For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுருள் முடி இருப்பவர்களின் கவனத்திற்கு...!!

By Bala Karthik
|

கருகருவென முடிகள் பெண்களுக்கு அழகாக, சுருளாக இருக்கும் பார்ப்பதற்கு அழகாய் இருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் இவர்கள், இத்தகைய முடிகளால் சிரமங்களை அடைவதுண்டு.

அதனால் இந்த கட்டுரை, கர்லி ஹேர் கொண்ட பெண்களுக்கு பயனுள்ளதாக இருக்க கூடும் என்பது எங்கள் கருத்தாகும். ஆம், எங்கள் 10 பேர் கொண்ட குழுவின் உதவியுடன்., இந்த கர்லி ஹேரினை கையாள நாங்கள் முயற்சி செய்துள்ளோம். இந்த 10 பேரும், உங்கள் முடிகளில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்க உதவுவதுடன், அதனை ஆரோக்கியமாகவும் பாதுகாக்க உங்களுக்கு 'போல்ட் ஸ்கை' பத்திரிக்கையின் மூலமாக முன்வந்துள்ளனர். பார்க்கலாமா...

10 Genius Hacks Every Curly Haired Girl Must Know

இவர்கள் அலசி ஆராய்ந்து உங்கள் முடிகளில் ஏற்படும் சிக்கல்களுக்கான வழிமுறைகளை தர...அவை அனைத்தும், வீட்டில் நீங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருள்களாகவே அமைந்து, உங்கள் பண சிக்கலையும் போக்குகிறது.

இப்பொழுது உங்கள் கர்லி ஹேரினை பராமரிக்கும் எளிய வழிமுறைகளை கீழே நாம் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெரிய பற்கள் கொண்ட சீப்பு :

பெரிய பற்கள் கொண்ட சீப்பு :

அகன்ற பற்களை கொண்ட சீப்புகளை நாம் பயன்படுத்துவதன் மூலம்...நம்முடைய முடிக்கு எந்த ஒரு பங்கமுமின்றி நம்மால் சிக்கலுக்கான தீர்வினை பெற முடியும் என்கிறார் இவர். சீப்பினை கொண்டு முதலில் சீவி, அதன் பின் நாம் ஹேர் ஸ்ப்ரேக்களை அடிப்பதன் மூலம் உங்கள் கர்லி ஹேர் சிக்கலுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் இவர் உறுதியாக கூறுகிறார்.

சுருள் முடிக்கென்றே ஷாம்பு :

சுருள் முடிக்கென்றே ஷாம்பு :

இன்று மார்க்கெட்டில் கர்லி ஹேருக்கென்றே பல விதமான ஷாம்பூ விற்கிறதாம். அதனை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடிகளின் சிக்கலை போக்கிகொள்ளலாம் என்கிறார் இரண்டாம் நபர்.

கண்டிஷனர், மௌஸ் (அ) செரம் என நீங்கள் வாங்கும் பொருளில், கர்லி ஹேருக்கு பயன்படுத்தலாமா என்ற லேபிள் இருப்பதனை உறுதிசெய்து கொண்டு பயமில்லாமல் அதனை உபயோகிக்கலாம் என்கிறார் இவர்.

தலைமுடி காய வைக்க :

தலைமுடி காய வைக்க :

உங்கள் முடியை ட்ரை செய்ய டவலை பயன்படுத்துவதற்கு பதிலாக காட்டன் டீ-சர்ட்டை பயன்படுத்துங்கள் என்கிறார் இவர். இந்த வழிமுறையை ஒரு சில தினங்கள் பின்பற்றினாலே போதும்...உங்கள் முடிகளில் ஏற்படும் சிக்கல் பிரச்சனை உங்களை விட்டு தூரம் செல்வதனை நீங்கள் உணரலாம் என்றும் இவர் கூறுகிறார்.

டிஃப்பியூசர் இணைப்பு கொண்டு ப்ளோ ட்ரை செய்வது எப்படி:

டிஃப்பியூசர் இணைப்பு கொண்டு ப்ளோ ட்ரை செய்வது எப்படி:

நம்முடைய நான்காம் வல்லுனர், இந்த முறை... மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்குமென கூறுகிறார். உங்களுடைய ஹேர் ட்ரையருடன் டிப்பியூசரை (விரைவி) இணைத்துகொள்ள வேண்டும் என்கிறார்.

அதேபோல், வார்ம் அல்லது கோல்ட் செட்டிங்கின் உதவியுடன் நம்மால் இந்த கர்லிஹேரினை மேம்படுத்த முடியும் எனவும் இவர் கூறுகிறார்.

ஒருவேளை நீங்கள் செட் செய்திருக்கும் நிலையானது ஹாட் செட்டிங்காக இருந்தால்...அது உங்கள் பாலிக்கில்ஸை சேதப்படுத்துவதுடன் அது எளிதில் உடைந்து போய்விடும் என்றும் கூறுகிறார் இவர்.

 ஷாம்பு தேய்ப்பதற்கு முன்பு ஹாட் ஆயிலை தேய்க்க வேண்டும்:

ஷாம்பு தேய்ப்பதற்கு முன்பு ஹாட் ஆயிலை தேய்க்க வேண்டும்:

இந்த எளிய முறையினை, உங்கள் வீட்டிலே வாரம் தோறும் செய்து வர...அது ஆரோக்கியத்தை மேம்படுத்தி பாலிக்கில்ஸின் (கருமுட்டை) தோற்றத்தையும் விரிவடைய செய்கிறது. இந்த எளிய பாரம்பரிய வைத்தியம், உங்கள் கர்லி ஹேர் சிக்கலுக்கு தீர்வு தந்து முடியினை மேம்படுத்தி ட்ரை ஆகாமல் தடுப்பதுடன், உடையாமல் பாதுகாக்கவும் பெரிதும் உதவுகிறது என்கிறார் இவர்.

படுக்கைக்கு செல்லும் முன் கண்டிஷனரை விட்டு விலகி செல்ல வேண்டும்:

படுக்கைக்கு செல்லும் முன் கண்டிஷனரை விட்டு விலகி செல்ல வேண்டும்:

உங்கள் முடியில் ஏற்படும் சிக்கலுக்கு ஒரு மூலக்காரணமாக இந்த கண்டிஷனர் இருக்க...தூங்க செல்லும் முன் அதனை விட்டு தூர செல்லுங்கள் என்கிறார் இவர்.

இந்த இரவு வைத்தியம் உங்களுக்கு பயன்தர, உங்கள் கர்லி ஹேரினை மிருதுவாக வைக்கவும் பவுன்ஸியாக வைக்கவும் இந்த முறை பெரிதும் உதவுகிறதாம்.

அதனால், இந்த முறையை வாரத்தில் இரண்டு தடவையாவது நீங்கள் செய்து, உங்கள் கர்லி ஹேரினை அழகாகவும்...நீளமானதாகவும் கொண்டு மகிழலாம் என்கிறார் இவர்.

உங்கள் முடி ஈரமாக இருக்க சீப்பினை பயன்படுத்தலாம்:

உங்கள் முடி ஈரமாக இருக்க சீப்பினை பயன்படுத்தலாம்:

உங்கள் கூந்தல் ஈரமாக இருக்க, அப்பொழுது சீப்பினை உபயோகிப்பதன் மூலம் கர்லி ஹேரில் ஏற்படும் லாக்குகளை (சிக்கல்) நம்மால் நிர்வகிக்க முடியும். இந்த ஈரமான கூந்தல் ட்ரை ஆகிவிட...அது முடியினை ஈசியாக உடைத்து வேரிலிருந்து வரும் பாலிக்கல்ஸை அது வழுவிழக்க செய்கிறது என்கிறார் இவர்.

ஹேர் ஸ்ப்ரே உபயோகிக்கும் முன் :

ஹேர் ஸ்ப்ரே உபயோகிக்கும் முன் :

எங்களுடைய எட்டாம் வல்லுனர், கர்லி ஹேரின் தோற்றத்தை பற்றி பெரிய ஆராய்ச்சியே செய்து உங்களுக்கு சொல்கிறார். அது என்னவென்றால்...ஹேர் ஸ்ப்ரே அடிக்கும் முன் உங்கள் முடியினை நன்றாக உள்நோக்கி சுற்றிவிட வேண்டும் என்கிறார் இவர்.

அப்பொழுது உங்களுடைய கர்ல் தயார் நிலைக்கு தள்ளப்பட...கர்லி ஹேருக்கென்று பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஹேர் ஸ்ப்ரேயினை மட்டும் பயன்படுத்த வேண்டுமெனவும் இவர் கூறுகிறார். இவர் கூறியபடி ஒரு முறை செய்து தான் பாருங்களேன்...வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.

இரவில் கொண்டை :

இரவில் கொண்டை :

இவர் கூறுவது என்னவென்றால்...தூங்க செல்லும் முன்னர் உங்கள் முடிகளை நன்றாக முடிந்துவிட வேண்டும் என்கிறார். இந்த நிலைப்பாடும் உங்கள் கர்லி ஹேர் பிரச்சனைக்கு முடிவுகட்டி பெரும் வித்தியாசத்தை தரும் என்றும் இவர் கூறுகிறார்.

ஆம், இரவு பொழுதில் நீங்கள் இவ்வாறு முடிந்துகொண்டு தூங்க...காலையிலே உங்கள் முடிகளில் மாற்றத்தை காணலாம் எனவும் உறுதியாக இவர் கூறுகிறார். அதனால், உங்கள் கர்லி ஹேரினை சமாளிக்க இந்த முறையை கொஞ்சம் பின்பற்றி தான் பாருங்களேன்.

கீழ் இருந்து மேல் நோக்கி சீவுதல் :

கீழ் இருந்து மேல் நோக்கி சீவுதல் :

இவர் தான் நாம் பார்க்க போகும் கடைசி வல்லுனர். இவர் என்ன சொல்கிறார் என்றால்...உங்கள் கூந்தலின் கீழ் இருந்து மேல் நோக்கி சீப்பினை பயன்படுத்துமாறு எளிய யோசனையை இவர் கூறுகிறார். இந்த முயற்சியின் மூலம், உங்கள் கர்லின் வடிவம் பாதுகாக்க பட, உங்கள் முடியில் உள்ள பாலிக்கல்ஸையும் (கருமுட்டை) உடையாமல் இது பாதுகாக்கிறது என்கிறார் இவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Genius Hacks Every Curly Haired Girl Must Know

10 Genius Hacks Every Curly Haired Girl Must Know
Story first published: Tuesday, May 30, 2017, 16:01 [IST]
Desktop Bottom Promotion