தலைமுடிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தலைமுடிக்கு போதிய ஊட்டத்தை வழங்கினால், மயிர் கால்கள் நன்கு வலிமையுடன் இருக்கும். அதற்கு தலைக்கு எண்ணெய் தேய்ப்பது சிறந்த வழி. தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி நல்லெண்ணெயும் மிகவும் நல்லது.

நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் கனிமச்சத்துக்களுள் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டீன் போன்றவைகளும் உள்ளன. எனவே இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், முடி நன்கு வலிமையுடனும், உறுதியாகவும் இருக்கும்.

இங்கு நல்லெண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் நல்லெண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறட்சியைத் தடுக்கும்

வறட்சியைத் தடுக்கும்

நல்லெண்ணெய் தலைமுடி வறட்சியடைவதைத் தடுக்கும். அதற்கு நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முடி வறட்சியின்றி பட்டுப்போன்று இருப்பதோடு, உடல் சூடும் தணியும்.

பாதிக்கப்பட்ட முடிக்கு புத்துயிரூட்டும்

பாதிக்கப்பட்ட முடிக்கு புத்துயிரூட்டும்

நல்லெண்ணெய் பாதிக்கப்பட்ட தலைமுடிக்கு புத்துயிர் அளிக்கும் திறன் கொண்டது. எப்படியெனில் இந்த எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யும் போது, அது தலையினுள் நுழைந்து, மயிர் கால்களுக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தலைமுடி உதிர்வைத் தடுக்கும்

தலைமுடி உதிர்வைத் தடுக்கும்

மன அழுத்தம் தான் இன்றைய தலைமுறையினருக்கு தலைமுடி உதிர காரணமாக உள்ளன. நல்லெண்ணெயில் உள்ள இதமாக்கு பண்புகள், முடி உதிர்வதைத் தடுக்கும். அதற்கு நல்லெண்ணெய் கொண்டு, தலையை மசாஜ் செய்ய வேண்டூம்.

பேன் தொல்லையைப் போக்கும்

பேன் தொல்லையைப் போக்கும்

நல்லெண்ணெய் பேன் தொல்லைக்கு நல்ல சிகிச்சையளிக்கும். ஏனெனில் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை எதிர்த்துப் போராடி, ஸ்கால்ப்பை பொடுகு மற்றும் பேன் தொல்லையில் இருந்து பாதுகாக்கும்.

தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும்

தலைமுடி வளர்ச்சியைத் தூண்டும்

நல்லெண்ணெயைக் கொண்டு வாரம் ஒருமுறை மசாஜ் செய்து வந்தால், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடியின் வளர்ச்சி மேம்படும். வேண்டுமானால் இந்த எண்ணெயை தேங்காய் எண்ணெய் போன்று தினமும் பயன்படுத்தலாம்.

நரைமுடியைத் தடுக்கும்

நரைமுடியைத் தடுக்கும்

நரைமுடி பிரச்சனை இருப்பவர்கள், நல்லெண்ணெயை தினமும் பயன்படுத்தி வர தலைமுடிக்கு கருமையை வழங்கி, நரைமுடியைத் தடுக்கும்.

பொடுகைப் போக்கும்

பொடுகைப் போக்கும்

பொடுகு தலையில் அதிகம் இருந்தால், இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்ய பொடுகு நீங்கும். அதற்கு நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு பிரச்சனை நீங்கியிருப்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Benefits Of Sesame Oil For Hair

In this article, we at Boldsky will be listing out some of the top benefits of using sesame oil for hair care. Read on to know more about it.
Story first published: Thursday, February 18, 2016, 12:20 [IST]
Subscribe Newsletter