்டமின்களை கொண்டுள்ளது. அவைகள் பி1, பி2, பி3, பி5, பி6, பி7, பி9 மற்றும் பி12. பி7 விட்டமின் பயோடின் மிகவும் முக்கியமானது. பி5 (பேன்டோதேனிக் அமிலம்) அட்ரீனல் சுரப்பியை தூண்டி முடி வளர்ச்சியை தூண்டுகிறது. பி1(தையமின்), பி2(ரிபோப்ளவின்) பி3(நியாசின் ) இவைகள் மயிர் கால்களுக்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது.

பி - காம்ப்ளக்ஸ் அடங்கிய உணவுகள்

பயிறு வகைகள்

நட்ஸ்

உருளைக்கிழங்கு

மீன்

முட்டை

பீன்ஸ்

சோயா மில்க்

 இரும்புச் சத்து

இரும்புச் சத்து

இரும்புச் சத்து குறைபாடு முடி பிரச்சினைகளான புழு வெட்டு , டெலோஜென் எவுலுவியம் மற்றும் முடி உதிர்தல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. எனவே உடம்புக்கு போதுமான இரும்பு சத்து உணவுகளை எடுத்துக் கொண்டால் கூந்தல் நன்கு வலிமையாக அடர்த்தியாக இருக்கும். இரும்புச் சத்து முடிகள் நீளமாக வளர்வதற்கும் அதன் நீட்சித் தன்மைக்கும் உதவுகிறது. இரும்புச் சத்து மயிர்கால்களுக்கு போதுமான ஆக்ஸிஜனை கொடுத்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஒரு சராசரி இளம் பருவத்தினருக்கு ஒரு நாளைக்கு 18 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. அதிகமான இரும்புச் சத்து பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

இரும்புச் சத்து அடங்கிய உணவுகள்

கீரைகள்

உலர்ந்த திராட்சை

ஆப்ரிகாட் பழங்கள்

கருப்பு பீன்ஸ்

முட்டை மஞ்சள் கரு

சிவப்பு இறைச்சி

கோழி இறைச்சி

விட்டமின் சி

விட்டமின் சி

விட்டமின் சி கூந்தலுக்கு தேவையான கொலாஜன் என்ற புரோட்டீனை கொடுக்கிறது. இது முடியின் வலிமை மற்றும் நீட்சித் தன்மையை அதிகரிக்கிறது. கொலாஜன் அமினோ அமிலத்தை அதிகரிக்கிறது. இது தான் முடியின் கெராட்டின் அமைப்புக்கு அடிப்படை ஆகும்.

விட்டமின் சி மேலும் ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போல் செயல்படும். வயதாவதால் மற்றும் மன அழுத்தத்தால் முடியில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கிறது. எனவே தினமும் பெண்கள் சராசரியாக 75 மில்லி கிராம் விட்டமின் சி யும் ஆண்கள் 90 மில்லி கிராம் விட்டமின் சி யும் எடுத்து கொண்டால் ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும்.

விட்டமின் சி அடங்கிய உணவுகள்

ஆரஞ்சு

பிராக்கோலி

ஸ்ட்ராபெர்ரி

கலே

கொய்யா

கிவி பழங்கள்

திராட்சை பழங்கள்

குடை மிளகாய்

விட்டமின் டி

விட்டமின் டி

விட்டமின் டி என்ற ஹார்மோன் முடிக்கு நன்மைகளை அழிப்பதோடு புதிய முடிகள் வளரவும் உதவுகிறது. புழு வெட்டு போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டவர்கள் விட்டமின் டி குறைபாடு உள்ளவர்கள் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்ு சத்துக்களை போன்றே விட்டமின் டி யும் நமது உடலுக்கு மிகவும் முக்கியம். சூரிய ஒளியிடமிருந்து நேரடியாக நாம் விட்டமின் டி யை பெற முடியும்.

விட்டமின் டி அடங்கிய உணவுகள்

சால்மன்

மஸ்ரூம்

முட்டை

பால்

மீன் எண்ணெய்

பயோடின் (விட்டமின் பி7)

பயோடின் (விட்டமின் பி7)

பயோடினுக்கு இன்னொரு பெயர் முடி வளர்ச்சியை தூண்டும் விட்டமின் என்று பெயர். முடி உதிர்தல் பிரச்சினைய சந்திக்கும் நபராக இருந்தால் கண்டிப்பாக பயோடின் விட்டமின் குறைபாடு இருக்கும். முடிக்கு தேவையான பயோடின் கிடைத்து விட்டால் அவைகள் அமினோ அமிலத்தை உருவாக்கின்றன. அமினோ அமிலங்கள் தான் முடியின் கெராட்டின் அமைப்புக்கு முக்கியமானது. எனவே தினமும் மிகச் சிறிய அளவு 30 மைக்ரோ கிராம் அளவு எடுத்து கொண்டால் ஆரோக்கியமான அடர்ந்த கூந்தலை பெற முடியும்.

பயோடின் அடங்கிய உணவுகள்

அவகேடா

முட்டை

பச்சை காலிபிளவர்

கோதுமை பிரட்

நட்ஸ்

ஈஸ்ட்

சிடார் சீஸ்

ராஸ் பெர்ரி

விட்டமின் ஏ

விட்டமின் ஏ

தலை முடி ஆரோக்கியமாக இருக்க தலையில் சுரக்கும் சீபம் என்ற எண்ணெய் முக்கியம். அதிகமான அல்லது குறைவான சீபம் எண்ணெய் நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. விட்டமின் ஏ இந்த சீபம் எண்ணெய் சரியான அளவில் சுரப்பதற்கு உதவுகிறது. குறைந்த சீபம் எண்ணெய் முடியை வறட்சியாக்கி கூந்தலின் பொலிவை இழக்கச் செய்கிறது. மேலு‌ம் விட்டமின் ஏ அடர்த்தியான முடிகள் வளர உதவுகிறது. தினமும் 7.5 மில்லி கிராம் விட்டமின் ஏ எடுத்துக் கொள்ள வேண்டும்.

விட்டமின் ஏ அடங்கிய உணவுகள்

காரட்

கீரைகள்

மாம்பழம்

உலர்ந்த ஆப்ரிகாட்

பீச்

சர்க்கரை வள்ளிக் கிழங்கு

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Vitamins and Minerals For Hair Growth & Thickness

8 Vitamins and Minerals For Hair Growth & Thickness
Story first published: Tuesday, December 12, 2017, 15:01 [IST]
Desktop Bottom Promotion