வாரம் ஒருமுறை தலைக்கு கறிவேப்பிலை வெந்தயம் மாஸ்க் போட்டால் கிடைக்கும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய தலைமுறையினர் ஏராளமான தலைமுடிப் பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருகின்றனர். தலையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நமது சமையலறையில் உள்ள பொருட்களே நல்ல தீர்வை வழங்கும். அதுவும் கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தைக் கொண்டு தலைக்கு மாஸ்க் போட்டால், ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

எனவே கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டு தலைமுடியைப் பராமரிப்பதைத் தவிர்த்திடுங்கள். சரி, இப்போது வாரம் ஒரு முறை தலைக்கு கறிவேப்பிலை வெந்தயம் மாஸ்க் போடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாஸ்க் போடும் முறை

மாஸ்க் போடும் முறை

சிறிது கறிவேப்பிலை மற்றும் ஊற வைத்த வெந்தயத்தை நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

மென்மையான முடி

மென்மையான முடி

இந்த நேச்சுரல் ஹேர் மாஸ்க் தலையில் ஈரப்பசையை தக்க வைத்து, தலைமுடியை வறட்சியின்றி மென்மையாக வைத்துக் கொள்ளும்.

முடி வெடிப்பு குறையும்

முடி வெடிப்பு குறையும்

இந்த கறிவேப்பிலை வெந்தயம் மாஸ்க் தலைமுடியின் முனைகளில் உள்ள வெடிப்புக்களைக் குறைத்து, முடிக்கு நல்ல ஊட்டத்தை வழங்கி, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பொலிவான முடி

பொலிவான முடி

கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தில் உள்ள ஏராளமான வைட்டமின்கள், மயிர்கால்களை வலிமைப்படுத்தி, முடியின் பொலிவை அதிகரிக்கும்.

நரைமுடி

நரைமுடி

இந்த நேச்சுரல் ஹேர் பேக், ஆரோக்கியமான முடி செல்களின் உற்பத்தியை ஊக்குவித்து, இளமையிலேயே நரைமுடி வருவதைத் தடுக்கும்.

முடி உதிர்வது

முடி உதிர்வது

இந்த ஹேர் பேக் தலைமுடி உதிர்வதைத் தடுத்து, மயிர் கால்களுக்கு ஏராளமான சத்துக்களை வழங்கி, முடியின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் ஊக்குவிக்கும்.

பொடுகு

பொடுகு

இந்த ஹேர் பேக்கில் ஆன்டி-பாக்டீரியல் தன்மை உள்ளதால், ஸ்கால்ப்பில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும்.

எண்ணெய் பசை ஸ்கால்ப்

எண்ணெய் பசை ஸ்கால்ப்

ஸ்கால்ப்பில் எண்ணெய் சுரப்பு அதிகம் இருந்தால், இந்த நேச்சுரல் ஹேர் பேக்கைப் போட, தலையில் எண்ணெய் சுரப்பது கட்டுப்படுத்தப்பட்டு, முகத்தில் எண்ணெய் வழிவது தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

What Happens When You Apply Curry Leafs With Methi To Your Hair?

Have a look at the hair benefits of the curry leaf and methi hair pack, here.
Story first published: Monday, October 3, 2016, 11:52 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter