For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமுடி பிரச்சனைகளைப் போக்க வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?

By Maha
|

மிகுந்த மருத்துவ குணமிக்க செடிகளில் ஒன்று தான் வேப்பிலை. வேப்பிலையில் அடங்கியுள்ள சக்தி வாய்ந்த பொருட்கள், உடல், சருமம் மற்றும் தலைமுடியில் ஏற்படும் எந்த வகையான பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வைத் தரும்.

குறிப்பாக தற்போது பலரும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்பதால், வேப்பிலையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்றும், அப்படி பயன்படுத்தினால் பெறும் நன்மைகள் என்னவென்றும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பொடுகைப் போக்கும்

பொடுகைப் போக்கும்

பொடுகுத் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள், வேப்பிலை எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வந்தால், பொடுகை அடியோடு விரட்டலாம்.

பட்டுப் போன்ற முடி

பட்டுப் போன்ற முடி

உங்கள் முடி பொலிவிழந்து உள்ளதா? அப்படியெனில் அதனை வேப்பிலை நீரைக் கொண்டு மாதத்திற்கு இரண்டு முறை அலசி வந்தால், உங்கள் முடி பொலிவோடும், பட்டுப் போன்றும் இருக்கும்.

முடி வளர்ச்சி

முடி வளர்ச்சி

வேப்பிலை முடியின் வளர்ச்சியைத் தூண்டி, முடி உதிர்வதைக் குறைக்கும். அதற்கு வாரம் ஒருமுறை வேப்பிலை எண்ணெயை தலைக்கு தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து குளிக்க வேண்டும். முக்கியமாக வேப்பிலை எண்ணெய் வழுக்கையான பகுதியிலும் முடியை வளரச் செய்யும்.

ஸ்கால்ப் நோய்த்தொற்று

ஸ்கால்ப் நோய்த்தொற்று

ஸ்கால்ப்பில் ஏதேனும் நோய்தொற்றுகள் இருந்தால், அதனை வேப்பிலையைக் கொண்டு விரைவில் போக்கலாம். அதற்கு வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.

அரிக்கும் தலை

அரிக்கும் தலை

உங்களுக்கு தலையில் தாங்க முடியாத அளவில் அரிப்பு ஏற்படுகிறதா? அப்படியெனில் வேப்பிலை நீரைக் கொண்டு தலையை அலசுங்கள். இதனால் தலையில் ஏற்படும் அரிப்பு உடனே அடங்கும்.

வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்

வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் 3 டேபிள் ஸ்பூன் வேப்பிலை எண்ணெயை சேர்த்து கலந்து, வெதுவெதுப்பான நிலைக்கு வந்ததும், அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் நன்கு படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச, பொடுகுத் தொல்லை, அரிக்கும் உச்சந்தலை போன்றவை அடங்கும்.

வேப்பிலை பேஸ்ட்

வேப்பிலை பேஸ்ட்

ஒரு கையளவு வேப்பிலையை எடுத்துக் கொண்டு, நீரில் பேட்டு நன்கு கொதிக்க வைத்து, பின் அந்த வேப்பிலைகளை எடுத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி, பல்வேறு முடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

முட்டை மற்றும் வேப்பிலை

முட்டை மற்றும் வேப்பிலை

முட்டையின் வெள்ளைக்கருவுடன் வேப்பிலை பேஸ்ட்டை சேர்த்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து அலச, முடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைப்பதோடு, தலையில் ஏற்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

வேப்பிலை தண்ணீர்

வேப்பிலை தண்ணீர்

ஒரு கையளவு வேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க விட்டு, நீரை வடிகட்டி, அந்த நீரைக் கொண்டு தலைக்கு குளிக்கும் போதெல்லாம் அலசி வந்தால், தலையில் பொடுகு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்.

வேப்பிலை பொடி

வேப்பிலை பொடி

வேப்பிலையில் வெயிலில் உலர்த்தி, பின் அதனை பொடி செய்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். பின் தேவைப்படும் போது, அதனை எடுத்து, நீர் கலந்து, தலைக்கு தடவி ஊற வைத்து குளிர்த்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Is Neem Important For Your Hair?

Here is why neem is important for hair growth and the scalp. Take a look at the many benefits of this green leaf and learn how to apply this natures plant.
Desktop Bottom Promotion