Latest Updates
-
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நரை முடியை வளரவிடாமல் செய்யும் மூலிகை எண்ணெய் - பாட்டி சொன்ன வைத்தியம்!!
கூந்தல் அடர்த்தியாகவும் கருமையாகவும் இருப்பது இந்த காலத்தில் சாத்தியமில்லை. உபயோகப்படுத்தும் ரசாயன அழகு சாதனங்களே காரணம். நரை முடியை தடுக்கும் ஒரு ஹெர்பல் எண்ணெய் பற்றி இங்கே படியுங்கள்
நீங்கள் பாத்திருக்கலாம். இப்போதும் நமது பாட்டிகளுக்கு கூந்தல் கருப்பாகவும், நீளமாகவும் இருக்கும். இதற்கு காரணம் அவர்கள் எண்ணெய் உபயோகப்படுத்தியதே. ஆனால் நாம் தோற்றத்திற்கு நன்றாக இல்லை என்று எண்ணெய் வைக்கும் பழக்கத்தை மறந்துவிட்டோம்.

கூந்தல் வளர எண்ணெய் மிகவும் முக்கிய இடம் பெற்றுள்ளது. இவை சருமத்தால் ஊடுருவி கூந்தலின் செல்களுக்கு ஊட்டம் அளித்து நன்றாக வளர்ச் செய்யும். அப்படி உங்கல் கூந்தலை கருகருவென வளர்க்கவும் நரை முடி விரவில் தோன்றாமலும் இருக்க ஒரு பாட்டி சொன்ன வைத்தியம் இது.

தேவையானவை :
சுத்தமான தேங்காய் எண்ணெய் - 2 கப் அளவு
நெல்லிக்காய் பெரியது - 4
மருதாணி இலை - கைப்பிடி அளவு
கருவேப்பிலை- 1 கப் அளவு
செம்பருத்தி இதழ்கள் - 2 பூக்கள்
சீரகம் - 4 ஸ்பூன்
கிராம்பு - 3

செய்முறை :
முதலில் நெல்லிக்காயை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். மருதாணி மற்றும் கருவேப்பிலையையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.

செய்முறை :
செம்பருத்தி இதழை பிரித்து நன்றாக தண்ணீரில் அதன் மேலுள்ள மருந்துகள் போகும் வரை அலசிக்க் கொள்ளுங்கள்.

செய்முறை :
சீரகம் கிராம்பையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை :
முதலில் எண்ணெயை சூடாக வேண்டும். அதில் நெல்லிக்காய், மருதாணி கருவேப்பிலை ஒன்றன்பினொன்றாக போடவும். அதன் நிறம் மாறி அடியில் தங்கும் வரை குறைந்த தீயில் கொதிக்க வையுங்கள்.

செய்முறை :
அதன்பின்னர் செம்பருத்தி இதழ்களை போடவும். அதன் நிறம் பழுப்பாக மாறும். உடனே சீரகம், கிராம்பையும் போட்டு ஒரு நிமிடம் குறைந்த தீயில் வையுங்கள். பின்னர் இறக்கி ஆறவிடவும்.

செய்முறை :
ஆறிய பின் ஒரு சுத்தமான துணியினால் வடிக்கட்டி அந்த எண்ணெயை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

செய்முறை :
இதனை வாரம் 3 அல்லது 4 நாட்கள் உபயோகிக்கலாம். பிறகு நரைமுடி, முடி உதிர்தல் , பாதிப்பில்லாமல் முடி அடர்த்தியாகவும் வளரும்.



Click it and Unblock the Notifications
