முடி கொட்டும் பிரச்சனைக்கான சில சித்த மருத்துவ சிகிச்சைகள்...!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய சமுதாயத்தில் ஆண்கள் கவலைக் கொள்ளும் விஷயங்களில் ஒன்று முடி. அதிலும் இளம் தலைமுறையினர் தான் இப்பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். இப்படி முடி அதிகம் கொட்டி, பல ஆண்களுக்கு வழுக்கையே ஏற்பட்டுவிட்டது. திருமணத்திற்கு முன்னரே வழுக்கை ஏற்படுவதால், பல ஆண்கள் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர்.

முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது?

முடி கொட்டும் பிரச்சனைக்கு கடைகளில் விற்கப்படும் எத்தனையோ மூலிகை எண்ணெய்களைப் பயன்படுத்தியும் பலன் கிடைக்காமல் இருந்தால், சித்த வைத்தியத்தை பின்பற்றிப் பாருங்கள். இதனால் நிச்சயம் முடி கொட்டுவதைத் தவிர்ப்பதோடு, முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். சரி, இப்போது முடி கொட்டும் பிரச்சனைக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை கொட்டைகள்

எலுமிச்சை கொட்டைகள்

எலுமிச்சை கொட்டைகள் 5, மிளகு 5 எடுத்துக் கொண்டு நல்லெண்ணெய் சேர்த்து பேஸ்ட் செய்து தலைச்சருமத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, சீகைக்காய் போட்டு தலையை அலச வேண்டும்.

வேப்பிலை

வேப்பிலை

1 டம்ளர் நீரில் 5 வேப்பிலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து, அதில் பாதியைக் குடித்துவிட்டு, மீதியை தலையில் ஊற்றி, நன்கு மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் கழித்து சீகைக்காய் பயன்படுத்தி அலசவும்.

கொத்தமல்லி

கொத்தமல்லி

கொத்தமல்லியை அரைத்து சாறு எடுத்து , தலையில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும்.

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்

நெல்லிக்காயை உலர்த்தி, செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி, தினமும் தலைக்கு தடவி வர, முடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையைத் தூக்கி எறியாமல், அதை சாப்பிடுங்கள்.

உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம்

உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம்

உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் தேய்த்து அலச வேண்டும்.

செம்பருத்தி இலை மற்றும் பூ

செம்பருத்தி இலை மற்றும் பூ

செம்பருத்தி இலை மற்றும் பூவை அரைத்து, வாரம் இரண்டு முறை தலைக்கு தடவி தேய்த்து குளித்து வந்தால், மயிர்கால்கள் வலிமையடைந்து, முடி கொட்டுவது குறையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple Siddha Treatment For Hair Fall

Here are some of the siddha treatment for hair fall. Take a look...