ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

20 வயதைத் தாண்டிய ஒவ்வொரு ஆணும் வருத்தப்படும் விஷயங்களில் ஒன்று எங்கு தனக்கு வழுக்கை ஏற்படுமோ என்பது பற்றி தான். ஏனெனில் இந்த வயதுகளில் தான் பெரும்பாலான ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுகிறது.

ஆண்களுக்கு வழுக்கை ஏற்படுவதற்கு பின் ஏராளமான காரணங்கள் உள்ளன. பெண்களுக்கும் வழுக்கை ஏற்படுவது அரிது. ஆனால் இருவருக்கும் வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்கள் வேறுபடும்.

உண்மையில் பெண்களை விட ஆண்கள் தான் வழுக்கைத் தலையை எளிதில் பெறுகின்றனர். ஒருவருக்கு வழுக்கை வரப் போகிறது என்றால் தலையின் முன்புறம் மற்றும் உச்சந்தலையில் முடியின் உதிர்வு அதிகம் இருக்கும் மற்றும் முடி மெலிய ஆரம்பிக்கும்.

வழுக்கை ஏற்பட்டால் அதை சரிசெய்ய முடியாது. இருப்பினும் வழுக்கை ஏற்படாமல் இருப்பதற்கான முயற்சிகளில் ஆரம்பத்திலேயே ஈடுபட்டால், வழுக்கை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இங்கு ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கை பற்றி உங்களுக்கு தெரியாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விஷயம் #1

விஷயம் #1

வழுக்கையில் இருவகைகள் உள்ளன. அதில் பரம்பரை மரபணுக்களால் ஏற்படும் வழுக்கை மற்றும் அலோப்பேசியா என்னும் முடி இழப்பு நிலை. இதில் அலோப்பேசியாவை ஒருசில சிகிச்சைகளின் மூலம் சரிசெய்ய முடியும். ஆனால் மரப்பணுக்களால் ஏற்படும் வழுக்கைத் தலையில் என்ன சிகிச்சை செய்தாலும் பலன் இருக்காது.

விஷயம் #2

விஷயம் #2

சில நேரங்களில் வழுக்கைத் தலையானது ஆன்ரோஜென் என்னும் ஹார்மோன்களின் அதிகப்படியான உற்பத்தியால் ஏற்படும். இன்னும் சில சமயங்களில் குறிப்பிட்ட நோய்கள் அல்லது அறுவை சிகிச்சைகளின் பக்கவிளைவுகளாலும் ஏற்படும்.

விஷயம் #3

விஷயம் #3

பல நேரங்களில், ஆண்களுக்கு இருக்கும் அதிகப்படியான மன அழுத்தத்தினால் மற்றும் பாலியல் விரக்தியினால் தலை முடி உதிர ஆரம்பித்து, வழுக்கை ஏற்படும் என்பது தெரியுமா?

விஷயம் #4

விஷயம் #4

வழுக்கைத் தலையானது மரபியல் நிலையினால் ஏற்படுவது. அதிகளவில் புகைப்பிடிப்பதாலும் வழுக்கை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆய்வுகளும் கூறுகின்றன. ஏனெனில் சிகரெட்டானது உடலில் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்துமாம்.

விஷயம் #5

விஷயம் #5

ஒருவருக்கு வழுக்கை விழுந்துவிட்டால், அதனை சரிசெய்ய முடியாது. இருப்பினும், தலைமுடி உதிர ஆரம்பிக்கும் போதோ அல்லது உங்கள் வீட்டில் யாருக்கேனும் வழுக்கை இருந்தாலோ, ஆரம்பத்தில் இருந்தே ஆரோக்கியமான டயட் மற்றும் அன்றாட உடற்பயிற்சியை மேற்கொண்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தால், வழுக்கை விழுவதைத் தடுக்கலாம்.

விஷயம் #6

விஷயம் #6

பல நேரங்களில், வழுக்கை தலையானது ஆண்களுக்கு மன இறுக்கம் மற்றும் பதற்றத்தை அதிகரித்து, தன்னம்பிக்கையைக் குறைக்கும். இம்மாதிரியான தருணங்களில் நல்ல நிபுணரை அணுகி அவரது உதவியை நாட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Things You Did Not Know About Hair Loss In Men

Do you want to know some interesting facts about male pattern baldness, then read on more..
Story first published: Friday, August 26, 2016, 11:16 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter