ஒரே இரவில் மென்மையான தலைமுடியைப் பெற வேண்டுமா? அப்ப இத படிங்க...

Posted By:
Subscribe to Boldsky

குளிர்காலம் என்பதால் தலைமுடி அதிகம் வறட்சியடையும். வறட்சியான தலைமுடி மோசமான தோற்றத்தைக் கொடுக்கும். எனவே பலரும் தலைக்கு குளித்த பின் கண்டிஷனர்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் கண்டிஷனர்களில் கெமிக்கல்கள் இருப்பதால், இதைப் பயன்படுத்த பலரும் அஞ்சுவார்கள்.

Homemade Overnight Treatment For Soft Hair

ஆனால் இயற்கை வழிகளின் மூலம் தலைமுடியின் மென்மைத்தன்மையை அதிகரிக்க நினைத்தால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. மேலும் தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். இங்கு ஒரே இரவில் தலைமுடியின் மென்மைத்தன்மையை அதிகரிக்கும் ஹேர் மாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து தான் பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் - 1 கப்

அர்கன் ஆயில் - சில டேபிள் ஸ்பூன்

ஸ்டெப் #1

ஸ்டெப் #1

முதலில் ஒரு பௌலில் தேங்காய் பால் மற்றும் அர்கன் ஆயிலை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2

ஸ்டெப் #2

பின் இரவில் படுக்கும் முன், அதை தலைமுடியில் நன்கு படும்படி, முடியின் முனை வரை தடவ வேண்டும்.

ஸ்டெப் #3

ஸ்டெப் #3

பின் ஷவர் கேப் கொண்டு தலையை கவர் செய்ய வேண்டும். வேண்டுமானால் 1 மணிநேரம் கழித்து தலைமுடியை ஷாம்பு பயன்படுத்தி அலசலாம். இல்லாவிட்டால், இரவு முழுவதும் ஊற வைக்கலாம்.

ஸ்டெப் #4

ஸ்டெப் #4

பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலச வேண்டும். இப்படி ஒருமுறை செய்தாலே, முடியின் மென்மைத்தன்மையில் மாற்றத்தைக் காணலாம். இந்த ஹேர் மாஸ்க்கை சுருட்டை முடி கொண்டவர்கள், வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade Overnight Treatment For Soft Hair

Here is a homemade overnight treatment for soft hair that you must try out for sure!
Story first published: Monday, December 26, 2016, 18:19 [IST]
Subscribe Newsletter