For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போர் நீரில் தலைக்கு குளித்து முடி கொட்டுதா? அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்...

By Maha
|

போர் நீரில் கனிமச்சத்துக்களான கால்சியம், மக்னீசியம், காப்பர், இரும்புச்சத்து போன்றவை அதிகம் இருப்பதால், இந்நீரால் முடியை அலசினால் மயிர்கால்கள் வலிமையிழந்து முடி கொட்ட ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சிலருக்கு முடி பொலிவிழந்து, அதிக சிக்குடனும் விரைவில் நரைமுடி வரவும் வழிவகுக்கும்.

தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதால் ஏற்படும் தீய விளைவுகள்!!!

ஆனால் இந்த பிரச்சனைகளைப் போக்க ஒருசில வழிகள் உள்ளன. அது என்னவெனில் போர் நீரில் தலைக்கு குளிக்க செல்லும் முன் ஒருசில இயற்கைப் பொருட்களைக் கொண்டு தலையை மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால், முடி உதிர்வதைத் தடுப்பதாடு, முடி பொலிவோடும், பட்டுப்போன்றும் இருக்கும்.

அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லதா?

சரி, இப்போது போர் நீரினால் முடிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மேற்கொள்ள வேண்டியவைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் ஸ்கால்ப்பின் pH அளவை சீராக பராமரிப்பதோடு, ஸ்காப்பை போர் நீரில் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். அதற்கு 3 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை 1/2 பக்கெட் நீரில் கலந்து கொள்ள வேண்டும். ஷாம்பு போட்ட பின்னர், ஆப்பிள் சீடர் வினிகர் கலந்த நீரினால் முடியை அலசுங்கள். இதனால் முடி கொட்டுவதைத் தவிர்க்கலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

போர் நீரில் தாக்கத்தில் இருந்து முடியை பாதுகாக்க, தேங்காய் எண்ணெய் உதவும். அதற்கு குளிக்கும் முன், தேங்காய் எண்ணெயால் நன்கு தலையை மசாஜ் செய்து கொண்டு, பின் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி செய்தால், தலைக்கு குளித்த பின் முடி வறட்சியின்றி, ஆரோக்கியமாக காணப்படும்.

முட்டை மற்றும் தயிர்

முட்டை மற்றும் தயிர்

போர் நீரில் தலைக்கு குளிப்பதாக இருந்தால், கண்டிஷனர் பயன்படுத்த மறக்க வேண்டாம். அதற்காக கெமிக்கல் கலந்த கண்டிஷனரைப் பயன்படுத்தாதீர்கள். மாறாக ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி 1 மணிநேரம் ஊற வைத்து பின் குளியுங்கள்.

மயோனைஸ்

மயோனைஸ்

போர் நீரினால் பாதிக்கப்பட்ட முடியை புதுப்பிக்க வேண்டுமெனில், மயோனைஸை தலையில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து அலசுங்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை

ஷாம்பு போட்டு போர் நீரில் முடியை அலசிய பின், எலுமிச்சை நீரினால் முடியை அலசுங்கள். இதனால் பொலிவிழந்து காணப்பட்ட முடி பொலிவாகும். மேலும் எலுமிச்சை பொடுகுத் தொல்லையை நீக்கி, முடியில் நல்ல நறுமணத்தைக் கொடுக்கும்.

அவகேடோ பேக்

அவகேடோ பேக்

நன்கு கனிந்த அவகேடோ பழத்தை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1/2 கப் பால் சேர்த்து கலந்து, தலையில் நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளித்தால் போர் நீரில் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

கிளிசரின், எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர்

கிளிசரின், எலுமிச்சை மற்றும் ரோஸ் வாட்டர்

கிளிசரின் முடி வறட்சியடைவதைத் தடுக்கும். மேலும் காற்றில் உள்ள ஈரப்பசையை முடி உறிஞ்ச உதவும். அதற்கு 2 டேபிள் ஸ்பூன் கிளிசரின் உடன், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலந்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Care Tips After Hard Water Wash

You can protect your hair from the harmful effects of hard water. There are some best natural remedies to protect and repair your hair. Have a look at some natural tips to treat your hair after a hard water damage. These tips can also offer protection to your hair.
Desktop Bottom Promotion